siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

மனைவிக்கும் மகனுக்கும் எமனான தந்தை

 வன் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியபோது மோட்டார் சைக்கிள் பாதையை விட்டு ஆற்றில் பாய்ந்ததால் இரண்டரை வயது ஆண் குழந்தையும் மனைவியும் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று இரவு 7.30 அளவில் அரகங்வில பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளை செலுத்திய கணவர் அதிகமான போதையில் இருந்துள்ளார். கட்டுப்படுத்த முடியாத நிலையில் பாதையின் அருகிலுள்ள ஆற்றில் பாய்ந்து நீரில் மூழ்கியுள்ளது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த...

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

கோக்கோ கோலா' 127 ஆண்டுகால தயாரிப்பு ரகசியத்தை பெட்டகத்தில் வைத்து

18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தலைவலிக்காக நிவாரணம் தேடி மருந்துக் கடைகளுக்கு வந்தவர்களுக்கு கடைக்காரர்கள் ஒரு ரகசிய பொருளை தண்ணீரில் கரைத்து தந்தனர். இதை சாப்பிட்ட பலருக்கு உடனடியாக தலைவலி பறந்தே போனது. அந்த 'ரகசிய மருந்து' தான் நாளடைவில் போத்தல்களில் அடைக்கப்பட்டு 'கோக்கோ கோலா' என்ற வணிகப் பெயருடன் உலக நாடுகளில் உள்ள விற்பனை கூடங்களில் பிரபலமடைந்தது. அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கோக்கோ கோலாவின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்குள்ள ஒரு பாதுகாப்பு...

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

இதுவரை இலங்கையர்கள் 720 0பேர் நாடுகடத்தல்

  சட்டவிரோத இலங்கைப் பணியாளர்கள் 7200 பேர் இதுவரையில் சவுதி அரேபியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பணியாளர்களை திருப்பி அனுப்புவதற்கான பொது மன்னிப்புக் காலத்தினை சவுதி அரசாங்கம் வழங்கியிருந்தது. எனவே இக் காலப்பகுதியினை பயன்படுத்தி இலங்கையைச் சேர்ந்த 7 ஆயிரத்து 200 சட்டவிரோத பணியாளர்கள் நாடு திரும்பியுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது. இதேவேளை...

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

இரு வாரங்களில்மரணமான பெண் உயிருடன் வந்த

அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரைச் சேர்ந்த ஷரோலின் ஜாக்சன் (50), என்ற பெண் கடந்த மாதம் திடீரென காணாமல் போனார்.அவர் காணாமல் போனது குறித்து ஷரோலினின் தாயார் கேர்ரி மின்னி பொலிஸில் புகார் அளித்தார். புகார் அளிக்கப்பட்டு சில நாட்கள் கழிந்த நிலையில் பிலடெல்பியா பகுதியின் சாலையோரம் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் வந்தது. அந்த பெண்ணின் உடலை அருகிலுள்ள வைத்தியசாலையின் பிணவறையில் வைத்திருந்த பொலிஸார் இதுபற்றி ஊடகங்களில் விளம்பரம்...

சனி, 24 ஆகஸ்ட், 2013

அச்சுவேலியில்முஸ்லிம் பெண்ணைப்போல் வேடமணிந்து கொள்ளையிட்ட இராணுவம் -

இராணுவ பொது சேவை படையணியை சேர்ந்த கப்டனான ஏ.எம்.யூ. சமரகோன் என்பவரே இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். பொலிஸார் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பாதிவு செய்துள்ள நிலையில், இராணுவ அதிகாரி ஒருவருக்கு எதிராக முதன் முறையாக இராணுவ நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிவில் சமூகத்தில் குற்றங்களை செய்யும் இராணுவத்தினருக்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் அவர்களை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் எனவும் இராணுவத தளபதி தயா ரத்நாயக்க , இராணுவத்தின்...

புதன், 21 ஆகஸ்ட், 2013

ஆப்பிளை விட சக்தி வாய்ந்த ஸ்ட்ராபெர்ரி!

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.ஏனெனில் ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்துள்ளது. ஆனால் ஆப்பிளின் சக்தியையே ஸ்ட்ராபெர்ரி பழம் மிஞ்சும் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இப்பழம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதுடன், சர்க்கரை நோய், புற்று நோயை தடுக்கும் திறன் படைத்தது. அத்துடன் எல்லாவிதமான நோய்களையும் தடுக்கும் பிலேவனாய்டு என்ற பொருள் இப்பழத்தில் உள்ளது. மேலும்...

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

வெடித்துச் சிதறியது ஜப்பானிய எரிமலை! -

5000 மீற்றர் உயரத்துக்கு சாம்பலைக் கக்கியது. ஜப்பானின் ககோஷிமா நகர் அருகே உள்ள 1117 மீற்றர் உயரமுடைய சகுரஜிமா எரிமலை நேற்று வெடித்து சிதறியது. சுமார் 5,000 மீற்றர் தூரத்திற்கு மேலே சாம்பலை கக்கியது.எரிமலை சாம்பல் அந்த நகரின் பெரும்பாலான பகுதியில் பறந்ததால் ரயில், பஸ் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் விளக்குகளை ‌போட்டுதான் செல்ல முடிந்த...

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

கப்பல் வெடிப்பிற்கு பாதுகாப்பு விதிமுறை மீறல் காரணம்: ரஷ்யா

மும்பையில் கடந்த புதன்கிழமையன்று அதிகாலை ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்தியக்கப்பற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறி கடலில் மூழ்கியது.இந்த விபத்தில் தமிழக வீரர் வெங்கட்ராஜூ உள்பட 18 பேர் இறந்திருப்பதாக அஞ்சப்படுகிறது. இந்த கப்பலானது ரஷ்யாவில் பழுதுபார்த்து புதுப்பிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 29-ம் தேதியன்று இந்தியா வந்ததாகும். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து ரஷ்ய துணை பிரதம மந்திரி டிமிட்ரி ரோகோசின், ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்....

சனி, 17 ஆகஸ்ட், 2013

மறைத்து இரத்தினக் கற்களை கடத்திய??

    ஆசன வாயிலில் மறைத்து இரத்தினக் கற்களை கடத்திய இலங்கையர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது- தங்கம் கடத்திய இருவர் இந்தியாவில் கைது ஆசன வாயிலில், 80 லட்ச ரூபா பெறுமதியான இரத்தினக் கற்களை கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் வந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு இரத்தினக் கற்களை கடத்தியுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளனர். பேருவளையைச் சேர்ந்த 56 வயதான நபரே இவ்வாறு...

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

கடும் நிலநடுக்கம்! - ரயில், விமானப் ரத்து.

நியூசிலாந்து தலைநகர் வெலிங்டன் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் ஆரம்பக்கட்டத்தில் 6.8 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். வேலைக்குச் சென்று கொண்டிருந்த தொழிலாளர்கள் பலர் வீதியில் நின்றுவிட்டனர்.நியூசிலாந்தின் தெற்குத் தீவின் வடக்கு முனைப் பகுதியில் 10 கி.மீ. ஆழத்தில் 6.0 என்ற அளவில் முதலில் நிலநடுக்கம் பதிவானது. இதன் மூலம் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக கணிக்க முடியவில்லை என்று அந்நாட்டின் தீயணைப்பு...

இள வயது திருமணங்கள் அதிகரிப்பு -

இலங்கையில் இள வயதில் திருமணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாக ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதிய (யுனிசெப்) நிபுணர் குழு அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இள வயது திருமணங்கள் நடைபெறுவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வழி வகைகள் குறித்த சிறந்த புரிந்துணர்வை எட்டும் வகையில் ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதியம் (யுனிசெப்) தரம் தழுவிய விசாரணையொன்றை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்கென குழுவொன்றை நியமித்திருந்தது. இலங்கையில் குறிப்பாக...

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

விமானத்தை விட வேகமான வாகனம்: அமெரிக்காவில் புதிய ,,

போக்குவரத்து முறைகள் காலத்துக்கேற்ப மாற்றம் கண்டு வரும் நிலையில் எதிர்காலத்தில் எத்தகைய போக்குவரத்து முறைகள் எப்படி இருக்கும் என்பதற்கான அடையாளங்களும் இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டது.அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் (Elon Musk), ஹைபர் லூப் (Hyperloop) என்ற பெயரில் புதிய போக்குவரத்து முறை குறித்த செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். ரயிலை போன்றே தோற்றம் கொண்ட இந்த வாகனம் ஒலியை விட வேகமாக பறக்கும் கன்கார்டு விமானத்தின்...

புதன், 14 ஆகஸ்ட், 2013

விடுமுறையில் உச்சப் பாதுகாப்பு!!

தனது விடுமுறை வாசஸ்தலமான villa du Cap Nègre (Var) இற்கு விடுமுறைக்குச் சென்றுள்ள முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி நிக்சோலா சார்க்கோசிக்கு அதி உச்சப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உயர் பிரபலங்களின் பாதுகாப்புச் சேவையான (Service de protection des hautes personnalités) SPHP யின் சிறப்புப் படையினர் பத்துப் பேரும் 15 குடியரசுப் பாதகாப்புப் படை வீரர்களும் (CRS) ஓகஸ்ட் மாதம் முதல் நிக்சோலா சார்க்கோசிக்குச் சிறப்புப் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். இதை உறுதி...

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

நீரில் நச்சுத்தன்மை காணப்பட்டமை கண்டு பிடிப்பு

வெலிவேரிய நீரில் நச்சுத்தன்மை காணப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வெலிவேரிய தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள நீர் மற்றும் மண்ணில் நச்சுப் பதார்த்தம் உள்ளடங்கியிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டள்ளது. பூவியியல் மற்றும் கனிமவள ஆய்வு மையத்தினால் குறித்த பிரதேச நீர் மற்றும் மண் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த நீர் மற்றும் மண் வகைகளில் ஒரு வகை நச்சுப் பதார்த்தம் காணப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலையை அண்டிய 25 சதுர கிலோ மீற்றர்...

நிதானமின்றி வீதியில் நின்ற கனடா மேயர்

கனடாவின் ரொறான்ரோ நகரின் மேயர் Rob Ford குடித்து விட்டு நிதானமின்றி வீதியில் செல்வது பாதசாரி ஒருவரால் வீடியோ படம் எடுக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு Taste of Danforth என்கின்ற வீதி நிகழ்வுக்கு சென்றிருந்த மேயர் அங்கே நன்கு குடித்துவிட்டு வீதியால் செல்லுவோருடன் புகைப்படங்கள் எடுத்தும், தான் வண்டி ஓட்டவில்லை என்றும் சொல்லுவது, வேறு பல விடயங்களை முணுமுணுப்பதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. இன்னுமொரு வீடியோவில் மேயர் கோப்பியினை குடித்தவண்ணம் (பெரும்பாலும்...

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

34 பேர் கைது வெளிநாட்டுக்கு செல்லவிருந்த

வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக செல்லும் நோக்கில் இருந்ததாக கூறப்படும் 34 பேர் ராகம - தெல்பே - குருகுலாவ பகுதியில், ஹோட்டலொன்றில் தங்கியிருந்தபோது நேற்றிரவு மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 3 பெண்களும், 21 ஆண்களும் 4 சிறுவர்களும் 6 சிறுமிகளும் உள்ளடங்குவதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் யாழ்ப்பாணம் பிரதேசததை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களை...

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

புருவ பராமரிப்பில் செய்யக் கூடாதவை

பொதுவாக பல ஆண்கள் முகத்தை சீர் செய்யும் போது புருவத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.முக அலங்காரம் மற்றும் முக பராமரிப்பு என்று வந்தால், ஆண்கள் புருவத்தை கணக்கிலேயே எடுத்துக் கொள்வதில்லை. அதற்கு காரணம் நம்முடைய சமுதாயத்தில் பெரும்பாலான ஆண்கள் தங்களின் நேரத்தை சலூனில் செலவிட விரும்புவதில்லை. சொல்லப்போனால், புருவ பராமரிப்பு என்பதை மெட்ரோ செக்ஷுவல் வகை ஆடவர் மட்டுமே விரும்புவார்கள். அப்படிப்பட்ட ஆண்கள் ஆடை அலங்காரம், மேக்-கப் மற்றும் முக...