siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 19 அக்டோபர், 2013

புகைத்தலினால் நாளாந்தம் 60 பேர் உயிரிழக்கின்றனர்:


 புகைத்தலுடன் தொடர்புபட்ட சுகாதார பிரச்சினைகளினால் தினமும் ஏறக்குறைய 60 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொற்றா நோய்கள் பலவற்றின் முக்கிய காரணியாக விளங்குவது புகைப்பிடித்தல் செயற்பாடாகும். புகைப்பிடித்தலுடன் சம்பந்தப்பட்ட சுகாதாரப் பிரச்சினைகளினால் தினமும் ஏறக்குறைய 60 பேர் மரணிப்பதுடன் வருடமொன்றுக்கு 20 ஆயிரம் பேர் வரை உயிர் துறக்கின்றனர்.
புகைத்தலினால் ஏற்படும் பாதிப்புகளின் தன்மைகளை மாணவர்கள்

நேரடியாக காண்பதற்காக மஹரகம புற்று நோய் வைத்தியசாலையை பார்வையிட அனுமதிக்க வேண்டும். மேலும், கொழும்புக்கு சுற்றுலாவை மேற்கொள்ளும் சிரேஷ்ட தர வகுப்பு மாணவர்களை அங்கொடை தேசிய உளச் சுகாதார நிறுவனத்திற்கும் மஹரகம புற்று நோய் வைத்தியசாலைக்கும் அழைத்துச் செல்ல வேண்டும்.

மஹரகம புற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் புற்று நோயாளர்களில் அதிகமானோர் 35 வயதுக்கும் 45 வயதுக்குமிடைப்பட்டவர்கள். இவர்களில் அதிகமானோர் தீவிர புகைப்பிடித்தல் பழக்கமுடையவர்களாக காணப்படுகின்றனர்.

வாய் மற்றும் நுரையீரல் புற்று நோய்ச்சிகிச்சைக்காக அரசாங்கம் வருடமொன்றுக்கு 15 மில்லியன் ரூபாவை செலவு செய்கிறது. புகைத்தலால் பாதிக்கப்படுவோரை மருந்துகளினால் பாதுகாக்க முடியாது. ஒரு புற்றுநோயாளருக்கு ஊசி ஏற்றுவதற்காக 3 இலட்சம் ரூபா செலவிடப்படுகிறது. இருந்தும் புற்று நோயாளர்களை மருந்துகளினால் காப்பாற்ற முடியாமல் இருக்கிறது என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக