siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 29 ஏப்ரல், 2022

கடல் மீன்களின் விலை வடமாகாணத்தில் கடுமையாக உயர்வு

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் வடமாகாணத்தில் கடல் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய கடற்பரப்புகளில் நாளாந்தம் மீன்பிடித்தல் இடம்பெற்று வருகின்ற போதிலும், கடந்த சில நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மீன்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எரிபொருள்...

இலங்கைக்கு எரிவாயு ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று வந்தடைந்தது

3,600 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய மற்றுமொரு கப்பல் 29-04-2022.இன்று நாட்டை வந்தடைந்துள்ளது.முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் குறித்த எரிவாயு தொகை தரையிறக்கப்பட்டுள்ளது.நாடளாவிய ரீதியில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக எரிவாயு விநியோகத்தின் போது பல இடங்களில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>...

வியாழன், 28 ஏப்ரல், 2022

இலங்கையில் அதிகரித்தது டொலரின் விற்பனை பெறுமதி

இலங்கையில் அனுமதிப் பெற்ற வணிக வங்கிகள் இன்றைய தினம் அமெரிக்க டொலரை 360 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றன.தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இலங்கையில் ரூபாயின் மதிப்பு நாள்தோறும் சரிவடைந்து வருகிறது.அதேவேளை 27-04-2022.அன்று  மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 350.49 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>...

புதன், 27 ஏப்ரல், 2022

கீரிமலை பகுதியில் இளைஞன் ஒருவரின் தவறான முடிவு

யாழ். கீரிமலை பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்துத் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.இச்சம்பவம் 27-04-2022.இன்று காலை இடம்பெற்றுள்ளது.வீட்டிற்கு வெளியே உள்ள மரத்தில் தூக்கிட்டு இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இளைஞன் சடலமாகத் தூக்கில் தொங்கியதை அவதானித்த உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலத்தை, உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவுள்ளனர்....

செவ்வாய், 26 ஏப்ரல், 2022

போதைப்பொருள் கடத்திய தமிழ் இளைஞனுக்கு சிங்கப்பூரில் தூக்குத்தண்டனை

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மலேசியாவைச் சேர்ந்த தமிழ் இளைஞரான தர்மலிங்கம் நாகேந்திரன், 27-04-2022.நாளை புதன்கிழமை 27ம் திகதி தூக்கிலிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும் நாகேந்திரன் தொடர்பில் அவரது தாயார் புதிய வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாகவும், அதன் மீதான விசாரணை .26-04-2022.இன்று நடைபெறுவதாகவும் நாகேந்திரனின் சகோதரி ஊடகம் ஒன்றுக்குத்  தெரிவித்துள்ளார்.42.7கிராம் ஹெராயின் போதைப் பொருளை சிங்கப்பூருக்குள்...

திங்கள், 25 ஏப்ரல், 2022

தீ விபத்தில் நைஜீரியாவில் எண்ணெய் ஆலையில் 100 பேர் பலி

நைஜீரியாவில் சட்ட விரோதமாக செயல்பட்ட எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நைஜீரியாவில் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாழும் நிலையில், பல இடங்களில் எண்ணெய் சுரங்கங்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு செயல்படுகின்றன.இந்நிலையில்,ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நைஜீரியாவின் தெற்கு மாநிலமான இமோவில் உள்ள சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில்...

நாட்டில் பாடசாலை மாணவர் மியான் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து பலி

கேகாலை – மாவனல்லை பகுதியில் உள்ள மியான் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்குறித்த மாணவர் மாவனல்லை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள மியான் நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற வேளையில் நீர்வீழ்ச்சியின் கரையில் இருந்து தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதன்போது படுகாயமடைந்த மாணவன் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார். இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>...

வெள்ளி, 22 ஏப்ரல், 2022

இலங்கை மாணவன் அவுஸ்திரேலியாவில் விபத்தில் பலி

அவுஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்று வந்த இலங்கை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் அத்தனகல்ல, வல்பொல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய இசுரு ஜீவந்த என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.குறித்த இலங்கை மாணவன் பயணித்த கார் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மாணவன் உயர்தர கணிதப் பிரிவில் கம்பஹா மாவட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு...

கொடிகாமத்தில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் பலி மேலும் இருவர் படுகாயம்

யாழ் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற ரயில் – பட்டா ரக வாகன விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்தில் கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தயாபரன் ஜனுசன் வயது 12 எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரின் தந்தையான நாகமணி தயாபரன் வயது 45 மற்றும் உயிரிழந்தவரின் சகோதரனான தயாபரன் தனுஷன் வயது 15 ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா...

அமரர் இராசரத்தினம் இலட்சுமி (பரிமளம்)3ம் ஆண்டு நினைவஞ்சலி.22,04,22

மாலர்வு-11,01,1944- .உதிர்வு-24.04.2019  திதி -22..04.2022 வெள்ளிக்கிழமை அன்று யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாக்கொண்ட                 அமரர் இராசரத்தினம்,இலட்சுமி (பரிமளம்)  அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலிஅன்னார்  காலஞ்சென்ற  இராசரத்தினம்  அவர்களின் அன்பு மனைவியும்   காலஞ்சென்றவர்களானமாரிமுத்து தம்பதிகளின் புத்திரியும்   காலஞ்சென்றவர்களான...

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

நாட்டில் மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாடு முழுவதும் இன்றும், நாளையும் மின்வெட்டு அமுலாகும் நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தொிவித்துள்ளது.மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்குவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது.இதனால் 19-04-2022.இன்று மின்வெட்டு நேரத்தை 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்....

திங்கள், 18 ஏப்ரல், 2022

நாட்டில் மீண்டும் அதிகரித்தது பெட்ரோல், டீசல் விலை

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.இதற்கமைய, சகல விதமான பெட்ரோல் வகைகளின் விலைகளும் 35 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.மேலும்,சகல விதமான டீசல் வகைகளின் விலைகள் 75 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, பெட்ரோல் 92 – 338 ரூபாவாகும், பெட்ரோல் 95 – 367 ரூபாவாகும்,பெட்ரோல் யூரோ 3 – 347 ரூபாவாகும்,ஓட்டோ டீசல்- 289 ரூபாவாகும்,...

சனி, 16 ஏப்ரல், 2022

நீர் வெறுப்பு நோயினால் யாழில் குடும்பத்தலைவர் உயிரிழந்துள்ளார்

யாழ், கடற்கரை வீதியில் நாய் மற்றும் பூனையின் நக கீறலுக்கு உள்ளாகி குடும்பத்தலைவர் ஒருவர் நீர் வெறுப்பு நோயினால் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் கடற்கரை வீதியைச் சேர்ந்த அந்தோனி சூசைநாதன் (வயது-35) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் விலங்கு விசர் நோய்த்தடுப்பூசி பெற்றுக்கொள்ளாமையினால் நீர்வெறுப்பு நோய்க்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சட்ட மருத்துவ வல்லுநரின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.உயிரிழந்த நபர் 3 மாதங்களுக்கு...

ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

அமரர் மயில்வாகனம் இராசரத்தினம் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 10.04.22

பிறப்பு-02-0-1930--இறப்பு-22-03 -2021.யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்  மயில்வாகனம்  இராசரத்தினம் அவர்கள்,.அவர்களின் .முதலாமாண்டு திதி  10.04.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.அன்னார் காலஞ்சென்ற மயில்வாகனம் தம்பதிகளின் அன்புமகனும்   காலஞ்சென்ற செல்லம்மாஅவர்களின்,அன்புகணவரும் செல்வரத்தினம் (இலங்கை...

சனி, 9 ஏப்ரல், 2022

அமரர் சின்னத்தம்பி சிவானந்தம்1ம் ஆண்டு நினைவஞ்சலி (செல்வா) 09.04.22

பிறப்பு-02 05 1964--இறப்பு--22 03 2021யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிசில்வசித்து வந்தவரும் தற்போது  நவற்கிரியில் வதித்து வந்த திரு சின்னத்தம்பி சிவானந்தம் (செல்வா,சிவா.) அவர்களின் .முதலாமாண்டு திதி  09.04.2022-சனிக்கிழமை அன்று அன்று அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி மற்றும் அசுவதி  தம்பதிகளின் அன்பு மகனும் ( மூத்த புதல்வர் ) காலஞ்சென்ற கந்தையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிவறஞ்சனி (றஞ்சி .சுவிஸ் ...

திங்கள், 4 ஏப்ரல், 2022

அமரர் திரு,ஆ ,க,சுப்பிரமணியம்.11ம் ஆண்டு நினைவஞ்சலி.04.04.2022

மண்ணில் : 06- 02 1932 — விண்ணில் : 06 04 2011திதி : 04 -04- 2022.திங்கள்கிழமை,அன்று யாழ். மாவிடடபுரத்தை பிறப்பிடமாகவும், நவற்கிரி புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட.அமரர் திரு ..(ஆ.க) கந்தையா. சுப்பிரமணியம் (மணிஐயா  ) அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.பத்தின்ஒரு ஆண்டுகள் கழிந்தும் என்றும் எம்மோடு இருக்கும் ஏந்தலே!!பத்தின்ஒரு ஆண்டுகள் போனதையா!ஏங்கியே அழுகின்றோம் ஏந்தலே!!தாங்கியே பிடிக்க தலைவனின்றிதவிக்கின்றோம் ஐயா!.இன்று நீங்கள் இல்லாமல்தனியாய்...