நாரம்மல, தம்பெலஸ்ஸ பிரதேசத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 51 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 18 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
அலவ்வயில் இருந்து நாரம்மலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து இன்று (19.10) மதியம் நாரம்மல, தம்பெலஸ்ஸ என்ற இடத்தில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, சம்பவத்தைத் தொடர்ந்து 7 பேர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலும் 11 பேர் நாரம்மல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக