siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 31 மார்ச், 2020

கொரோனாவினால் உயிரிழந்த மகனின் அதிர்ச்சியில் மாரடைப்பினால் மரணமான தந்தை

சுவிர்சர்லாந்தில் குடியுரிமையைக் கொண்ட யாழ்ப்பாண இளைஞன் ஒருவர் சில தினங்களிற்கு முன்னர் கொரோனா தொற்றினால் உயிரிழந்திருந்த நிலையில், அந்த அதிர்ச்சியினால் அவரது தந்தையும் உயரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம்  கொக்குவிலை  சேர்ந்த குணரட்ணம் கீர்த்தீபன் என்ற இளைஞன் தற்போது சுவிற்சர்லாந்தில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். சில தினங்களின் முன்னர் கொரோனால் தொற்றினால் அவர் உயிரிழந்துள்ளார்.இந்த நிலையில்,  சுவிற்சர்லாந்தில் வசிக்கும் அவரது...

தீவிரமடையும் கொரோனா வைரஸ் நீர்கொழும்பில் இரண்டாவது நபர் மரணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கொழும்பு IDH  வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 64 வயதுடையவர் என சுகாதார  அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபர் இவராகும். மேலும் 6 பேர் ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இலங்கையில்...

ஞாயிறு, 29 மார்ச், 2020

பலியான 260 கொரோனா நோயாளிகள் பிணவறையாக மாறிய பிரித்தானிய விமான நிலையம்.

கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸால் கடந்த சில மாதங்களாக உலக மனிதர்களின் உயிர்கள் மாய்ந்துவரும் நிலையில், பிரித்தானியாவில் இன்று ஒரு நாளில் 260-பேர் உயிரிழந்துள்ளனர்.பிரித்தானியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,019-ஐ எட்டியுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.இக் கொரோனா  வைரஸால் நாளுக்கு நாள் உலகத்தில் இறப்பு வீதம் கூடிக்கொண்டு வருகின்றதே தவிர குறைந்தமாதிரி  புள்ளிவிபரங்கள் தெரிவிக்கவே இல்லை.மேலும் பிரித்தானியாவில் இவ்வாறு அதிகமானோர்...

மரண அறிவித்தல் திரு சண்முகநாதன் விக்கினேஸ்வரன் 28-03-20

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் விக்கினேஸ்வரன் (கண்ணன்)அவர்கள் 28-03-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.  அன்னார், காலஞ்சென்ற சண்முகநாதன், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவலிங்கம்,  நாகம்மா(கைராசி) தம்பதிகளின் அன்பு மருமகனும், கலையரசி(கலா) அவர்களின் அன்புக் கணவரும், சொபியா, பபியான், சொபியான் ஆகியோரின் அன்புத் தந்தையும், தனுசான், ரஜித்தா  ஆகியோரின் அன்பு...

வெள்ளி, 27 மார்ச், 2020

அமரர் திரு,ஆ ,க,சுப்பிரமணியம்.9ம் ஆண்டு நினைவஞ்சலி.27,03,20

மண்ணில் :06- பெப்ரவரி 1932 — விண்ணில் : 06 ஏப்ரல் 2011 திதி -27-பங்குனி -2020-வெள்ளிக்கிழமை .இன்று யாழ். மாவிடடபுரத்தை பிறப்பிடமாகவும், நவற்கிரி புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த.அமரர் திரு .(ஆ.க) கந்தையா. சுப்பிரமணியம் (மணியம் ) அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி நிமிடங்களாய் நாட்களாய் மாதங்களாய்- 27-03-2020- இன்று ஒன்பது ஆண்டுகளாய் வளர்ந்து நிற்பது உங்கள் பிரிவின் சோகம் அனைவராலும் ஐயா ஐயா என அழைக்கபட உங்கள் நீங்காத நினைவுகளுடன் ஒன்பது...

வியாழன், 26 மார்ச், 2020

மரண அறிவித்தல் செல்வி குணசேகரன் ஜெசீனா- 25 03- 20

மண்ணில்-17 12- 1997  விண்ணில்-25 -03-2020 சுவிஸ் Solothurn ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குணசேகரன் ஜெசீனா அவர்கள் 25-03-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், நல்லையா பூமணி தம்பதிகள், சிதம்பரநாதன் அன்னரத்தினம்(பூமணி) தம்பதிகளின் அன்புப் பேத்தியும், குணசேகரன் கேமாலினி(சுகந்தி) தம்பதிகளின் மூத்த புதல்வியும், ஜெனுசியா அவர்களின் பாசமிகு சகோதரியும்,  யோகநாதன், சுபாஜினி, சிவகரன், நிமாலினி ஆகியோரின் பெறாமகளும்,...

செவ்வாய், 17 மார்ச், 2020

விமானப் படையினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை சுத்திகரிப்பு செய்யும் பணிகளில்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளிச்செல்லும் மற்றும் உட்புகும் பகுதிகள் உட்பட அனைத்துப் பகுதிகளையும் சுத்திகரிப்பு செய்யும் பணிகளில் இலங்கை விமானப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் கடும் சோதனைகளின் பின்னரே நாட்டுக்குள்  அனுமதிக்கப்படுகின்றனர் இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் உட்புகும் பகுதி, வெளியேறும்...

வியாழன், 12 மார்ச், 2020

அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை முதல்விடுமுறை.கல்வியமைச்சர் உறுதிப்படுத்தினார்

நாளையிலிருந்து ஏப்ரல் 20ஆம் திகதி வரை பாடசாலைகள் அனைத்தும் மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.இன்று முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 வரை இலங்கையிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு ஆனந்த கல்லூரியின் முன்பாக இன்று குழப்பமான நிலைமை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக 12.03.20.இன்று...

புதன், 11 மார்ச், 2020

சுகாதார எச்சரிக்கை இலங்கையில் குழந்தைகளை வேகமாகத் தாக்கும் வைரஸ்

குழந்தைகள் மத்தியில் ஒருவகை நச்சுயிரி (வைரஸ்) வேகமாக பரவிவருவதால் மிகுந்த அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இந்த நச்சுயிரி குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகமாகவும் வேகமாகவும்  பரவிவருவதாக குழந்தை நல வைத்திய நிபுணர் விஷ்ணு சிவபாதம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பில் வைத்திய நிபுணர் தனது முகநூல் பக்கத்தில் பதிந்துள்ள  விடயத்தினை இங்கு இணைக்கின்றோம்.இன்று சிறுவர்கள் மத்தியில் ஒரு வகையான வைரஸ் ஆனது வேகமாக பரவி...

செவ்வாய், 10 மார்ச், 2020

உந்துருளி லொறியுடன் மோதி கோர விபத்து…தாயும் மகளும் பலி

நாத்தாண்டியா – துன்கன்னாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.நேற்று (07) இரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சிறிய ரக லொறி ஒன்றும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில்  மீகஹகிவுல பகுதியை சேர்ந்த 54 வயதுடைய தாயாரான சந்திரிகா சேனரத் மெனிகேஇ 21 வயதுடைய மகளான அதிகாரி ஆராச்சிகே அஹிம்சா துலாஞ்சனி ஆகியோரே இவ்வாறு  உயிரிழந்துள்ளனர். நாத்தாண்டியாவில் உள்ள ஒரு கல்வி நிலையத்திலிருந்து மகளை அழைத்துக்...

ஞாயிறு, 1 மார்ச், 2020

அமரர் நடராஜா அற்புதராஜா 6ம் ஆண்டு நினைவஞ்சலி 01.03.20

 தோற்றம் : 17 ஒக்ரோபர் 1957 — மறைவு : 8 மார்ச் 2014  திதி : நாள்.01 03.2020 யாழ். அச்சுவேலி தோப்பைப்பிறப்பிடமாகவும், நவக்கிரி- தோப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தஅமரர்   நடராஜா அற்புதராஜா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி .வதிவிடமாக கொண்ட  அமரர் நடராஜா அற்புதராஜா  அவர்களின் நீங்காத நினைவுடன்  நான்காம்  ஆண்டு நினைவஞ்சலி 01.03.2020..இன்று   ஞாயிற்றுக்கிழமை    இவ் அறிவித்தலை உற்றார்,...

மத்திய வங்கி கட்டடத்தில் இருந்து குதித்து உயிரிழந்த சிறுவன்

அவுஸ்ரேலியா செல்ல காத்திருந்த மகனின் சோக முடிவு  தந்தை கூறுவது என்ன கடந்த வாரம் மத்திய வங்கி கட்டடத்தில் இருந்து குதித்து உயிரிழந்த சிறுவன் பட்டப்படிப்பிற்காக அவுஸ்திரேலியா செல்ல காத்திருந்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.மத்திய வங்கியின் உயர்  அதிகாரியின் மகன் ஒருவரே கடந்த வாரம் தற்கொலை செய்துக் கொண்டார்.மகனின் இறப்பு தொடர்பில் கண்ணீருடன் கருத்து வெளியிட்ட தந்தை,எனது  மகன் காதல் தொடர்புகள் எதுவும் கொண்டிருக்கவில்லை. அப்படி...