சிரியாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது.
இதில் ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் பலியாகி உள்ளதுடன், மில்லியன் கணக்கானவர்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
பச்சிளம் குழந்தைகள், பெண்கள் உட்பட பலரும் கொடூரமாக கொலை செய்யப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சிரியாவில் நடந்த இரசாயன தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் தாக்குதல் நடத்த திட்டமிட்டன.
ஆனால் இதற்கு தொடர்ந்து ரஷ்யா மறுப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் ரஷ்யாவின் கோரிக்கையின் படி, தங்களிடம் உள்ள இரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க சிரியா சம்மதம் தெரிவித்துள்ளது. இதன்படி அமெரிக்காவின் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முகாம்களில் சிரியா அகதிகளின் நிலை குறித்து பிபிசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இங்குள்ள மக்களின் நிலை சற்றே கண்கலங்க வைக்கிறது.
பசியில் துடிக்கும் பிஞ்சுக் குழந்தைகள், கையில் எதுவுமே இல்லாத நிலையில் அடுத்த என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் விழி பிதுங்கி இருக்கும் பெற்றோர்கள்.
11 வயது சிறுவன் ஒருவன், கடுமையான வலி வேதனையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
நான் பள்ளிக்கூடத்தில் இருக்கும் போது ஏன் குண்டு போட்டார்கள்? ஏன் அவ்வாறு செய்தார்கள்? என அழுது கொண்டே கூறியிருப்பது நெஞ்சை உருக்குவதாய் உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக