siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 22 ஜனவரி, 2023

யாழ் வடமராட்சியில் விபத்தில் ஒருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்

யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில்  இ.போ.ச சொந்தமான பேருந்து மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் மோட்டார்க் சைக்கிளில் சென்றவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும், தெரியவருவதாவது,பருத்தித்துறை கட்டைக்காடு சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பருத்தித்துறை சாலை பேருந்து உடுத்துறை வேம்படி பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் விபத்தில் படுகாயமைந்துள்ள நிலையில், அருகிலுள்ள மக்களால் உடனடியாக அவரை மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.சம்பவ இடத்திற்கு வந்த மருதங்கேணி போக்குவரத்து பொலிசார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 21 ஜனவரி, 2023

சீனாவில் திபெத் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

னாவின் தன்னாட்சி பிரதேசமான திபெத்தின் தென்மேற்கில் உள்ள நியிஞ்சி நகரத்தை மெடாக் கவுண்டியுடன் இணைக்கிற நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் கடந்த புதன்கிழமை திடீரென 
பனிச்சரிவு ஏற்பட்டது. 
நியிஞ்சி நகரமானது பிராந்திய தலைநகரமான லாசாவில் இருந்து 5 மணி நேர பயணத்தில் 3,040 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பனிச்சரிவு பல வாகனங்களை மூடிக்கொண்டு விட்டன. 
இந்தப் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. சம்பவ இடத்துக்கு மீட்பு படையினரும், அவசரகால வாகனங்களும் விரைந்தனர். அங்கு தேடல் மற்றும் மீட்புப் பணிகள் 
முடுக்கி விடப்பட்டன. 
இந்நிலையில், பனிச்சரிவில் இருந்து நேற்று சில சடலங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, பனிச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள்
 தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 20 ஜனவரி, 2023

திபெத்தில் சுரங்கப்பாதை பனிச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு

சீனாவின் தன்னாட்சி பிரதேசமான திபெத்தின் தென்மேற்கில் உள்ள நியிஞ்சி நகரத்தை மெடாக் கவுண்டியுடன் இணைக்கிற நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென 
பனிச்சரிவு ஏற்பட்டது. 
நியிஞ்சி நகரமானது பிராந்திய தலைநகரமான லாசாவில் இருந்து 5 மணி நேர பயணத்தில் 3,040 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பனிச்சரிவு பல வாகனங்களை மூடிக்கொண்டு விட்டன. 
மேலும் இந்தப் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த தகவல்கள் புதன்கிழமை இரவில் 
தெரிய வந்தது. 
சம்பவ இடத்துக்கு 131 மீட்பு படையினரும், 28 அவசரகால வாகனங்களும் விரைந்துள்ளனர். அங்கு தேடல் மற்றும் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



நானுஓயா பிரதேசத்தில் பயங்கர விபத்து: ஏழு பேர் பலி! 41 மாணவர்கள் படுகாயம்

கொழும்பில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையொன்றைச் சேர்ந்த மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் நுவரெலியா நானுஓயா பகுதியில்.20-01-2023. இன்று பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 விபத்து இடம்பெற்ற போது பஸ் அதிவேகமாக பயணித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வேன் மீது பஸ் மோதியதில் இரு வாகனங்களும் 60 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் மேலும்
 தெரிவித்தனர்.
விபத்தில் 7 பேர் மரணித்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள்  தெரிவிக்கின்றன. விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ்ஸில் பயணித்த 41 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 
தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் வேனில் பயணித்த 6 பேரும் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 19 ஜனவரி, 2023

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

இலங்கையில் அனைத்து தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்படவுள்ளது.
2022 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை நிறைவடைவதுடன், கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.
2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை இறுதி கட்ட கற்றல் நடவடிக்கை பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




இலங்கையில் வீடொன்றில் இருந்து இளம் காதல் ஜோடி சடலமாக மீட்பு

இலங்கை கலேவெல பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து பாடசாலை மாணவி மற்றும் இளைஞன் ஒருவனின் சடலங்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
14 வயதுடைய பாடசாலை மாணவி மற்றும் 17 வயதான இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவி கலேவெல அம்பன்பொல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இருவருக்கும் இடையே காதல் தொடர்பு இருந்ததாகவும், இதற்கு முன் வீட்டை விட்டு ஓடி வந்ததாகவும் பொலிஸார் 
தெரிவிக்கின்றனர்.
இதன்போது கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணையின் போது இருவரும் கண்டுபிடிக்கப்பட்டதுடன், குறித்த பாடசாலை மாணவியை அவரது தாயாரின் காவலில் வைக்க நீதிமன்றம் 
உத்தரவிட்டிருந்தது.
பின்னர் அண்மையில் மீண்டும் இருவரும் வீட்டை விட்டு ஓடி, அந்த இளைஞனின் கிராமப் பகுதியான ஆண்தாவளயில் உள்ள ஒரு கைவிடப்பட்ட வீட்டில் தங்கியுள்ளனர்.
இதனை அறிந்த வீட்டார் அவர்களை தேடிச் சென்ற சந்தர்ப்பத்தில் அவர்கள் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக
 மீட்கப்பட்டுள்ளனர்.
இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 18 ஜனவரி, 2023

கொழும்புபில் பல்கலைக்கழக மாணவியை கொலை செய்த சந்தேக நபர் விளக்கமறியலில்

கொழும்பு பந்தய மைதானத்தில் பல்கலைக்கழக மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான இளைஞரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று 
உத்தரவிட்டுள்ளது.
குருந்துவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸின் அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இது 
இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து குருதுவத்தை பொலிஸார் அறிக்கை சமர்ப்பித்து நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், தேசிய மனநல மருத்துவ நிறுவனத்தின் விசேட வைத்தியரிடம் அனுப்பிவைத்து, அவரது மன நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளதாக சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் 
தெரிவித்தார்.
கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், சந்தேக நபரை தேசிய மனநல மருத்துவ நிறுவகத்தின் விசேட வைத்தியரிடம் பரிந்துரைத்ததோடு, அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக நெத் நியூஸ் நீதிமன்ற செய்தியாளர் 
தெரிவித்தார்.
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் 03ஆம் ஆண்டு மாணவர் ஒருவர் கொழும்பு பந்தயப் பாதையில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 17 ஜனவரி, 2023

யாழ் தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய கடலில் குளிக்கச்சென்றவருக்கு நேர்ந்த கதி.

யாழ். தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள கடல் நீரேரியில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சடலம்  (11.01.2023) அன்று
 காலை மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதிக்கு நீராடச் சென்றவர்கள் சடலமொன்று மிதப்பதாக வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.இதனை தொடர்ந்து நீரில் மூழ்கிய நிலையில் முதியவரின் 
சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஆலயத்திற்கு வந்த முதியவர் நீரேரியில் நீராட முற்பட்ட சந்தர்ப்பத்தில் நீரில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





திங்கள், 16 ஜனவரி, 2023

சீனாவில் மீண்டும் சடுதியாக அதிகரித்த கொரோனா.. 60000 பேர் மரணம்.

சீனாவில் வேகமாக பரவி வரும் கோவிட் பாதிப்பால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் உயிரிழந்ததோரின் எண்ணிக்கை 60000 நெருங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும்
கோவிட் பரவல் 95 விழுக்காடு நீங்கி இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் சீனாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கோவிட் பரவல் மீண்டும் அதிகரிக்கத் ஆரம்பித்துள்ளது.கோவிட் பரவலைத் 
தடுக்க ஜீரோ
கோவிட் என்ற கொள்கையை சீன அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.அதன்படி பல்வேறு முக்கிய நகரங்களில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியதோடு, வணிக ரீதியிலான பாதிப்பும் அதிகரித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 15 ஜனவரி, 2023

கணவன் இறந்த பின் மீண்டும் திருமணம் செய்யும் பெண்கள் படும் வேதனைகள்.

. ஒரு நிமிடம் ஒதுக்கி படியுங்கள்n ஆணிற்கொரு மறுமணம் என்றால் வயதில்லை,எந்தவொரு தடையில்லை இறந்த மனைவியின் நினைவில்லை..அவள் இல்லையென்ற 
வேதனை இல்லை.
பெண்ணிற்கு மறுமணம் என்றால் மட்டும்,இறந்தவனின் நினைவு வந்துவிடும்.அவன் குடும்பம் தழைக்க ஓர் வாரிசு இல்லையென்ற வருத்தம் வந்துவிடும்.மூன்று மாத வாழ்வில் மூளைச்சாவில் கணவன் போனால் மூலையில் அமரவைத்து,மூக்குசிந்தி செல்லும் கூட்டம் சொல்லுது.வாரிசு இல்லை.இறந்தவன் நினைவின்றி,உடலுக்காக அடுத்தவனை கைப்பிடிக்கிறாளென்று.
பிள்ளையொன்று பிறந்துவிட்டால் பிரிதொரு வாழ்க்கை அமைக்க நினைக்குமோ இக் கூட்டம்? பிள்ளைக்காக வாழ்ந்திடு என்று சொல்லி,தங்கள் மகிழ்வைக் கூட தளர்த்திடாது,நகர்ந்து செல்லும் கூட்டம் சொல்லுது இறந்தவனின் நினைவு அவளிற்கு 
இல்லையென்று
இறந்தவனை மட்டுமே நினைத்திருந்தால்,இவள் வாழ்க்கை மீண்டிடுமோ? இல்லை..குழந்தை
ஒன்றுதான் பிறந்திட்டால் குடும்பமாக ஆகிடுமோ? கண்ணீரில் கரைந்தபடி காலமெல்லாம் இவள் வாழ,கலகலவென சிரித்தபடி செல்லும் கூட்டம்..அடுத்த சோலி பார்க்க,மூலையில் அமர்ந்தவள்
மீண்டுமொரு மாலை ஏந்தினால் மட்டும்,மூலைக்கு மூலை நின்று பேசுது கதை.இல்லாமல் போனவனுக்காக,இவள் இடிவிழுந்த மரமாக பட்டுப் போக வேண்டுமோ?துளிர்த்திடல் ஆகாதோ?? இறந்தவன் குலம் வாரிசற்று போனதற்க்காய்.இவள் குலம் தழைக்க கூடாதோ? வாரிசுக்காக பெண்களின் வாழ்க்கையை பாழாக்காது. வாழவையுங்கள்.மீண்டும் வாழ்வளித்து.வாழச் சென்றால் வாழ்த்திடுங்கள்
வழி மறைக்காது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 14 ஜனவரி, 2023

காரைநகரில் வசிக்கிக்கும் .70 வயது முதியவரின் உழைப்பாளியின் கதை.

யாழில் ஓர் உழைப்பாளியின் கதை.. 70 வயது முதியவர் ஒருவர், யாழ்ப்பாணம் காரைநகரில் வசிக்கிறார். வயதாகிவிட்டதே, உடல் தளர்ந்துவிட்டதே என்றெல்லாம் நினைக்காமல், சுயதொழில் 
உற்பத்தியில் ஈடுபடுகிறார்.பனையில் இருந்து கிடைக்கக்கூடிய ஓலை, ஈர்க்கு, நார், மட்டை போன்றவற்றைப் பயன்படுத்தி, ஓலைப்
 பெட்டிகள், கடகங்கள், தட்டைப் பெட்டி, நீர்த்துப் பெட்டி, திருகணை போன்றவற்றை இவர் உருவாக்குகிறார். இதை ‘பன்ன வேலை’ என்று அழைப்போம்.
மேலும் வெவ்வேறு அளவுகளில், வெவ்வேறு நிறங்களில் ‘பின்னல் பெட்டிகளையும்’ இவர் இழைக்கிறார். திருமணத்தின் போது ‘நாலாம் சடங்கில்’ பலகாரங்களை எடுத்துச் செல்ல இவ்வகைப் பெட்டிகளைப் பயன்படுத்துகிறார்கள். அத்துடன் கூறைச்சேலை, தாலி போன்றவற்றை எடுத்துச்செல்ல பயன்படும் ‘அலங்காரப் பெட்டிகளும்’ இவரது கைவண்ணத்தில் உருவாகின்றன.
பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் கலைவேலைப்பாடுகள் நிறைந்ததுமான இந்த பனையோலைப்பெட்டிகளை இழைப்பதன்மூலம் அவருக்கு குறிப்பிட்ட வருமானம் கிடைக்கிறது. வயதான காலத்தில்கூட யாரையும் நம்பியிராமல், தனது உழைப்பைமட்டும் நம்பிவாழும் இவரின் பெயர் செல்லைய்யா கந்தசாமி.
பனையோலைப் பெட்டிகளில் கூறைச்சேலை, தாலிகளை எடுத்துச் செல்வது அந்தக்கால வழக்கமாக இருந்தாலும் அதைநாம் மீளவும் கொண்டுவந்து, Trend ஆக்க முடியும்.
வெளிநாடுகளில்வாழும் நாம், தாயக உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்யவேண்டும். இதன்மூலம் எமது பாரம்பரியத்தை கட்டிக்காப்பதோடு, திரு. கந்தசாமி போன்ற உழைப்பாளிகளின் வாழ்வில் ஒளியேற்றியதாகவும் இருக்கும்.
தாயகத்தின் இவர்போல மேலும் பல உழைப்பாளிகளும் சுயதொழில் முனைவோரும் இருக்கிறார்கள். இவர்களும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் ஒன்றுசேரும்போது அங்கு பெரும் பொருளாதாரப் புரட்சியே நிகழும். இதன் முதல்கட்டம் ஏற்கனவே துவங்கிவிட்டது. 70 வயதிலும் ஓயாது உழைக்கும் திரு. கந்தசாமி அவர்களை வணங்குகிறேன். ‘பொருளாதார முன்னேற்றமே ஏனைய அனைத்து முன்னேற்றங்களுக்கும் அடிப்படை
என்பது குறிப்பிடத்தக்கது இந்தஎம் இணையங்களன் 
 வாழ்த்துக்கள் ஐயா

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வெள்ளி, 13 ஜனவரி, 2023

யாழ் தையிட்டி, தெல்லிப்பளை,அளவெட்டி வசிக்கும் 50 குடும்பத்தினருக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைப்பு.

நாட்டில் அனைவரையும் பொங்கவைப்போம்”
கனடாவில் வசிக்கும் சமூக சேவையாளர்கள் திரு.ரூபன், குகன்,சிறி,நவா,திவா,ராம்,கருணாகரன்,கரு அக்கா. 
அவர்களின் நிதிப் பங்களிப்புடன்.12/01/2023 .அன்று  தையிட்டி, தெல்லிப்பளை,அளவெட்டி வசிக்கும் 3 கிராமசேவகர் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பத்தினருக்கு பொங்கல் பொதிகள் 
வழங்கி வைக்கபட்டன.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வியாழன், 12 ஜனவரி, 2023

நாட்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்காததால் இளைஞர் தற்கொலை

நாட்டில் 29 வயதுடைய இளைஞன் ஒருவர் தனது குடும்பத்திற்கு உதவுவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறத் தவறியதால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அக்குரஸ்ஸவிலுள்ள தனது இல்லத்தில் கடிதம் ஒன்றை விட்டுவிட்டு, பெற்றோருக்கு உதவ முடியாமல் போனதில் வருந்திய அவர் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞனின் உறவினர்கள் அவரை அக்குரஸ்ஸ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக 
அறிவிக்கப்பட்டது.
கொரிய மொழிப் பரீட்சையில் 5 புள்ளிகளை இழந்து சித்தி பெறத் தவறியதால் குறித்த இளைஞன் மனமுடைந்துள்ளதாக பொலிஸார் 
தெரிவித்தனர்.
அவரது தாயாரின் கூற்றுப்படி, அவர் மூன்று குழந்தைகளில் மூத்தவர், குடும்பத்திற்கு உதவ முடியாமல் சோகத்தில் இருந்ததாக 
தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 11 ஜனவரி, 2023

உடல்நலக் குறைவால் கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் பதவி வகித்த இரண்டாம் கான்ஸ்டன்டைன் மரணம்

கிரீஸ் நாட்டின் மன்னராக 1964 முதல் 1973 வரை பதவி வகித்தவர் இரண்டாம் கான்ஸ்டன்டைன். இவர் தனது 23-ம் வயதில் கிரீசின் மன்னராக 
அரியணை ஏறினார். 
கிரீசில் மன்னாராட்சி முறைக்கு 1967-ம் ஆண்டு எதிர்ப்பு எழுந்த நிலையில் 2-ம் கான்ஸ்டன்டைன் நாட்டை விட்டு வெளியேறினார். 
அதன்பின், 1974-ம் ஆண்டு மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு மக்களாட்சி நடைமுறைக்கு வந்ததால் அவர் அதிகாரப்பூர்வமாக மன்னர் பதவியில் 
இருந்து நீக்கப்பட்டார். 
மக்களாட்சி மலர்ந்த நிலையில் பின்னர் நாடு திரும்பினார். இந்நிலையில், கிரீஸ் நாட்டின் கடைசி மன்னரான 2-ம் கான்ஸ்டெண்டைன் இன்று மரணமடைந்தார். 
வயது முதிர்வு, உடல்நலக் குறைவு காரணமாக தனது 82 வயதில் அவர் மரணமடைந்தார். உடல்நலக் குறைவால் ஏதென்சில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 2-ம் கான்ஸ்டண்டைன் மரணமடைந்ததாக மருத்துவமனை ஊழியர்கள் 
தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 10 ஜனவரி, 2023

அமெரிக்கா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு 100 மில்லியன் டாலர் வழங்கியுள்ளது

பாகிஸ்தானில் பருவகால மழை பாதிப்புகளால் கடந்த ஆண்டில் அந்நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சாலைகளும், பாலங்களும் முறையே துண்டிக்கப்பட்டும், நீரில் அடித்துச் செல்லப்பட்டன. நாட்டில் 3.3 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டனர். 
வெள்ளத்திற்கு பின்பு லட்சக்கணக்கானோர் பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 1.34 லட்சம் பேர் வயிற்று போக்காலும், 44 ஆயிரம் பேர் மலேரியா வியாதியாலும் 
பாதிக்கப்பட்டனர். 
வெள்ளம் பாதித்தோரில், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தோல் வியாதியாலும், 101 பேர் பாம்பு கடியாலும் மற்றும் 500 பேர் நாய் கடியாலும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானில் வெள்ள பாதிப்புக்கு 1,700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பல ஆயிரக்கணக்கானோர் வெள்ள பாதிப்பில் காயமடைந்தனர். இந்த நெருக்கடியான சூழலில் உலக நாடுகளின் உதவியை பாகிஸ்தான் எதிர்பார்த்தது. 
இதற்கிடையே, பாகிஸ்தானின் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி, அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கனை வாஷிங்டன் நகரில் நேரில் சந்தித்துப் பேசினார். 
இந்த சந்திப்புக்கு பின்னர், முதல் கட்டமாக பாகிஸ்தானின் வெள்ள நிவாரண மற்றும் மனிதநேய அடிப்படையிலான நிதி உதவியை அமெரிக்கா 
ஒதுக்கியது. 
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் மேலும் 100 மில்லியன் டாலரை உணவு பாதுகாப்பு உதவி தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக 
அமெரிக்கா தெரிவித்தது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


திங்கள், 9 ஜனவரி, 2023

முகநூலினால் யாழில் நடந்த துயரம்..இறுதியில் உயிரினை விட்ட இளம் யுவதி


யாழில் பேஸ்புக் காதலன் ஏமாற்றியதால் உயிரை மாய்த்த யுவதியின் குடும்பத்தினர், காதலன் மீது சட்டநடவடிக்கையெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.சம்பவம் தொடர்பில்
 தெரியவருகையில்,
யாழ் மாநகரை அண்டிய பகுதியை சேர்ந்த யுவதியொருவர் சில வாரங்களின் முன்னர் வீட்டில் தூக்கில் தொங்கி உயிரிழந்திருந்தார். உயிரிழந்த காதல் தோல்வியால் மன உளைச்சலிற்குள்ளாகியிருந்ததால் தற்கொலை செய்ததாக கருதப்படுகிறது.இந்நிலையில் அவரது மரணத்திற்கு பேஸ்புக் காதலன்தான் காரணமென குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
மட்டக்களப்பை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் பேஸ்புக் வழியாக உறவு ஏற்பட்டு, பின்னர் இருவரும் காதலர்களாக மாறினர். யாழ் நகரையண்டிய பகுதிகளில் சில ஆதனங்களும் குடும்ப த்தினருக்கு 
சொந்தமாக காணப்பட்டன.
யுவதியின் வற்புறுத்தலின் பேரில் ஆதனமொன்றை விற்பனை செய்து, காதலனிற்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. அந்த பணத்தில் காதலன் வெளிநாடு செல்வதாக குறிப்பிட்டு, மலேசியாவில் தங்கியிருந்துள்ளார்
.மலேசியா சென்ற சில மாதங்களின் பின்னர் யுவதியுடனான தொடர்பை, பேஸ்புக் காதலன் நிறுத்திக் கொண்டதக்க கூறப்படுகின்றது.
இந்நிலையில் யுவதி தற்கொலை செய்து கொண்ட
தையடுத்து, பேஸ்புக் காதலனிற்கு எதிராக, யுவதியின் குடும்பத்தினர் சட்ட நடவடிக்கையெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக
 கூறப்படுகின்றது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

ஞாயிறு, 8 ஜனவரி, 2023

ஏறாவூரில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் கடலில் மூழ்கி மரணம்

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த உயர்தர மாணவன் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் எதிர்வரும் 23ஆம் திகதி ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த நிலையிலேயே இவ்வாறு பரிதாபகரமாகச் 
சாவடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:-
ஏறாவூரில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்வி பயிலும் மாணவனான மனாப்தீன் அப்துர் ரஹ்மான் (வயது 19) என்பவர் நேற்று குடும்ப சகிதம் ஏறாவூர் சவுக்கடி கடற்கரைக்குச் 
சென்றுள்ளனர்.
அப்போது குறித்த மாணவர் தன் சகோதரருடன் குளித்துக் கொண்டிருந்த போது பாரிய அலையால் இருவரும் அள்ளுண்டு
 சென்றுள்ளனர்.
பின் மற்றுமொரு அலையினில் இருவரும் கரைக்கு வந்த போது குறித்த மாணவன் உயிரிழந்திருந்தார்.
அத்துடன் அவரது சகோதரர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 
சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 7 ஜனவரி, 2023

சுவிசில் ஆரோ கன்டோனில் 42வயது பெண்ணின் கழுத்தை திருகிய நபர் தப்பியோட்டம்

சனிக்கிழமை காலை, அடையாளம் தெரியாத நபர் ஒரு பெண்ணைத் தாக்கியதில், அவர் லேசான காயம் அடைந்தார். உள்ளூர்வாசிகள் அவளுக்கு உதவி செய்ய ஓடினர். எனினும், குற்றவாளி 
தப்பியோடிவிட்டார்.
ஆர்காவ் கன்டன் காவல்துறையின் அறிக்கையின்படி, 42 வயதான பெண் ஒருவர் சனிக்கிழமை அதிகாலை 5.45 மணியளவில் ரைன்ஃபெல்டனில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து பழைய நகரத்தின் திசையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
Habich-Dietschy-Strasse உயரத்தில், அவளை ஒரு அறியாத மனிதன் அணுகினான். அவர் பாதிக்கப்பட்டவரைப் பிடித்து மூச்சுத் திணற வைத்தார். பாதிக்கப்பட்டவர் வாய்மொழியாகவும், உடல் ரீதியாகவும் தன்னைத் தற்காத்துக் கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். குடியிருப்பாளர்கள் உதவிக்கு விரைந்தனர். இந்த தாக்குதலில் பெண்ணுக்கு லேசான 
காயம் ஏற்பட்டது.
அறியப்படாத குற்றவாளி பழைய நகரத்தின் திசையில் தப்பி ஓட முடிந்தது. தேடப்படும் நபர் 20 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர், சுமார் 1.70 மீட்டர் உயரம் கொண்டவர், கருமையான முடி, தடகளம் மற்றும் 
மொட்டையடிக்கப்பட்டவர். குற்றம் நடந்தபோது அவர் நீல ஜீன்ஸ், கருப்பு, பளபளப்பான, லைட் டவுன் ஜாக்கெட் மற்றும் வெள்ளை ஸ்னீக்கர்களை 
அணிந்திருந்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 6 ஜனவரி, 2023

வடமராட்சி கிழக்கு மணற்காட்டுப் பகுதியில் தனித்து வாழ்ந்தவர் சடலமாக மீட்பு

யாழ். வடமராட்சி கிழக்கு மணற்காட்டுப் பகுதியில் தனித்து வாழ்ந்து வந்த நபர் ஒருவர் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கந்தசாமி பன்னீர்செல்வம் என்ற 56 வயது நபரின் சடலமே 
மீட்கப்பட்டுள்ளது.
வீட்டில் துர்நாற்றம் வீசிய நிலையில் கிராம சேவகரும் மக்களும் இணைந்து வீட்டைத் திறந்து பார்த்த போது குறித்த நபரின் சடலம் சமையலறையில் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் மனைவி 2004 ஆழிப் பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்த நிலையில் இவர் தனியாகவே வாழ்ந்து வந்துள்ளதாகத்
 தெரியவருகிறது.
பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை 
மேற்கொண்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வியாழன், 5 ஜனவரி, 2023

தமிழகத்தில் இலங்கை யுவதியொருவர் பின்னால் வந்த லொறி மோதி உயிரிழப்பு

தமிழகத்தில் வீதியில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து இலங்கை யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.இலங்கையைச் சேர்ந்த செல்வகுமார் குடும்பத்தினர் போரூர் லட்சுமி நகரில் வசித்து வருகிறார்கள். மகள் ஷோபனா (23) கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியியலாளராக பணிபுரிந்து வந்தார்.
இவரது தம்பி ஹரீஸ். முகப்பேரில் உள்ள தனியார் பாடசாலையில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று காலை 7.30 மணியளவில் ஷோபனா, தனது தம்பியை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அவர்கள் நொளம்பூர் அருகே மதுரவாயல் பைபாஸ் சாலை, சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக இருந்தது. இந்த நிலையில் சாலையில் இருந்த பள்ளத்தில் ஏறி இறங்கிய போது நிலை தடுமாறிய ஷோபனாவின் மோட்டார் சைக்கிள் அருகில் சென்ற வேன் மீது உரசியது. இதில் அவர் தம்பியுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளோடு 
சாலையில் விழுந்தார்.
அந்த நேரத்தில் பின்னால் வேகமாக வந்த மணல் லொறியின் சக்கரத்தில் ஷோபனா சிக்கிக்கொண்டார்.இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ஷோபனா பரிதாபமாக இறந்தார்.மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்தபோது எதிர்ப்புறம் விழுந்ததால் ஷோபனாவின் தம்பி ஹரீஸ் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அவர் பலியான அக்காவின் உடலை கண்டு கதறி துடித்தது பரிதாபமாக இருந்தது.விபத்து நடந்ததும் லொறியை நிறுத்திவிட்டு சாரதி தப்பி ஓடிவிட்டார்.தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் பலியான ஷோபனாவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக போரூரில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சாரதியை தேடி வருகின்றனர்.மாணவர் ஹரீஸ் நீட் தேர்வுக்காக பாடசாலையிலேயே நடக்கும் சிறப்பு வகுப்பில் படித்து வருகிறார். 04-01-2023.அன்று காலை பாடசாலைக்கு செல்ல தாமதமானதால் அவர் அக்கா ஷோபனாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். குண்டும் குழியுமான சாலை ஷோபனாவின் உயிரை 
காவு வாங்கிவிட்டது.
மதுரவாயல் சர்வீஸ் சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதாகவும், இதனால் அடிக்கடி விபத்து நடப்பதாகவும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். நேற்றைய விபத்தை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சாலையில் பள்ளங்களை மணல், சல்லிகள் கொட்டி 
சீரமைக்கப்பட்டது.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 4 ஜனவரி, 2023

அலபாமா விமானத்தின் என்ஜினுக்குள் சிக்கி விமான நிலைய ஊழியர் உயிரிழப்பு

அமெரிக்காவின் அலபாமா மாநிலம் மாண்ட்கோமெரி நகரில் உள்ள விமான நிலையத்துக்கு டல்லாஸ் நகரில் இருந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வந்தது. 
விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர், விமானங்கள் நிறுத்தும் இடத்தில் விமானம் நிறுத்தப்பட்டது. 
ஆனால் அதன் பின்னரும் விமானத்தின் ஒரு என்ஜின் மட்டும் தொடர்ந்து இயங்கி கொண்டிருந்தது. இதனை அறியாத விமான நிலைய ஊழியர் ஒருவர் அந்த விமானத்துக்கு அருகே சென்றார். 
அப்போது அவர் என்ஜினுக்குள் இழுக்கப்பட்டு சிக்கிக்கொண்டார். இதனால் கண் இமைக்கும் நேரத்தில் உடல் நசுங்கி 
அவர் பலியானார். 
இந்த கோர சம்பவத்தால் அலபாமா விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சக ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 
விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.31-12-2022. சனிக்கிழமை நிகழ்ந்த இந்த கோர விபத்து குறித்து அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை
 நடத்தி வருகிறது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 3 ஜனவரி, 2023

இரண்டு ஹெலிகாப்டர்கள் ஆஸ்திரேலியாவில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து பகுதியில் இருக்கும் தீம் பார்க்கின் அருகில் இரு  ஹெலிகாப்டர்கள் ஒன்றின் மீது ஒன்று மோதிக்கொண்டதில் நான்கு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டின் குயின்ஸ்லாந்தில் கோல்ட் கோஸ்ட் கடற்கரையில் இருக்கும் சீ வேர்ல்ட் என்ற தீம் பார்க்கிற்கு அருகில் இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் தற்போது வரை நான்கு நபர்கள் பலியானதாக கூறப்பட்டிருக்கிறது. மூன்று நபர்கள் பலத்த காயமடைந்திருக்கிறார்கள்.
பள்ளி விடுமுறையை கொண்டாட பூங்காவில் மக்கள் கூடி இருந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. ஏழு பயணிகளுடன் சென்ற ஒரு ஹெலிகாப்டர் தரை இறங்கக்கூடிய சமயத்தில் மற்றொரு ஹெலிகாப்டர் மீது மோதி விட்டது.
அதில் ஆறு நபர்கள் இருந்ததாக தெரியவந்திருக்கிறது. ஹெலிகாப்டர் விபத்தில் பலியான இருவர் பிரிட்டனை சேர்ந்த தம்பதி என்று தெரிய வந்திருக்கிறது. அவர்கள் கடந்த 2021-ஆம் வருடத்தில் தான் திருமணம் 
செய்திருக்கிறார்கள். என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



மரண அறிவித்தல் திரு முத்தையா சத்தியநாதன் (முத்தா) 02.01.2023

தோற்றம்-15-02-1957-மறைவு-02-01- 2023
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொட்டடி வில்லூன்றி பிள்ளையார் கோவிலடி, சுவிஸ் Zürich ஆகிய இடங்களை 
வதிவிடமாகவும் கொண்ட முத்தையா சத்தியநாதன் (முத்தா) அவர்கள்.இலங்கையில்  02-01-2023 திங்கட்கிழமை 
அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற முத்தையா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிப்பிள்ளை பறுவதபத்தினி
 தம்பதிகளின் அன்பு மருமகனும்,மனோன்மணி 
அவர்களின் அன்புக் கணவரும்,சுரேந்திரன்(சுவிஸ்), சுஜிதரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சுரேந்தினி(சுவிஸ்), 
றஞ்சிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,சறோஜினி(பிரான்ஸ்), விமலாதேவி, 
சச்சிதானந்ததேவி, தவானந்தன்(லண்டன்), இராமநாதன், ஜீவானந்தன்(சுவிஸ்), பிரபா(தேவி படமாடம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,ஆயிஷா, றயன், சவீன், அறோன் 
ஆகியோரின் அன்புப் பேரனும்,தேவராசா(சுவிஸ்), முகுந்த விக்னேஸ்வரி(சுவிஸ்), நித்தியானந்தன், வசந்தேஸ்வரி ஆகியோரின் சம்மந்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 05-01-2023 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வில்லூன்றி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
 வீடு - குடும்பத்தினர்Mobile : +94212221312 சுரேந்திரன் - மகன்Mobile : +41765762305 சுஜிதரன் - மகன்Mobile : +41763889544 இராமநாதன் - சகோதரன்Mobile : +94770641104 பிரபா - சகோதரன்Mobile : +94776099071 தவானந்தன் - சகோதரன்Mobile : +447824344594 ஜீவானந்தன் - சகோதரன்Mobile : +41779843972

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


திங்கள், 2 ஜனவரி, 2023

லோலுகொட பிரதேசத்தில் தாய் கொடுத்த விஷத்தை அருந்திய 5 வயது மகன் பலி! - தாயும், மற்றொரு மகனும் வைத்தியசாலையில்


தாயினால் விஷம் கொடுக்கப்பட்டதன் காரணமாக, கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து வயதான  சிறுவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் 
தெரிவிக்கின்றனர்.
கம்பஹா, நால்ல - லோலுகொட பிரதேசத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவனே இன்று காலை இவ்வாறு உயிரிழந்துள்ளதாக 
கம்பஹா - நால்ல
தனது இரண்டு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் அருந்திய தாயொருவர் தற்போது வத்துபிட்டிவல வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை
 பெற்று வருகின்றார்.
தாயினால் விஷமூட்டப்பட்ட, எட்டு வயதான மற்றைய பிள்ளை கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 1 ஜனவரி, 2023

நாட்டில் 100,000க்கு மேல் மாத வருமானம் பெறுபவர்களுக்கு இன்று முதல் வரி

ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் மாத வருமானம் உள்ளவர்களுக்கு இன்று முதல் வருமான வரி விதிக்கப்படும்.
அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் வரி விகிதம் இன்னும் குறைவாகவே உள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மாதாந்தம் 100,000 ரூபாவிற்கு மேல் வருமானம் ஈட்டும் அனைத்து மக்களும் குறைந்தபட்சம் 6 வீதத்திலிருந்து அதிகபட்சமாக 36 வீதம் வரையான வரிகளை செலுத்துவதற்கு பொறுப்பாவார்கள் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் மார்ச் 2024 வரையிலான காலகட்டத்தில் 100,000 க்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களிடமிருந்து எப்படி வரி வசூலிக்கப்படும் என்பதையும் அவர் விளக்கினார்.
எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார சூழலில் இவ்வாறான வரிக் கொள்கையைப் பின்பற்றுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க 
தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் டிசம்பர் 9ஆம் திகதி பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த 19ஆம் திகதி குறித்த சட்டமூலத்திற்கு தனது சான்றிதழை பதிவு செய்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>