ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து பகுதியில் இருக்கும் தீம் பார்க்கின் அருகில் இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றின் மீது ஒன்று மோதிக்கொண்டதில் நான்கு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டின் குயின்ஸ்லாந்தில் கோல்ட் கோஸ்ட் கடற்கரையில் இருக்கும் சீ வேர்ல்ட் என்ற தீம் பார்க்கிற்கு அருகில் இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் தற்போது வரை நான்கு நபர்கள் பலியானதாக கூறப்பட்டிருக்கிறது. மூன்று நபர்கள் பலத்த காயமடைந்திருக்கிறார்கள்.
பள்ளி விடுமுறையை கொண்டாட பூங்காவில் மக்கள் கூடி இருந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. ஏழு பயணிகளுடன் சென்ற ஒரு ஹெலிகாப்டர் தரை இறங்கக்கூடிய சமயத்தில் மற்றொரு ஹெலிகாப்டர் மீது மோதி விட்டது.
அதில் ஆறு நபர்கள் இருந்ததாக தெரியவந்திருக்கிறது. ஹெலிகாப்டர் விபத்தில் பலியான இருவர் பிரிட்டனை சேர்ந்த தம்பதி என்று தெரிய வந்திருக்கிறது. அவர்கள் கடந்த 2021-ஆம் வருடத்தில் தான் திருமணம்
செய்திருக்கிறார்கள். என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக