siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 23 அக்டோபர், 2019

மூன்று வருடங்களாக 16 வயது இளம் யுவதிக்கு நடந்த கொடுமை

16 வயதான இளம் யுவதியை மூன்று வருடங்களாக வல்லுறவுக்கு உட்படுத்தி வந்ததாக கூறப்படும் சந்தேகநபர்கள் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக மொரொன்துடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த யுவதி கீழே விழுந்து விட்டதாக கூறி நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அந்த யுவதி கடும் உளவியல் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக அறிந்து அது குறித்து மொரொன்துடுவ பொலிஸாருக்கு 
அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் அப்போது யுவதியை இரண்டு பேரும் நீண்டகாலமாக வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.உடனடியாக செயற்பட்ட பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் 31 மற்றும் 45 வயதானவர்கள் எனவும், இவர்களில் ஒருவர் சக்கர நாற்காலியை பயன்படுத்தும் அங்கவீனமடைந்த நபர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.சம்பவம் குறித்து மொரொன்துடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக