கம்பளை, புஸ்ஸல்லாவ பிரதேசத்தில், பிறந்து 8 நாட்களேயான ஆண் குழந்தையொன்று கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (9) உறுதிசெய்யப்பட்ட 67 கொவிட் மரணங்களுள் இக்குழந்தையின் மரணமும் உள்ளடங்கியுள்ளதாக அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டதன் பின்னர், அக்குழந்தைக்குத் தீவிரமாகக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனால், குழந்தை மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கம்பளை ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கடந்த மே 27 ஆம் திகதி இக்குழந்தை கம்பளை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்ததாகவும், உயிரிழப்புக்கான காரணம் கொவிட் நியூமோனியா நிலைமை என அடையாளம் காணப்பட்டதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக