நாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் தரம்-11 இல் கல்வி கற்றுவரும் மாணவியான அக்சயா தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும்
ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம்.24.04.2026 வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. சிரித்த முகத்துடன் எப்போதும் நண்பர்களுடன் கலகலப்பாகப் பழகும் குணம் கொண்ட அக்சயா கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தயாராகி வந்த நிலையில் திடீரென தவறான முடிவெடுத்து உயிரிழந்தமை குடும்பத்தினர், நண்பர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரையும் ஆழ்ந்த சோகத்தில்
ஆழ்த்தியுள்ளது.
தயவு செய்து நீங்கள் எடுக்கும் முடிவு உங்களை சுற்றி உள்ள உறவுகளை எந்தளவு பாதிக்கும் என்று கொஞ்சமாவது யோசிச்சி பாருங்கள் உங்களுக்காக அவர்கள் எவ்வளவு எல்லாம்,கஷ்டபட்டு
இருப்பார்கள்.
என்ன பிரச்சனையாக இருந்தாலும் குடும்பத்திடம் மனசு விட்டு பேசுங்கள் அவர்கள் உங்கள் உறவுகள் தானே அவர்கள் பார்த்து கொள்வார்கள் பெற்றோர்களே நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு
நம்பிக்கையை கொடுங்கள்.
அப்போது தான் அவர்களும் உங்களிடம் வெளிப்படையாக இருப்பார்கள் . எந்தவொரு பிரச்சினைகளுக்கும் தற்கொலை தீர்வாகாது.
என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக