இன்று காலை எசெக்ஸில் அமைந்துள்ள தொழிற்சாலைப் பகுதியில் லொறி கொள்கலன் ஒன்றினுள்ளிருந்து 39 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.உயிரிழந்தவர்களில் ஒரு
சிறுவனும் அடங்குவதாக ஆரம்பக்கட்டத் தகவல்கள் கூறுகின்றன.அதிகாலை 1.40 மணியளவில் கிரெய்ஸ்ஸில் உள்ள வோட்டர்கிளேட் தொழிற்சாலைப் பகுதியில் சடலங்கள் அடங்கிய லொறி
கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் மற்றும் அம்புலன்ஸ் குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.39 பேரும் சம்பவ
இடத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் வடக்கு
அயர்லாந்தைச் சேர்ந்த 25 வயதான லொறி
ஓட்டுநர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த வாகனம் பல்கேரியாவிலிருந்து பயணித்ததாகவும் சனிக்கிழமை வேல்ஸில் உள்ள ஹோலிஹெட்வழியாக இங்கிலாந்துக்குள் நுழைந்ததாகவும் பொலிஸார்
கருதுகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக