கொழும்பில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையொன்றைச் சேர்ந்த மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் நுவரெலியா நானுஓயா பகுதியில்.20-01-2023. இன்று பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து இடம்பெற்ற போது பஸ் அதிவேகமாக பயணித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வேன் மீது பஸ் மோதியதில் இரு வாகனங்களும் 60 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் மேலும்
தெரிவித்தனர்.
விபத்தில் 7 பேர் மரணித்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ்ஸில் பயணித்த 41 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் வேனில் பயணித்த 6 பேரும் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக