மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் யானைக்கும் மனிதனுக்குமிடையிலான மோதலில் தன்னை பாதுகாப்பதற்காக ஆற்றில் குதித்த விவசாயியொருவர் முதலையிடம் சிக்கி படுகாயமடைந்துள்ளார்..
போருக்கு பின்னர் மீள்குடியேற்ற கிராமமான உறுகாமம் கிராமத்தில் நேற்று இந்த பரிதாபகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதே கிராமத்தில் சம்பவத்திற்கு முதல்நாள் சனிக்கிழமை யானைக்கும் மனிதனுக்குமிடையிலான மோதலில் 12வயது டைய் ஜெமில் தஸ்லிம் என்ற மாணவன்; யானையின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளான்.
தமது கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மழை வேண்டி பிரார்;த்தனை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்த மாணவன் சென்றிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது..
குறித்த சம்பவம் இடம்பெற்று 24 மணி நேரத்திற்குள் யானைக்கும் மனிதனுக்குமிடையிலான மற்றுமோர் மோதலில் தப்பி முதலையின் பிடியில் சிக்கி காயமடைந்த விவசாயி 27வயதான பி. செல்வக்குமார்
தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தனது கால்நடை பண்ணையில் பால் கறப்பதற்காக சென்றவேளை எதிர்கொண்ட யானையால் துரத்தப்படடு ஆற்றில் பாய்ந்ததாக இந்த சம்பவம் தொடர்பாக கூறப்படுகின்றது.
காட்டு யானைகளின் தொல்லை தற்போது இரவில் மட்டுமல்ல பகலிலும் அதிகரித்து வருவதாவே உறுகாமம் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமது கிராமத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற இந்த சம்பவங்களையடுத்து சில குடும்பங்கள் தற்போது வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும்
வனஜீவராசிகள் தினைக்களத்திற்கு அறிவிக்கும் போது வருகை தந்து யானைகளை காடுகளுக்குள் விரட்டினாலும் பழக்கப்பட்ட யானைகள் போன்று அவை மீண்டும் அதேயிடங்களுக்கு வருவதாகவும் உள்ளுர் மக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.
அதேவேளை செங்கலடி- பதுளை நெடுஞ்சாலையை அண்மித்த காடுகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பகல் முழுவதும் காணப்பட்ட யானைக் கூட்டமொன்று வனஜீவராசிகள் தினைக்கள அதிகாரிகளினாலும் காவல் துறையினராலும் பகல் முழுவதும் கண்காணிக்கப்பட்டு மாலையில் சத்த வெடிகள் மூலம் காடுகளுக்குள் விரட்டப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக