நாட்டில் களுத்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழுவொன்று தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏறக்குறைய 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
12 மற்றும் 13 வயதுடைய பாடசாலை மாணவர்கள் குழுவொன்றே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மயக்கம் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக