ஐரோப்பிய நாடானா ஸ்பெயினில் கிழக்கு மாட்ரிட்டில் தாயைக் கொன்று, உடலை வெட்டி, உடலின் பாகங்களை சாட்பிட்டார் என்ற குற்சாட்டில் மகன் 2019 ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது அந்த நபர் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நண்பர் ஒருவர் காவல்துறையினரிடம் கவலையை வெளிப்படுத்தியதை அடுத்து சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் வீட்டைச் சுற்றி உடல் பாகங்கள் சிதறிக்கிடப்பதை கண்டுபிடித்தனர்.
அத்துடன் உடல் பாகங்கள் பிளாஸ்டிக் கொல்கலன்களில் வைக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து மகனை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
26 வயதுடைய ஆல்பர்டோ சான்செஸ் கோமேஸ் (Alberto Sánchez Gómez) என்பவர் 66 வயதுடைய சொந்த தாயின் (மரியா சோலெடாட் கோமேஸ் María Soledad Gómez) கழுத்தை நொித்துகொன்றுள்ளார். பின்னர் உடலை கூறுகூறாக வெட்டி சாட்பிட்டதாகவும் சில உடற்பாகங்களை நாய்க்கு சாட்பிடக் கொடுத்ததாகவும் அவர் காவல்துறையினரிடம் வாக்குமூலம்
அளித்துள்ளார்.
கோமேஸ் கைது செய்யப்படுவதற்கு முன்னர் மனநிலை பாதிக்கப்பட்டும் போதைப்பொருள் பழக்கத்தாலும் அவதிப்பட்டதாகக்
கூறப்படுகிறது.
விசாரணை தொடர்கிறது. பிரதிவாதி நீதிமன்றத்தில் தனது தாயை துண்டித்து சாப்பிட்டதாக நினைவில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக