கிரீஸ் நாட்டின் மன்னராக 1964 முதல் 1973 வரை பதவி வகித்தவர் இரண்டாம் கான்ஸ்டன்டைன். இவர் தனது 23-ம் வயதில் கிரீசின் மன்னராக
அரியணை ஏறினார்.
கிரீசில் மன்னாராட்சி முறைக்கு 1967-ம் ஆண்டு எதிர்ப்பு எழுந்த நிலையில் 2-ம் கான்ஸ்டன்டைன் நாட்டை விட்டு வெளியேறினார்.
அதன்பின், 1974-ம் ஆண்டு மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு மக்களாட்சி நடைமுறைக்கு வந்ததால் அவர் அதிகாரப்பூர்வமாக மன்னர் பதவியில்
இருந்து நீக்கப்பட்டார்.
மக்களாட்சி மலர்ந்த நிலையில் பின்னர் நாடு திரும்பினார். இந்நிலையில், கிரீஸ் நாட்டின் கடைசி மன்னரான 2-ம் கான்ஸ்டெண்டைன் இன்று மரணமடைந்தார்.
வயது முதிர்வு, உடல்நலக் குறைவு காரணமாக தனது 82 வயதில் அவர் மரணமடைந்தார். உடல்நலக் குறைவால் ஏதென்சில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 2-ம் கான்ஸ்டண்டைன் மரணமடைந்ததாக மருத்துவமனை ஊழியர்கள்
தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக