யாழ் நவற்கிரி புத்தூர் மேற்கு நிலாவரைப் பகுதியில் சிறுவனொருவன்
கைக்குண்டொன்றை எடுத்து விளையாடியதில் அது வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்தச் சம்பவம் இன்று 09,04,2019,செவ்வாய்க்கிழமை(09)பிற்பகல்
நடைபெற்றுள்ளது
இந்தச் சிறுவன் தோட்டத்திற்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வெற்றுக் காணியொன்றிலிருந்து கைக்குண்டொன்றை எடுத்து அதனை ஏதோ விளையாட்டுப் பொருள் என நினைத்து வீதியில் எறிந்து
விளையாடியுள்ளான்.
இதன்போது குறித்த கைக்குண்டு வெடித்தது. சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுப் பின் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேற்படி சம்பவத்தையடுத்து அப்பகுதியில் அச்சுவேலிப் பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பாக பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் இணைந்து தீவிர விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக