யாழ்ப்பாணம், மண்டைதீவு உட்பட வடக்கில் படையினரின் தேவைக்காக சுவீகரிக்கத் திட்டமிட்ட நிலங்கள் தொடர்பில் எதிர்வரும் 29ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலர் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் சந்திப்பொன்று
இடம்பெறவுள்ளது.
மண்டைதீவில் நேற்றையதினம் இடம்பெற்ற காணி அளவீட்டு முயற்சி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் பாதுகாப்பு அமைச்சின் செயலரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதன்போது மண்டைதீவு உட்பட யாழ்ப்பாணத்தில் மட்டும் 45 இடங்களில் படையினருக்கு நிலம் சுவீகரிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து இரா.சம்பந்தன் பாதுகாப்புச் செயலரின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். இதையடுத்தே எதிர்வரும் 29ஆம் திகதி இந்தச் சந்திப்பு
இடம்பெறவுள்ளது.
இந்தச் சந்திப்பு இடம்பெறும் வரையில், அதாவது எதிர்வரும் 29ஆம் திகதி வரை வடக்கில் காணி சுவீகரிப்பு எதுவும் இடம்பெறக்கூடாது என்று சம்பந்தனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை பாதுகாப்பு அமைச்சின்
செயலரால் ஏற்கப்பட்டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக