மத்திய மாலியில் சுமார் 400 பயணிகளுடன் சென்ற படகு ஆற்றில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகினர்.
மாலியில் உள்ள கொன்னா என்ற இடத்தில் இருந்து சுமார் 400 பயணிகளை ஏற்றிக்கொண்டு திம்புக்டு நகரை நோக்கி நைஜர் ஆற்றில் சென்ற படகு திடீரென்று நீரில் மூழ்கியது. படகில் பயணித்த பலருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி தத்தளித்தனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் 210 பேரை உயிருடன் மீட்டனர். மிதந்து வந்த 20 பிரதேங்களையும் கைப்பற்றினர். காணாமல் போன மேலும் 200 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பாலைவன பிரதேசமான வடக்கு மாலியில் சரியான சாலை வசதி இல்லாததால் அருகாமையில் உள்ள நகரங்களுக்கு செல்லும் மக்கள் பெரும்பாலும் படகு போக்குவரத்தையே நம்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக