கிளிநொச்சி பாரதிபுரத்தில் சிகரெட் புகைத்தவாறு பெற்றோல் போத்தலுடன் பயணித்தவர் தீ பற்றிக் கொண்டதால் படுகாயமடைந்து உயிரிழந்தார். அதே இடத்தைச் சேர்ந்த இராசேந்திரம் றெனோல்ட் றீகன் (வயது - 34) என்ற குடும்பத் தலைவரே இவ்வாறு உயிரிழந்தார்.
மூடி இல்லாத போத்தலில் பெற்றோல் கொள்வனவு செய்து விட்டு பயணிக்கும் வேளை போத்தல் நழுவி விழ அதனை எடுக்கக் குனிந்த போது வாயிலிருந்த சிகரெட்
நெருப்புப்பட்டு தீ பற்றியது.
இதனால் அவரது நெஞ்சு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தீ பற்றி கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். சிகிச்சை பயனளிக்காது நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளமை
குறிப்பிடத்தக்கது-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக