ஜார்கண்ட் மாநிலம், கோடெர்மா மாவட்டத்தில் உள்ள கோசைன் தோலாவில் பகுதியில் ரோட்டோர கடை ஒன்றில் பானிபூரி சாப்பிட்டு,
அப்பகுதியைச் சேர்ந்த 40 குழந்தைகள் மற்றும் 10 பெண்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
பானிபூரியை சாப்பிட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கம் போன்ற
அறிகுறிகள்
ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக கோடெர்மாவில் உள்ள சதர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களுக்கு பாக்டீரியா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து
குழந்தைகளும் 9 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள், அவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது.
பானிபூரி வியாபாரியிடம் இருந்த உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மாதிரிகள் சோதனைக்காக ராஞ்சிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக