ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் மாத வருமானம் உள்ளவர்களுக்கு இன்று முதல் வருமான வரி விதிக்கப்படும்.
அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் வரி விகிதம் இன்னும் குறைவாகவே உள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மாதாந்தம் 100,000 ரூபாவிற்கு மேல் வருமானம் ஈட்டும் அனைத்து மக்களும் குறைந்தபட்சம் 6 வீதத்திலிருந்து அதிகபட்சமாக 36 வீதம் வரையான வரிகளை செலுத்துவதற்கு பொறுப்பாவார்கள் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் மார்ச் 2024 வரையிலான காலகட்டத்தில் 100,000 க்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களிடமிருந்து எப்படி வரி வசூலிக்கப்படும் என்பதையும் அவர் விளக்கினார்.
எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார சூழலில் இவ்வாறான வரிக் கொள்கையைப் பின்பற்றுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க
தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் டிசம்பர் 9ஆம் திகதி பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த 19ஆம் திகதி குறித்த சட்டமூலத்திற்கு தனது சான்றிதழை பதிவு செய்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக