நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் பிரேசில் நாட்டு பிரஜை ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.இலங்கைக்கு போதைப்பொருளை கடத்தி வந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதை
அடுத்தே குறித்த நபருக்கு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.குற்றவாளி இலங்கைக்கு போதைப்பொருளை கடத்தி வந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
செய்யப்பட்டார்.அவர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புபிரிவினரிடம் கையளிக்கப்பட்டார்.இதனடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக