இன்று காலை Pas-de-Calais பிராந்தியத்தில் உள்ள d'Arras நகரில் lycée Gambetta எனும் உயர் நிலைப் பள்ளியில் செச்சென் நாட்டைச் சேர்ந்த 20 வயதான 'fiché S' குற்றப் பதிவில் அறியப்பட்ட அந்த பள்ளியின் பழைய
மாணவன் நடத்திய பயங்கரவாத கத்திக்குத்து தாக்குதலில் ஒரு ஆசிரியர் கொல்லப்பட, ஒரு பேராசிரியரும் பாதுகாப்பு ஊழியரும் படுகாயம் அடைந்தது நீங்கள் அறிந்ததே.
குறித்த தாக்குதலை நடத்திய நபர் DGSI பாதுகாப்பு வலையத்தில் உள்ளவர். நேற்றையதினம் வியாழக்கிழமை வழமையான விசாரணைக்காக காவல் நிலையம் சென்று வந்துள்ளார், அவரோடு சேர்த்து
சந்தேகத்தின் பேரில் இன்று கைது செய்யப்பட்டுள்ள 16 வயது சகோதரர் ஏற்கனவே பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்ட
குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்படு விடுதலையானவர்.
இந்த தாக்குதல் 2020 ஒக்டோபர் 16ம் திகதி ஏறத்தாழ மூன்று
ஆண்டுகளுக்கு முன், வரலாறு மற்றும் புவியியல் பேராசிரியர் 47 வயதான Samuel Paty அவர்கள் Mahomet என்னும் பயங்கரவாதியால்
கழுத்தறுத்து
கொல்லப்பட்ட நாட்களோடு அருகில் இருப்பதால் நாடுமுழுவதும் உள்ள சகல பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த
வேண்டும் என உள்துறை அமைச்சர் Gérald Darmanin, தேசிய கல்வி அமைச்சர் Gabriel Attal. இருவரும் காவல்துறையினருக்கு வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக