siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 10 அக்டோபர், 2023

மன்னார் பம்பைமடு இராணுவ முகாமிற்கு அருகில் விபத்து பெண் ஒருவர் பலி

வவுனியா மன்னார் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்திற்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது வவுனியா - மன்னார் வீதியில் பம்பைமடு இராணுவ முகாமிற்கு அருகில்10-10-2023. இன்று  இடம்பெற்றுள்ளது.
வவுனியா குருக்கள்புதுக்குளத்தில் இருந்து வவுனியா 
நோக்கி வந்த மோட்டார் சைக்கிளானது பம்பைமடு
 இராணுவ முகாமிற்கு அருகில் வீதியில் நின்ற மாட்டுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதில் 45 வயதுடைய வி.ஜெயந்தினி என்பவர் பலியாகியுள்ளதுடன், அவரின் மகன் விஜயரட்னம் சிவரோஜன் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பூவரசங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக