இலங்கையில் ஒரு கிலோ கிராம் அரிசியில் விலை 500 ரூபாயை விடவும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என பிரதமர் மகிந்த ராஜபக்சவின் குடும்ப உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச (Shashindra Rajapaksa) தெரிவித்துள்ளார்.நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், முன்னதாக ஒரு தொன் யூரியா 278 அமெரிக்க டொலர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஒரு டன் யூரியாவின்
விலை 1282 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
அந்த விலையில் யூரியாவை கொண்டு வந்து விவசாயம் செய்தால் ஒரு கிலோ அரிசி 500 ரூபாயை தாண்டும் என்றும் அவர்
மேலும் தெரிவித்துள்ளார்.
09-2021.அன்று இலங்கையில் 25 கிலோ யூரியா மூட்டை ஒன்று 9000 ரூபாய்க்கு மேலாக விற்பனை செய்யப்படுகிறது எனவும் அவர் இதன் போது
சுட்டிக்காட்டியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக