மாதம்பை சுதுவெல்ல பகுதியிலுள்ள இரும்புக்கடையொன்றில் இன்று திடீரென இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பழைய இரும்புப் பொருளொன்றை வெட்டும் போது இவ்வனர்த்தம் பதிவானதாகவும் ஆட்லெறிக்கு பயன்படுத்தப்படும் ஒரு வகை ரவைகள் சில வெடித்ததிலேயே குறித்த வெடிப்புச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவம் பதிவான இடத்துக்கு அருகில் இரும்பு - உருக்கு தொழிற்சாலையொன்றும் உள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக