எதிர்வரும் 29ம் திகதி ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள், மே மாதம் 6ம் திகதி வரையில் பிற்போடப்பட்டுள்ளன.அத்துடன் அனைத்து பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் மே மாதம் 6ம்
திகதி மீள ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.ஜனாதிபதி தலைமையில் நேற்று கூடிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் வைத்து, இதுவரையில்
பாரிய அளவான வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளமை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான பலர் கைதாகியுள்ளமை குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.அத்துடன் இந்த முறை தொழிலாளர் தின நிகழ்வுகளை நடத்தாதிருக்க அனைத்து தரப்பிடமும் கோருவதற்கும் தேசிய பாதுகாப்பு சபையில்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரச நிறுவனங்கள், முக்கிய சுற்றுலா விருந்தகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடுகின்ற இடங்களில் பாதுகாப்பினை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக