siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

ஹற்றன் நாவலப்பிட்டிநீரில் மூழ்கியது

மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதுடன் நுவரெலியா ஹட்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் மண்சரிவுகள் வெள்ளப்பெருக்கும்
 ஏற்பட்டுள்ளது.
நேற்று(14.10.2017) மாலை 3 மணியளவில் நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரி பிரதேசத்தில் ஏற்பட்ட மண் சரிவினால் மூன்று மணித்தியாலங்கள் வரை நோட்டன் அட்டன் மார்க்க பஸ் போக்குவரத்து தடைப்பட்டமையினால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். மாலை 6 மணிவரை நோட்டன். ஒஸ்போன் மற்றும் லக்ஷபான பகுதிக்காக பஸ் போக்குவரத்து முற்றாக
 தடைப்பட்டது.
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரும் பிரதேசவாசிகளும் மண் மேட்டை அப்புறப்படுத்தி பாதையை சீர் செய்த பின் ஒரு வழி போக்குவத்தாக போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.
மேலும் ஹட்டன் நகர பகுதியில் அட்டன் பொலிஸ் நிலைய விளையாட்டு மைதானம் மற்றும் தபாற் கந்தோர் வளாகம் நீரில் மூழ்கிய நிலையில் குடியிருப்பொன்று பகுதியளவில் சேதமானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்த அதேவேளை நாவலப்பிட்டி நகரின் தபாற்கந்தோர் வீதியும் நீரில் மூழ்கியதாக நாவலப்பிட்டி பொலிஸார்
 தெரிவித்தனர்.

கினிகத்தேன ஹட்டன் பிரதான வீதியிலும் மண்மேடு சரிந்துள்ளமையினால் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் பாதைகளில் வழுகல் தன்மை ஏற்பட்டுள்ளமையினால் வாகனங்களை அவதானத்துடன் செலுத்துமாறும் பொலிஸார்
 வேண்டுகோள் விடுத்தனர.
மேலும் நோட்டன் விமலசுரேந்திர லக்கஷபான நீர்தேக்கம் காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைந்து வருகின்றமையினால் கரையோர மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக