நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இளைஞர் ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் 21-10-2023.,அன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்
தெரிவிக்கின்றனர்.
கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவாலயத்தின் வாகன தரிப்பிடத்தில் நபர் ஒருவர் ஜீப் வண்டியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த நபர்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கொழும்பு 09 இல் வசிக்கும் 63 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொத்துவில் - அக்கரைப்பற்று வீதியில் இடம்பெற்ற விபத்தில் 77 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில்
இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இருவரும் பலத்த காயமடைந்து பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை, பிங்கிரிய பொலிஸ்
பிரிவிற்குட்பட்ட போவத்த-கதுலாவ வீதியில் திசோகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 36 வயதுடைய நபர் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.
போவத்தை நோக்கி பயணித்த லொறி ஒன்று எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இதேவேளை, திருகோணமலை புல்மோட்டை வீதியின் சலப்பையாறு பகுதியில் வீதியில்
பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பயணி ஒருவர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மற்றும் பாதசாரி படுகாயமடைந்து, குச்சவெளி வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட போது, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
நவாச்சோலை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதேவேளை, கடுவலை - கொள்ளுப்பிட்டி வீதியில் பட்டியவத்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 68 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடுவலை நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியைக் கடந்த பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதேவேளை,
மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் - கண்டி வீதியின் இந்துபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக