siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 30 மார்ச், 2016

டெலிபோனுக்கு வாட்ஸ் அப்பில் இருந்து பேசும் வசதி?

பேஸ்புக், டுவிட்டர் சமூக வலைத்தளங்களுக்கு நிகராக, செல்போன் வாடிக்கையாளர்களிடம் ‘வாட்ஸ் அப்‘ பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. எஸ்எம்எஸ், போட்டோ, வீடியோக்கள் போன்றவற்றை  கண் இமைக்கும்  நேரத்தில் நண்பர்களுக்கு அனுப்ப உதவும் தகவல் தொழில்நுட்பப் புரட்சி சாதகமாக கருதப்படுகிறது வாட்ஸ் அப். உலக அளவில் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை  நூறு கோடியாக  உயர்ந்துள்ளதாக சமீபத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்தது. வாட்ஸ் அப் வசதி...

வெள்ளி, 25 மார்ச், 2016

மீண்டும் தீவிரமடைகின்றது டெங்கு நோய்

இலங்கையின் சகல பாகங்களிலும் டெங்கு நோய் மீண்டும் தீவிரமடைந்து வருகின்றது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று கருத்து வெளியிட்ட அவர், இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களிலும் நாடு முழுவதிலும் 12,360 டெங்கு நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர். ஜனவரியில் 6541 பேரும், பெப்ரவரியில் 4,220 பேரும், மார்ச்சில் 1,600 பேரும் இந்த நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று மாதங்களிலும் இந்நோய்க்கு...

செவ்வாய், 22 மார்ச், 2016

திருடர்களை வெடி கொழுத்தி துரத்திய மக்கள்!

 நீர்வேலியில்   திருடர்கள் தொல்லை! வெடி கொழுத்தி துரத்திய மக்கள் நீர்வேலி மற்றும் கோப்பாய் பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக திருடர்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை வெடி கொழுத்தி திருடர்களை துரத்திய சம்பவம் கோப்பாயில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  நேற்றைய தினம் அதிகாலை 1 மணியளவில் கோப்பாய் வடக்கில் திருடர்களின் நடமாட்டத்தால் நாய்கள் குரைத்ததால் விழிப்படைந்த மக்கள் பட்டாசுகளை...

ஞாயிறு, 20 மார்ச், 2016

தேநீர்­க்கடை சமோ­சாவில் ஓணான் அதிர்ச்சி சம்­பவம்?

                      விரு­து­ந­கரில் தேநீர்க் கடை ஒன்றில் வெங்­கா­யத்­துக்கு பதில் ஓணானை உள்ளே வைத்து சமோ­சாவை விற்­பனை செய்­துள்ளார் கடைக்­காரர். இதனை வாங்கி சாப்­பிட்­டவர் அதிர்ச்­சியில் மயங்­கியே  விழுந்­து­விட்டார். விரு­து­ந­கரில் துப்­பு­ரவுப் பணியில் ஈடு­பட்­டி­ருந்த ‌பணி­யா­ளர்கள் சில‌ர், அங்­குள்ள ஒரு கடை­யில் சாப்­பிட்டுள்­ளனர். அப்­போது‌ ஓணா­னுடன் இருந்த சமோ­சாவை ‌சாப்­பிட்ட...

ஞாயிறு, 6 மார்ச், 2016

வைத்தியசாலை மாடியிலிருந்து பாய்ந்து, நபரொருவர் தற்கொலை!

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நபரொருவர் 12 ஆவது மாடியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்த நபர் தலவத்துகொட, மாதிவல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபரொருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மருதானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு  வருகின்றனர். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

வெகுவிரைவில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள்.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளிவரும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்ற இந்த பரீட்சையில் 6 இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரீட்சாத்திகள் தோற்றியதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே.புஸ்பகுமார  தெரிவித்துள்ளார். மேலும் அதிகமான பரீட்சாத்திகள் தோற்றிய ஒரு பரீட்சையாக இந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை அமைந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன்...

வெள்ளி, 4 மார்ச், 2016

சீவல் தொழிலாளர்களுக்கு முட்டிகள் வழங்கப்பட்டது ?

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பனை தென்னை அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாகச் சீவல் தொழிலாளர்கள் 25 பேருக்கு 500 ரூபா பெறுமதியான 10 முட்டிகள் வழங்கப்பட்டுள்ளன என பனை தென்னை அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் கே.வரதராஜன்  தெரிவித்தார். பனங்கட்டி உற்பத்தியை உக்குவிக்கும் முகமாக அங்கத்தவர் 25 பேருக்கு முதற்கட்டமாக இவை வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு கூடுதலான பனங்கட்டியை உற்பத்தி செய்யும் நோக்கோடு சீவல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை...

வியாழன், 3 மார்ச், 2016

நீங்கள் இளமையுடன் இருக்க சர்க்கரை வள்ளி கிழங்கு?.

ஆரோக்கியத்தை பேணி காப்பதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் அந்தந்த சீசனில் கிடைக்கும் பொருட்களை சாப்பிட வேண்டும். ஏன்என்றால் அந்தந்த சீசனில் கிடைக்கும் உணவுகள் அந்தந்த சீதோஷண நிலையோடு தொடர்புடையது. அந்த சீதோஷண நிலைக்கு தேவைப்படும் சக்தியை அந்த உணவு நமது உடலுக்கு தரும். இப்போது பனிக்காலம். பனிக்காலத்தில் நம் உடலுக்கு அதிக சக்தி தேவைப்படும். அதற்கு தக்கப்படி உடலுக்கு ஊட்டம் தரக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும். அதற்கு ஏற்ற காய், கனி, கிழங்கு வகைகளை...

புதன், 2 மார்ச், 2016

உயர் பெருஞ்சாலைகளை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

கொழும்பில் இரண்டு உயர்ந்த பெருந்தெருக்களை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  கொழும்புக்குள் நாளாந்தம் அதிகரித்து வரும் வாகனங்களின் நெருக்கடியை சமாளிக்கும் வகையிலேயே இந்த திட்டத்துக்கு ஒப்புதல் இன்று வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு உயர்ந்த பெருந்தெரு களனி முதல் ராஜகிரிய வரையிலான பகுதிக்கு 6.9 கிலோமீற்றர் தூரத்துக்கு அமைக்கப்படவுள்ளது. அது பத்தரமுல்லை, மாலபோ அத்துருகிரிய மற்றும் வெளியக சுற்றுவீதி ஆகியவற்றுடன் இணைக்கப்படவுள்ளது. இரண்டாவது...