ஒரு தொகை வெளிநாட்டு சிகரட்களை டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கையர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது
செய்யப்பட்டுள்ளார்.
அவர்களில் ஒருவர் வேவல்தெனிய பகுதியை சேர்ந்த 27 வயதுடைய பெண் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணிடம் இருந்து 43,480 சிகரட்டுக்கள்
கைப்பற்றப்பட்டுள்ளது.
அடுத்த நபர் மாத்தறை பகுதியை சேர்ந்த 25 வயதுடையவர் எனவும் அவரிடம் இருந்து 39,900 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இருவரிடம் இருந்து 83,380 சிகரட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி சுமார் 4,169,000 ரூபாய் என்று சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக