சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூர் ஊடாக பிரித்தானியா செல்ல முற்பட்ட யாழ். இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் அவர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதேசத்தை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் சிங்கப்பூர் ஊடாக பிரித்தானியா செல்ல முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, குறித்த நபர் சிங்கப்பூரிலிருந்து பிரித்தானியா செல்வதற்காக பயண சீட்டொன்றை வைத்திருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சில போலியான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சந்தேநபருக்கு பிரித்தானியா செல்வதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய நபர் பிரித்தானியாவில் இருக்கின்றமை ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க சந்தேகநபர் விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக