siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 21 டிசம்பர், 2021

அன்பு மனைவிக்கு யூடியூப் உதவியுடன் பிரசவம் பார்த்த கணவர்

தமிழ்நாட்டின், ராணிப்பேட்டை மாவட்டம், நெடும்புலி கிராமத்தில் யூடியூப் பார்த்து மனைவிக்குப் பிரசவம் பார்த்த கணவர் உள்ளிட்ட இருவரை தேடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.மேற்படி பகுதியைச் சேர்ந்த 32 வயதான நபரொருவரே 28 வயதான தனது மனைவிக்குப் பிரசவம் பார்த்துள்ளதாக தெரியவந்துள்ளது. இப்பெண்ணுக்கு கடந்த 13ஆம் திகதி பிரசவ திகதியாக மருத்துவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
எனினும், அத்திகதியில் பிரசவ வலி ஏற்படவில்லை. 
இந்நிலையில், 19-12-2021.அன்று பிற்பகல் 3 மணியளவில் அப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்நிலையில், அப்பெண்ணின் கணவர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், தனது சகோதரியின் உதவியுடன் யூடியூப் காணொளியை பார்த்து குழந்தையை பிரசவிக்க செய்துள்ளார் என்றும் விசாரணைகளின் மூலமாக காவல்துறையினர்
 கண்டறிந்துள்ளனர்.
பின்னர் கருவிலிருந்த ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. குழந்தையைப் பிரசவித்த பெண்ணும் அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதில் உடல்நிலை கவலைக்கிடமானதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அதன்பின்னர், குறித்த வைத்தியசாலையின் வைத்தியர் பெண்ணின் கணவர்மீது காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில் பெண்ணின் கணவரும் அவரது சகோதரியும் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களை தேடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலை சேர்க்க வேண்டும் என்றும் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக