டென்மார்க்கில் இருந்து பிரான்ஸ் சென்ற, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் உடுவில் பகுதியைச் சேர்ந்த 33 வயதான றொனால்ட்டன் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.தனது பெரிய தாயாரின் இறுதிச் சடங்கிற்காக
பிரான்ஸ் சென்ற நிலையிலேயே குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.பொலிஸாரின் தகவல்களை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;
டென்மார்க்கில் வசிக்கும் குறித்த நபர், தனது பெரிய தாயாரின் இறுதிச் சடங்கிற்காக குடும்பத்துடன் பிரான்ஸ் சென்றிருந்த நிலையில், அடையாளம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டு கொலை
செய்யப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் கடந்த.(11.10.2019 )11ம் திகதி இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் படுகொலை செய்யப்பட்டமைக்கான காரணம் தெரியாத நிலையில், பிரான்ஸ் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்
செய்தி வெளியிட்டுள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக