siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 16 அக்டோபர், 2013

இணையத் தொடர்பு சேவைகள் மூலம் தகவல் திரட்டும் அமெரிக்க !


 
யாஹூ, ஜீமெயில், பேஸ்புக், ஹாட் மெயில் போன்ற இணையத்தள சேவைகள் மூலம் லட்சக்கணக்கானவர்களின் தொடர்புகளை அமெரிக்க உளவுப்பிரிவுகளில் ஒன்றான தேசிய பாதுகாப்பு அமைப்பு (என்எஸ்ஏ) சேகரித்து வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும், இதுகுறித்து என்எஸ்ஏ அமைப்பு செய்தி தொடர்பாளர் கூறுகையில், சாதாரண அமெரிக்கர்களின் விவரங்களை சேகரிப்பது எங்கள் நோக்கம் இல்லை. பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்களை மட்டும்தான் நாங்கள் கண்காணிக்கிறோம். குறிப்பிட்ட முகவரிகளை மட்டுமே நாங்கள் கையகப்படுத்தி, தகவல்களை சேகரித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
   
அமெரிக்காவில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது. இதைத் தடுக்க அமெரிக்க அரசின் கீழ், பல உளவுப் பிரிவு அமைப்புகள் இயங்கி வருகின்றன. பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் மற்றும் ஊடுருவல்களை இந்த அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. இந்நிலையில் என்எஸ்ஏ, இணையதள சேவைகள் மூலம்

அமெரிக்கர்கள் உள்பட லட்சக்கணக்கானவர்களின் விவரங்களை சேகரித்து வைத்துள்ளதாக அமெரிக்காவின் "வாஷிங்டன் போஸ்ட்' செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
யாஹூ, ஜீமெயில், பேஸ்புக், ஹாட் மெயில் போன்ற இணையத்தள சேவைகள் மூலம் அனுப்பப்படும் தகவல்களை கொண்டு

 லட்சக்கணக்கான அமெரிக்க மக்களின் விவரங்களை என்எஸ்ஏ சேகரித்து வைத்துள்ளது. இதுபோல் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.அமெரிக்க உளவுப் பிரிவுகளின்

செயல்பாடுகளை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டிய ஸ்னோடென் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் இதுகுறித்து தெரியவந்துள்ளது.
அவ்வாறு சேகரித்த மக்களின் விவரங்களை கொண்டு சர்வதேச அளவில் ஏதேனும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்பதை

என்எஸ்ஏ அமைப்பு ஆய்வு செய்து வருகிறது. கடந்த ஆண்டு 4,40,000க்கும் அதிகமான இ-மெயில் தொடர்புகளை என்எஸ்ஏ சேகரித்துள்ளது. இதுபோன்ற செயல்பாடுகளை பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்புடன் என்எஸ்ஏ செய்து வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக