siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 2 ஏப்ரல், 2018

அமரர் தம்பு செல்வராஜா 4ம் ஆண்டு நினைவஞ்சலி.02.04.18

மண்ணில் 12, ஆகட்ஸ்.1933. — விண்ணில் :2 ஏப்ரல் 2014
,யாழ்.  நவற்கிரி புத்தூரைப் பிறப்பிடமாகவும், கனடா-- நவற்கிரி  ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  அமரர் தம்பு செல்வராஜா  அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் வாழ்வில் ஒளியேற்றி 
பிரகாசிக்க வந்துத்த அப்பாவே  
என்றென்றும் நீர் எம்முடனே 
வாழ்ந்திருப்பீர் என்றிருந்தோம் 
இடைநடுவில் எமைவிட்டு 
இறைவனடி சென்றீரோ

குடும்பத் தலைவநாக    
நாம் நிலைகுலைந்து நிற்கையிலே 
வாழ்க்கைப் படகிற்கு துடுப்பாக நின்றீரே

எல்லோருக்கும் வழிகாட்டி 
எமை வாழ வைத்தீரே 
பண்பிலே உயர்ந்தவனாய் 
பழகுவோர்க்கு இனியவனாய் 
பாசமுள்ள சகோதரனாய் 
அன்பிலே சிறந்தவனாய்

உற்றார் உறவுகளை உன் பக்கம் ஈர்த்தவனே 
எமை விட்டு சென்றின்று ஓராண்டு ஆனதுவே 
நான்கு ஆண்டு டென்ன ஓராயிரம் 
ஆண்டானாலும்
மறவாதையா உங்கள் நினைவு 
நான்கு ஆண்டு டென்ன உயிருள்ளவரை 
அஞ்சலிப்போம் உங்கள்  ஆத்மா சாந்திபெற
 இறைவனை வேண்டுகின்றோம் ஓம், சாந்தி, சாந்தி.----
மகன் பலராஜா  புலம்பல் ------
எனக்கு உயிர் தந்த உயிா் மனறந்து நான்கு ஆண்டுகள் 
ஆகியும் எனது மனதில் வாழூம் தெய்வத்தின் நினைவு நாள் இன்று
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
உங்கள்  பிரிவால் துயறுரும் மனைவி பிள்ளைகள்  சகோதர்கள் 
,பேரப்பிள்ளைகள் பெறமக்கள் மருமக்கள்  உறவினர்கள்.
தகவல்
குடும்பத்தினர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக