siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 12 அக்டோபர், 2023

பருத்தித்துறையை சேர்ந்த குடும்பஸ்தர் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மரணம்!

சைக்கிளில் இருந்து தவறிவிழுந்த பருத்தித்துறையை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்
 உயிரிழந்துள்ளார். வெளிச்சவீட்டு வீதி பருத்தித்துறையை சேர்ந்த பிலிப்பு ராஜசிங்கம் (வயது-52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையி ல் சைக்கிளில்
 ஏற்றி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கடந்த 7 ஆம் திகதி கொண்டு சென்றபோது தவறி கீழே விழுந்துள்ளார்.
இதையடுத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினமே மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர்உயிரிழந்துள்ளார்.


 



 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக