siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 11 அக்டோபர், 2017

நான்கு மணி நேரம் வடமராட்சியில் கிணற்றினுள் ஒழிந்திருந்த பெண்

வங்கிக் கடனை செலுத்த முடியாமல், வங்கி ஊழியர்களுக்கு பயந்து நான்கு மணி நேரமாக குடும்ப பெண் ஒருவர் கிணற்றுக்குள் ஒழிந்திருந்த பரிதாப சம்பவம் ஒன்று வடமராட்சி பகுதியில்
 இடம்பெற்றுள்ளது.
நுண்கடன் திட்டங்களால் வடக்கில் அதிகளவில் குடும்ப பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நாளுக்கு நாள் கொடுமைகளையும் வேதனைகளையும் அனுபவித்து வருவதாகவும் இந்த நுண்கடன் திட்டங்களை நிறுத்துமாறு மத்திய வங்கி ஆளுநரிடம் பெண்கள் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடக்கில் உள்ள நிதி நிலமைகள் கடன் திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு மத்திய வங்கி ஆளுநர் குமாரசுவாமி இந்திரஜித் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் வடக்குக்கு கடந்த 6,7 ஆம் திகதிகளில் இரண்டு நாள் விஜயம் செய்திருந்தனர்.
யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பொது அமைப்புக்கள் வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தனர். அதில் யாழில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்குறித்த பரிதாப சம்பவத்தை ஒரு பெண் அனைவரிடமும் பகிர்ந்திருந்தார்.
அதாவது கிராமப்புறங்களில் பல தரப்பட்ட நிதி நிறுவனங்கள் குவிந்துள்ளன. ஆளுக்காள் போட்டி போட்டு நிதிகளை வழங்குகிறார்கள். பெண்களின் பலவீனங்களை பயன்படுத்தி குறிப்பாக பெண்களையே இலக்கு வைத்து இந்த கடன் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பண தேவை எங்கு உள்ளது என தெரிந்து அந்த இடங்களை தெரிவு செய்து கடனை வழங்குகிறார்கள். பின்னர் அவர்களை படாத பாடுபடுத்துகிறார்கள். கொடுத்த கடனுக்கும் மேலதிகமாக வட்டியின் தொகை அதிகரித்து அதை கட்டமுடியாமல் தற்கொலை செய்யும் நிலைக்கு பொண்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
வடமராட்சி பகுதியில் ஒரு பெண் குடும்பத்தின் கஸ்ட நிலை காரணமாக 3 நிதி நிறுவனத்திடம் இருந்து கடனை பெற்றிருந்தார். வாராந்தம் பணத்தை செலுத்தி வந்துள்ளார்.
இறுதியில் அவரால் வாராந்தம் செலுத்த முடியாமல் போன போது, இரு வாரம் களித்து 3 நிதி நிறுவனங்களுடைய ஊழியர்களும் அவருடைய வீட்டுக்கு வந்துள்ளனர். அங்கு வந்து இருந்து தகாத வார்த்தைகளை பிரயோகித்துள்ளனர்.
வீட்டை விட்டு செல்ல மாட்டோம் என கூறி அங்கேயே இருந்துள்ளனர். குறித்த பெண் அவர்களுக்கு பயந்து அருகில் உள்ள காணியில் இருந்த கிணற்றில் இறங்கி பதுங்கி இருந்துள்ளார்.
நான்கு மணி நேரமாகியும் அந்த நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டை விட்டு செல்லாத காரணத்தினால் அவர் நான்கு மணி நேரமும் கிணற்றுக்குள்ளேயே பதுங்கி இருந்துள்ளார்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னே அவர் வெளியே வந்துள்ளார். இது பெரும் வேதனைக்கு உரிய விடயம் இவ்வாறு பல இடங்களில் நாளுக்கு நாள் நடைபெற்று வருகிறது. அதே போன்று கிழமைக்கு கிழமை பணம் செலுத்தாது விட்டால் அதி கூடிய தண்டப்பணம் என
 கூறி அறிவிடுகிறார்கள்.
தற்போது புதிய செயற்பாடாக நான்கு மோட்டார் சைக்கிள்களில் இராணுவத்தினர் சுற்றிவளைப்பதுபோல் சுற்றி வளைத்து பிடிக்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள் இந்த
 நிதிநிறுவன ஊழியர்கள்.
கடனை பெற்று மீள செலுத்தாமல் கஸ்டப்படும் பெண்களின் வீட்டில் நின்மதியின்மை, தற்கொலை வெளி இடங்களில் பாதுகாப்பு இல்லை, சமூகத்தால் வெறுக்கப்படல் போன்ற இக்கட்டான நிலைக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குடும்ப பெண்கள் ஏமாந்து பெற்ற கடனை செலுத்த முடியாமல் குடும்பஸ்தர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. நிதி நிறுவனங்கள் தடைசெய்யப்பட வேண்டும் அல்லது கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
அதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் மத்தியில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அங்கு பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்களால் கோரிக்கை 
முன்வைக்கப்பட்டது.
இங்கு அழுத்தவும் நவற்கிரி .கொம்1 செய்தி >>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக