பிரான்ஸ் நாட்டில் உள்ள கடைகள் அதிக நேரம் திறந்திருக்க கூடாது என்று அந்நாட்டு அரசாங்கம் சட்டம் விதித்துள்ளது.
பிரான்ஸ் தலைநகரான பாரீசில் உள்ள செப்போரா (Sephora) ஒப்பனை தயாரிப்பு நிறுவனத்தில் இரவு 9.00 மணிக்கு மேலும் கூடுதல் சம்பளத்திற்கு பணியாளர்கள் வேலை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கடைகள் கூடுதல் நேரம் திறந்து வைக்க கூடாது என்று சட்டம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த சட்டமானது முட்டாள்தனமானது என்றும் பணியாளர்கள் குறைந்த அளவு வேலையை செய்துவிட்டு அதிக சம்பளம் வாங்குகின்றனர். மேலும் நாங்கள் இதற்காக அதிகமாக வரி செலுத்துகிறோம் என்று ஒரு வாசகர் டுவிட் செய்துள்ளார்.
புதிதாக விதிக்கப்பட்டுள்ள சட்டம் குறித்து தொழிற்சங்கங்களின் தலைவர் எரிக் செர் கூறுகையில், பிரான்சில் கடைகளானது அதிகாலை 4.00 மணிக்கு திறந்து பின்பு இரவு 11.00 மணிக்கு மூடுவதையே ஒரு சட்டமாக கொண்டுள்ளது.
ஆனால் இந்த நேரத்தினையும் மீறி தொழிலாளர்கள் வேலை செய்வது சட்டத்தை மீறுவதாகும். மேலும் பணியாளர்களையும் நாம் மதிக்கவேண்டும்.
ஏராளமான நாடுகளில் குழந்தை தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து
சட்டங்கள் உள்ளன. நாமும் அந்த சட்டத்தினை பின்பற்ற வேண்டும்.
மேலும் சில தொழிலாளர்கள் அதிக நேர உழைப்பினை விரும்புகிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இதற்கான நேரத்தினை நீட்டித்தால் நாட்டில் மற்றவைகளுக்கும் விதிவிலக்குகள் செய்யவேண்டும்.
எனவே இது சட்டத்தினை மீறுவதாகும், ஆகவே பிரான்ஸ் நாட்டின் சட்டத்தினை பின்பற்றுவது நம் கடமையாகும்.
நியூயார்க் போன்ற நாடுகளில் கடைகள் நீண்ட நேரம் திறந்திருக்கின்றன என்றும் ஆனால் நாம் வாழ்வது பிரான்ஸ் நாட்டிலேயே தவிர நியூயார்க்கில் அல்ல எனவும் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக