இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
மாவனெல்ல- தெவனகல்ல பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் 4 பேர், காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் அவர்களை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இரத்தினபுரியில் நேற்று ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு காணாமல்போன பாடசாலை மாணவியொருவர் சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ள ஏனையவரை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு இருந்தமை
குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, கேகாலை அல்கம பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஒருவர் உயிரழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ். விஜயசூரிய தெரிவித்துள்ளார். அனர்த்தம் குறித்து குறித்த நபருக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டு அவரை வீட்டில் இருந்து வௌியேற கூறியிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
களுகங்கையின் தாழ் நிலப் பகுதிகளுக்கு வௌ்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹொரணை, அகலவத்தை, இங்கிரிய, பலிந்த நுவர, புளத்சிங்கள, தோதங்கொடை, மில்லெனிய, மதுரவல ஆகிய பகுதிகளுக்கு வௌ்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக