இலங்கை சென்ற நிலையில் நீர்தேக்கத்தில் விழுந்து வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நோட்டன் பிரிஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்ஷ்பான நீர்தேக்கத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று பகல் 2 மணியளவில் குறித்த நபர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியாவை சேர்ந்த 29 வயதுடைய OLDIPUPO EYIPEMI OSHUNNIYA என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனது வெளிநாட்டு நண்பர்களுடன் நேற்று மதியம் லக்ஷ்பான பகுதியில் நீராட சென்ற போதே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.
சடலம் திக்ஒய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் நோட்டன் பிரிஜ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக