siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 27 அக்டோபர், 2019

.இரு மனைவிகள் இருந்தும் கவனிக்க யாருமில்லை.அநாதையாக இறந்த கோடீஸ்வரர்

மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த நிகில் ஜவேரிக்கு 200 கோடி மதிப்புள்ள சொத்து இருந்தும் கடைசி காலத்தில் கவனித்துக்கொள்ள ஆள் இல்லாமல் மருத்துவமனையில் உயிரிழந்தார். மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்தவர் நிகில் ஜவேரி. இவருக்கு 200 கோடி மதிப்புள்ள
 சொத்துகள் இருந்தும் மருத்துவமனையில் அநாதையாக உயிரிழந்துள்ளார்.ஜவேரியின் உடலைக்கூட வாங்க முன்வராத உறவுகள், அவரது 200 கோடி சொத்துக்கு சண்டையிட்டு வருகின்றனர்.நிகில் ஜவேரிக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இரண்டாவ
து மனைவிக்கு ஒரு மகனும் உள்ளார். இரண்டு
 மனைவிகளையும் ஜவேரி விவாகரத்து செய்துள்ளார்.2009-ம் ஆண்டு ஜவேரி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். 
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஐவேரிக்கு நரம்பியல் தொடர்பான பிரச்னைகள் இருப்பதாகக் கூறினர்.தன் சகோதரி 
வீட்டில் வசித்து வந்தவர் திடீரென கடந்த 2013-ம் ஆண்டு ஜவேரி மாயமானார்.அவரைக் கண்டுபிடித்து தரக் கோரி இரு மனைவிகளும் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
எங்கு தேடியும் எந்தத் தகவலும் இல்லை. 
ஜவேரிக்குச் சொந்தமான நிலத்தின் மதிப்பு 200 கோடி எனத் தெரியவந்ததையடுத்து இரண்டு மனைவிகளும் சொத்துக்கு உரிமைகொண்டாட ஆரம்பித்தனர்.இந்நிலையில், 2014-ம் ஆண்டு ஜவேரியைக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அப்போது அவருக்கு மனநலம் தொடர்பாக சில பிரச்னைகள் இருந்தது.
  ஜவேரியைத் தங்களுடன் அழைத்துச் செல்ல குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். இதையடுத்து ஆதரவற்றோர் விடுதியில் காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்டனர். மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவர் மருத்துவமனையில் 
அனுமதிக்கப்பட்டார்
2017-ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவையடுத்து ஜே.ஜே.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், நிமோனியா காய்ச்சல் பாதிப்பால் கடந்த சில தினங்களுக்கு முன்பு 
அவர் மரணமடைந்தார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் ஜே.ஜே.மருத்துவமனையில் நிகில் ஜவேரி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் மரணமடைந்ததையடுத்து உடற்கூறாய்வு செய்ய காவல்துறை முடிவு செய்தனர். ஆனால், அவரது
 உடலுக்கு யாரும் உரிமைகோராததால் உடற்கூறாய்வு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.ஒருவழியாக அமெரிக்காவில் வசிக்கும் அவரின் மகன் ரயானை தொடர்புகொண்டனர். அவரும் உடலை வாங்கிக்கொள்ள 
சம்மதம் தெரிவித்தார்.
அமெரிக்காவில் இருந்து வந்த ரயான்.15
வெள்ளிக்கிழமையன்று ஜவேரியின் உடலைப் பெற்றுக்கொண்டார்.2015-ம் ஆண்டு நிகில் ஜவேரிக்கு சொத்துக்கு உரிமைக்கோரி அவரின் 
முதல் மனைவி தீப்தி
 பஞ்சால் நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார்.இதை எதிர்த்து இந்த ஆண்டு மார்ச் மாதம் ரயான், தீப்தி மற்றும் அவரின் அத்தையின் கணவர்கள் மூன்று பேர் மீது காவல்நிலையத்தில் மோசடி 
வழக்கு தொடுத்தார்.
பிரமாணப்பத்திரத்தில் ஜவேரியின் கையொப்பத்தில் மோசடி செய்ததாகப் புகார் கூறினார். இந்தப் புகாரின்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக