siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 31 ஆகஸ்ட், 2024

யாழில் உடற்கலங்களுக்குள் குருதி சென்றதால் பொலிஸ் மரணம்

யாழ்ப்பாணத்தில் திடீர் சுகவீனத்தால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட, வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் கடமை புரியும் பெரியசாமி திவாகரன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 இவருக்கு நேற்றுமுன்தினம் (29) இரத்த வாந்தி ஏற்பட்டது. இதனால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

 பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று (30) உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

 ஈரலில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.< யாழ்ப்பாணத்தில் திடீர் சுகவீனத்தால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட, வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் கடமை புரியும் பெரியசாமி திவாகரன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 இவருக்கு நேற்றுமுன்தினம் (29) இரத்த வாந்தி ஏற்பட்டது. இதனால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்
. பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 30-08-2024.அன்று உயிரிழந்துள்ளார். அவரது
 சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
 ஈரலில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று 
பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை
 குறிப்பிடத்தக்கது என்பதாகும் 





 

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

நாட்டில் குருக்கள் புதுக்குளம் பகுதியில் விபத்தில் ஒருவர் மரணம்

நாட்டில் வவுனியா குருக்கள் புதுக்குளம் பகுதியில் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் அவ்விடத்திலேயே பலியாகியதோடு
 மேலும் ஒருவர் வவுனியா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி மீன் ஏற்றி வந்த 
வாகனத்தோடு வவுனியாவிலிருந்து குருக்கல் புதுக்குளம் நோக்கி வேலையின் நிமித்தம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருவரே 
விபத்தில் சிக்கி உள்ளனர்.
இதன் காரணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் அவ்விடத்திலேயே பலியானதோடு மற்றயவர் வவுனியா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மரணித்தவர் யாழ்ப்பாணம் பருத்தித்துறையை பரமநாத் சிவாகரன் (வயது 30) எனவும் காயமடைந்தவர் செல்லத்துரை கிருஷ்ணபாலன் (வயது 37)தெரியவருகின்ற
இதேவேளை பூவரசங்குளம் பொலீசார் குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். என்பதாகும்.




வியாழன், 29 ஆகஸ்ட், 2024

எவ்வளவு பால் குடிக்கலாம் சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமம்

பால் நல்ல ஒரு நிறையுணவாகும். இதை பசுமாட்டில் இருந்து எடுப்பார்கள். பாலில் அதிகளவான கால்சியம் நிறைந்துள்ளது. இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்க மருத்துவர்கள் எப்போதும் குறைந்த 
கொழுப்பு மற்றும் அதிக நார்ச்சத்து போன்ற 
சமச்சீரான உணவைப் பரிந்துரைக்கிறார்கள். 
அதிகப்படியான
 கொழுப்பு தீங்கு விளைவிக்கும் மற்றும் சர்க்கரை 
நோயாளிகளுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். பல 
சர்க்கரை நோயாளிகளுக்கு எலும்பு 
முறிவு போன்ற
 பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கான காரணத்தை மருத்துவர்கள்விளக்குகின்றனர்.
அந்த வகையில் ரத்தத்தில் சக்கரை அளவு அதிகரிப்பதற்கு சில உணவுகள் காரணமாக இருக்கிறது. இந்த காரணத்தினால் தான் சர்க்கரை நோயாளிகள் பால் குடிக்கலாமா, வேண்டாமா என்பதை இந்த
 பதிவில் பார்க்கலாம்.
சக்கரை நோயாளர்கள் ரத்தில் சக்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். இதற்கு நீண்ட காலத்திற்கு உங்கள் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைக் பாதுகாக்க உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றம் செய்வது அவசியமாகும்.
சக்கரை நோய் என்பது ஒரு தொற்றாத நோயாகும். இந்த நோய் வந்தால் உணவில் மிக கவனத்துடன் இருப்பது முக்கியம். சாப்பிடுவதில் சிறிது கவனக்குறைவு இருந்தாலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். சக்கரை நோயாளிகள் குறைந்த கொழுப்புள்ள உணவுகளை 
மட்டுமே சாப்பிட வேண்டும்.
இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்க மருத்துவர்கள் எப்போதும் குறைந்த கொழுப்பு மற்றும் அதிக நார்ச்சத்து போன்ற சமச்சீரான உணவைப் பரிந்துரைக்கிறார்கள்.
பெரும்பாலான மக்கள் பாலை தங்கள் உணவுப் பகுதியில் ஒரு பங்காக எடுத்துக்கொள்கின்றனர். பாலில் கால்சியம், ப்ரோடீன் மற்றும் வைட்டமின் டி ஆகியவை நிறைந்துள்ளது.
பாலில், இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடிய கொழுப்புகள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. ஆனால் பால் சக்கரையின் அளவை அதிகரிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
பல சர்க்கரை நோயாளிகளுக்கு எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது, எனவே கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது சக்கரை நோயாளிகளின் எலும்புகளை வலுவாக வைத்திருக்க 
உதவுகிறது.
சக்கரை நோயாளிகளுக்கு ப்ரோடீன் மிகவும் முக்கியமானது. ப்ரோடீன் நிறைந்த பாலில் ஒன்பது அத்தியாவசிய அமினோ ஆசிட்கள் உள்ளன. 
எனவே உங்கள் உணவு அல்லது சிற்றுண்டியில் பாலை 
சேர்க்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இது 
மட்டுமல்லாமல் இது எடை குறைப்புக்கு நன்மை அளிக்கும் மற்றும் நீரிழிவை கட்டுக்குள் வைக்கும்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சக்கரை நோயாளிகள் உணவில் கால்சியம் நிறைந்த பாலை சேர்க்கலாம். ஆனால் மருத்துவர்களின் கூற்றுப்படி, கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள பாலை 
தேர்வு செய்ய வேண்டும் என பரிந்துரைக்கின்றனர். காரணம் முழு பாலில் அதிக நிறைவுற்ற கொழுப்பு இருப்பதால், இதய நோய் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 28 ஆகஸ்ட், 2024

யாழ் ஊர்காவற்துறை பகுதியில் தொடர் காய்ச்சலினால் பெண் மரணம்

யாழ்ப்பாணத்தில் 20 நாட்கள் தொடர் காய்ச்சல் காரணமாக குடும்பப் பெண் ஒருவர்உயிரிழந்துள்ளார். இதன்போது நாரந்தனை மத்தி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த அன்னலட்சுமி நடராசா என்ற ஏழு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கிளிநொச்சியில் மகள் வீட்டில் இருந்தவேளை கடந்த7ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டதால் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். இருப்பினும் இடையிடையே 
காய்ச்சல் ஏற்பட்டது.
பின்னர் 17ஆம் திகதி ஊர்காவற்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். அதன்பின்னரும் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் 19 ஆம் திகதி ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் 27ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக 
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.. உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
குறிப்பிடத்தக்கது என்பதாகும் 


செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

இடம்பெற்ற கோர விபத்தில் கிளிநொச்சியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

கிளிநொச்சி A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். குறித்த விபத்த இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 
விபத்தில் கனகாம்பிகைக் குளம் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன் அருள்வதனன் என்ற 2 பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். 155 ம் கட்டை சந்தியில் ஆட்களை ஏற்றுவதற்காக குறுந்தூர பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. 
கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பேருந்தை முந்தி பயணித்துள்ளது. அதே திசையில் பயணித்த பார ஊர்தி குறித்த மோட்டார் சைக்கிளை மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே 
உயிரிழந்துள்ளார்.
 குறித்த பாரஊர்தியின் சாரதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்ச பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
 குறிப்பிடத்தக்கது. என்பதாகும் 





 

திங்கள், 26 ஆகஸ்ட், 2024

இலங்கைக்கு சுவிஸில் இருந்து வருகை தந்தவர் அடித்து கொலை

இலங்கைக்கு சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில்.w26-08-2024. இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.  
வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள உறவினர் வீடு ஒன்றிக்கு சுவிஸ் நாட்டில் இருந்து விடுமுறையில் வருகை தந்த ஒருவர் தங்கியிருந்துள்ளார்.  
குறித்த வீடட்டில் சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த நபரும், அவரது உறவினரும் இரவு மது வழிருந்தில் ஈடுபடட நிலையில் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு அது கைகலப்பாக 
மாறியுள்ளது.  
இதன்போது சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்தவரின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் இவ் இடத்திலேயே மரணமடைந்துள்ளார். செல்லத்துரை விமலநாதன் (வயது 66) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.  
இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சம்வவ இடத்திற்கு சென்ற கனகராயக்குளம் பொலிசார் சம்பவம் தொடர்பில் 60 வயது குடும்பஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
 என்பது குறிப்பிடத்தக்கது.





 .

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

உல்பத்கமவில் மின்சாரம் தாக்கி பதினைந்து வயது பாடசாலை மாணவன் மரணம்

மின்சாரம் தாக்கியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கலேன்பிந்துனுவெவ தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் உல்பத்கம பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை 
மாணவனே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார்.
வீட்டின் பின்புறம் உள்ள தண்ணீர் குழாயில் இருந்து குளித்துக் கொண்டிருந்த போது அருகில் இருந்த தண்ணீர் மோட்டாரின் வயர் அவிழ்ந்து மாணவனின் உடலில் பட்டதில் மின்சாரம் தாக்கி குறித்த மாணவன் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
 சம்பவம் தொடர்பில் கலேன்பிந்துனுவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதாகும்.






 

சனி, 24 ஆகஸ்ட், 2024

கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

 நாட்டில் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பகுதியில் நேற்று (23) பிற்பகல் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் வெள்ளவத்தை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பிடத்தக்கது என்பதாகும்


வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

நாட்டில் இரத்தினபுரத்தில் கட்டிட வேலையில் ஈடுபட்ட தொழிலாளர் சடலமாக மீட்பு

கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் கட்டிடவேலையில் ஈடுபட்டு வந்த தொழிலாளர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேல் மாடி கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் நேற்று இரவு இருவர் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் ஒருவர் நித்திரைக்கு சென்றிருந்தார்.

மற்றவர் வேலை செய்து கொண்டிருந்ததாகவும் அதிகாலை எழுந்து மற்றவரை காணாது தேடியபோது சடலமாக கீழே காணப்பட்டார் என பொலிசாருக்கு தெரிவித்திருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையைச்சேர்ந்த 34வயதுடைய சின்னான்டி பரமேஸ்வரன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.குறிப்பிடத்தக்கது என்பதாகும்


வியாழன், 22 ஆகஸ்ட், 2024

நாட்டில் தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் கவலைக்கிடம்

ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் பயணித்த கார் தெற்கு அதிவேக வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இது பத்தேகம விரைவுச்சாலை நுழைவாயிலுக்கு அருகில் கிமீ 80. 9 போஸ்டில் உள்ளது. 16 மற்றும் 21 வயதுடைய இரண்டு மகன்களும் அவர்களது தாயும் விபத்தில் காயமடைந்துள்ளனர்.
விபத்தின் போது 21 வயதுடைய மகன் காரை ஓட்டிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள்
 தெரிவித்தன.
மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி வந்த கார் வீதியின் நடுவில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதியதுடன் மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு தனியார் பஸ்ஸிலும் மோதி
 விபத்துக்குள்ளானது.
அந்த வழியாக சென்ற டிரைவர்கள் காரில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல
 ஏற்பாடு செய்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
 குறிப்பிடத்தக்கது என்பதாகும்.


புதன், 21 ஆகஸ்ட், 2024

வைத்தியரின் அலட்சியத்தால் வவுனியாவில் உயிரிழந்த குழந்தைக்கு தந்தை பொலிசில் முறைபாடு

வவுனியா வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் அலட்சியத்தினால் தனது குழந்தை பிறந்து இறந்துள்ளதாக குழந்தையின் தந்தையினால் வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மரணித்த சிசுவின் தந்தையார் தெரிவிக்கும் போது, தனது மனைவியினை பிரவசத்திற்காக கடந்த 17 ஆம் திகதி வவுனியா வைத்தியசாலையின் 7 ஆம் விடுதியில் 
அனுமதித்திருந்தேன்.
மறுநாள் அவருக்கான மருந்துகள் வழங்கப்பட்ட நிலையில் அவரது பன்னீர்குடம் உடைந்துள்ளது. இதனை தாங்கமுடியாத எனது மனைவி அங்குள்ள தாதி ஒருவருக்கு விடயத்தினை 
தெரிவித்திருந்தார். 
இதன்போது அங்கு கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் தொலைபேசியினை பயன்படுத்திக்கொண்டு, அது தொடர்பாக கவனமெடுக்காமல் அது ஒரு பிரச்சனையுமில்லை என தெரிவித்திருந்தார். 
பின்னர் வலிக்குரிய மருந்தினை மனைவிக்கு தந்துவிட்டு உறங்குமாறு தெரிவித்துள்ளனர். மறுநாள் வைத்தியசாலைக்கு
 வந்த வைத்திய அதிகாரி ஒருவர் சீசர் செய்து குழந்தையினை எடுத்திருக்கலாம் தானே என கடமையில் இருந்த 
வைத்தியரை பேசியிருந்தார். 
பின்னர் மீண்டும் மாலை 5 மணிக்கு எனது மனைவியை சிகிச்சைகூடத்திற்கு அழைத்துச்சென்றனர். பலமணி நேரமாகியும் அவர் வெளியில் வரவில்லை. இதற்குள் 7ஆம் விடுதியில் குளிரூட்டி இயங்கவில்லை 
என தெரிவித்து 5 ஆம் விடுதிக்கு எனது மனைவியை மாற்றியுள்ளனர். பின்னர் தாதி ஒருவர் தொலைபேசி அழைப்பை எடுத்து என்னை வைத்தியசாலைக்கு வருமாறு அழைத்திருந்தார். 
அங்கு சென்றபோது அதிதீவிர சிகிச்சைபிரிவில் எனது குழந்தையினை அனுமதித்திருந்தார்கள். அங்குள்ள வைத்தியரிடம் கேட்டபோது 5 ஆம் விடுதியில் இருந்து குழந்தையினை இங்கு அனுமதிக்கும் போதே உயிரில்லாத நிலைமையிலேயே தந்தனர். இருப்பினும் குழந்தையின் இதயத்துடிப்பினை நாம் மீட்டுள்ளோம். 
எனினும் குழந்தையின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவித்து குழந்தையினை எனக்கு காட்டினர். பின்னர் நேற்றயதினம் இரவு எனது குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். எனவே 
வைத்தியர்களின் அசமந்தபோக்கினால் எனது மனைவிக்கு நடந்த கொடுமைக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். எனக்கு நீதி கிடைக்காமல் நான் சிசுவின் சடலத்தினை பொறுப்பெடுக்கமாட்டேன் என்று
 தெரிவித்தார். 
இதேவேளை குறித்த விடயம் தொடர்பாக சிசுவின் தந்தையால் வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடும் பதிவுசெய்யப்பட்டது.
 இது தொடர்பாக வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் கேட்டபோது உள்ளக விசாரணை இடம்பெற்றுவருவதாக
 தெரிவித்தார்.
மேலும் இச்சம்பவம் குறித்து பிரதேச மக்களின் தெரிவித்ததாவது - இது ஒன்றும் வவுனியாவிற்கு புதிதானவை அல்ல நான் நினைக்கின்றேன் கிட்டத்தட்ட 21 அல்லது அதற்கு மேற்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளது பல சம்பவங்களை ஊடகங்களும் மூடி மறைத்துள்ளன.
இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு கனகராயன் குளத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு குழந்தை பிறந்து கிட்டத்தட்ட 18 மணித்தியாளங்களின் பின் பிள்ளை இறந்த பின்பும் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு பிள்ளையை நோயாளர்காகவண்டியில் அனுப்பி 
நாடகம் ஆடினார்கள்.
அதனை போலீசில் முறைப்பாடு செய்தும் எந்தப் பயனும் இல்லை அதன்பின் யாழில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு 
இறந்த குழந்தையின் தாயினை பரிசோதிப்பதற்காக
 அங்கு சென்றபோது கூட இந்த மாபியாக்கள் அந்தத் தாயினை பரிசோதித்து 
சரியான அறிக்கையினை கொடுக்கவில்லை என்பதை இங்கே 
கவலையான விடயம்.
 இந்த விடயத்தில் தனியாறும் சரி அரச வைத்தியசாலையும் சரி தங்களது காரியங்களை சரியாக செய்து பிழைகளை
 மூடி மறைப்பதே இவர்களுடைய செயற்பாடாக தொடர்ந்த வண்ணம் உள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது



செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

நாட்டில் சிறுவர்களுக்கு ஏற்படும் இன்புளுவன்சா நோய் தாக்கங்கள் அதிகரிப்பு

நாட்டில் இந்த நாட்களில் சிறுவர்களுக்கு ஏற்படும் நோய் தாக்கங்கள்  அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா 
தெரிவித்துள்ளார்.  
கடந்த சில நாட்களாக இன்புளுவன்சா நோயாளிகளின் அதிகரிப்பும் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
இது குறித்து மேலும் விளக்கமளிக்கும் நிபுணர் கலாநிதி 
தீபால் பெரேரா, "இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், இது குழந்தையின் ஆஸ்துமாவாக இருக்கலாம். இரண்டாவதாக, வைரஸ் காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பும் உள்ளது. 
ஏற்கனவே பல இன்ஃப்ளூயன்ஸா மற்றும் இது போன்ற வைரஸ் காய்ச்சல்கள் பரவுகின்றன. குறிப்பாக மேல் சுவாசக்குழாய் வைரஸ் காய்ச்சல் 
பரவியுள்ளது.  
எனவே, இருமல், சளி இருந்தால், அந்த குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருங்கள். எனவே, குழந்தைகளுடன் கவனமாக இருங்கள்" எனத் தெரிவித்துள்ளார். குறிப்பிடத்தக்கது என்பதாகும் 


திங்கள், 19 ஆகஸ்ட், 2024

நாட்டில் புஹுல்வெல்லவில் முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்களில் மோதி: ஒருவர் பலி

நாட்டில் திஹகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹக்மன - மாத்தறை பிரதான வீதியின் புஹுல்வெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
நேற்று (18.08) பிற்பகல் ஹக்மனயிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியை சாரதி கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் கவிழ்ந்து எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது 
மோதியுள்ளது.
 இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளதுடன், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். 
உயிரிழந்தவர் 54 வயதுடைய திஹாகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர். காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பயணி ஆகியோர் புஹுல்வெல்ல
 வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திஹாகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.குறிப்பிடத்தக்கது என்பதாகும் 




 

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024

. சத்திரசிகிச்சையின்போது கொழும்பில் உயிரிழந்த நபருக்கு வைத்தியரே பொறுப்பு கூற வேண்டும் என வலியுறுத்து

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் போது மித்ரிகிரியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தமைக்கு சத்திரசிகிச்சை செய்த வைத்தியரே பொறுப்பேற்க வேண்டுமென உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
துண்டிக்கப்பட்ட நரம்பு காரணமாக அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர் ஒருவர் தெரிவித்த போதிலும், நரம்பில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சத்திரசிகிச்சை செய்த வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் 2023 இல், மாதிரிகிரியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 41 வயதான சஞ்சன ராஜபக்ஷ, மாதிரிகிரிய பகுதியில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானார். 
இடது கையில் காயம் ஏற்பட்டதால், இடது கையில்  சிரமம் இருந்ததாக கூறப்படுகிறிது. கண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவரை சந்தித்த அவர், நரம்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் 
அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று
 கூறியுள்ளனர்.
தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தால் சுமார் 15 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும், அரசு மருத்துவமனையில் செய்தால் நீண்ட நாள் காத்திருப்போர் பட்டியலில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் மருத்துவர் குறிப்பிட்டிருந்தார்.
நிதி நெருக்கடி காரணமாக  ஜூலை மாதம் 21ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உரிய சத்திரசிகிச்சையை மேற்கொண்டுள்ளார். 
அறுவைசிகிச்சைக்குப் பிறகு, ஷஞ்சனா சுயநினைவை இழந்ததால், அவரது மனைவி இது குறித்து மருத்துவரிடம் கேட்டுள்ளார்.
அவரின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து மூளை இறக்கத் தொடங்கியதால், நோயாளியைக் காப்பாற்ற முடியாததால், சுவாசக் கருவியை அகற்றியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், வைத்தியரின் அலட்சியத்தால் தனது கணவர் உயிரிழந்துள்ளதாக சஞ்சனாவின் மனைவி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் சுகாதார அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
சஞ்சனாவின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியாகாத நிலையில், அவரது உடலை தகனம் செய்யுமாறு மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
.


சனி, 17 ஆகஸ்ட், 2024

இதுவரை இலங்கையில் மூவாயிரத்தி ஐநூறு HIV தொற்று நோயாளர்கள் அடையாளம்

இதுவரை நாடளாவிய ரீதியில்  3,500 எச்.ஐ.வி தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 52க்கும் மேற்பட்ட சிறுவர்கள் காணப்படுகின்றனர்.
அடையாளம் காணப்பட்ட எச்.ஐ.வி தொற்று நோயாளர்களில் நூற்றுக்கு 81 வீதமானோர் தீவிர சிகிச்சை பெற்று
 வருகின்றனர்.
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவான எச்.ஐ.வி தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
 பெரும்பாலும், ஒருபாலின உறவுகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் பாலியல் ரீதியிலான தொழில்களில் ஈடுபடுபவர்களிடம் எச்.ஐ.வி தொற்று காணப்படும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான 
சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது





 

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

ஓமந்தை ஆறுமுகத்தான்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

வவுனியா, ஓமந்தை, ஆறுமுகத்தான்குளம் பகுதியில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியதில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.
றித்த சம்பவம் .16-08-2024.இன்று அதிகாலை
 இடம்பெற்றுள்ளது.
வியாழக்கிழமை இரவு தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மகனை நீண்ட நேரமாகியும் காணாமையினால் அவரது தந்தை 
தேடியுள்ளார். இதன்போது காணியின் பின்புறத்தில் குறித்த இளைஞர் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது. சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சம்பவத்தில் பத்மநாதன் டயான் (வயது 21) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். அவர் வீட்டின் பின்புறத்தில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
என்பது  குறிப்பிடத்தக்கது .




 

வியாழன், 15 ஆகஸ்ட், 2024

இலங்கை திவுலபிட்டிய நீர்கொழும்பு வீதியில் விபத்து மூவர் பலி

இலங்கை திவுலபிட்டிய - நீர்கொழும்பு வீதியில் துனகஹா சந்தி பகுதியில்  (15.08.2024) இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர்
 உயிரிழந்துள்ளனர்.  கொதிகமுவ - துனகஹா 
வீதியில் திவுலப்பிட்டி நோக்கி அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டியின் சாரதியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் திவுலப்பிட்டியிலிருந்து
 நீர்கொழும்பு நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்துடன் 
முச்சக்கரவண்டி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். . 
முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
. பலத்த காயம் அடைந்த ஒரு பெண்ணும் மற்றுமொரு ஆணும் மருத்துவமனைக்கு
 கொண்டு செல்லப்பட்ட நிலையில் அந்த நபரும் உயிரிழந்தார். 
உயிரிழந்தவர்கள் 30, 38 மற்றும் 45 வயதுடைய 
கொதிகமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். குறித்த பெண் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
என்பது குறிப்பிடத்தக்கது 


புதன், 14 ஆகஸ்ட், 2024

நாட்டில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்த்தில் சிறுமி உயிரிழந்துள்ளார்

நாட்டில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 02 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். 
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் எல்பிட்டிய பொலிஸ் பிரிவில் இன்று (14) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 
மத்தலயில் இருந்து கொட்டாவ நோக்கி பயணித்த வேன், டயர்களின் காற்றழுத்தம் காரணமாக நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 
இந்த விபத்தில் வேனில் பயணித்த மூன்று சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளதுடன், எல்பிட்டிய 
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர்
 உயிரிழந்துள்ளார். 
கதிர்காமம் ஓர்டோகந்த பகுதியைச் சேர்ந்த 02 வயதும் 02 மாத வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  
விபத்து இடம்பெற்ற போது வேனில் சிறுவர்கள் உட்பட 12 பெரியவர்கள் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது 


செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

ஒன்றாரியோ வில் மென் பானம் அருந்தி மூன்று பேர் மரணம்

கனடாவில் மென்பான வகை ஒன்றை அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
தாவரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் பால் பான வகைகளை அருந்திய சிலர் நோய் வாய்ப்பட்டதாகவும் அதில் சிலர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
கனடாவின் முன்னணி மென்பான உற்பத்தி நிறுவனம் ஒன்றின் உற்பத்திகளை அருந்தியவர்களே இவ்வாறு நோய்வாய் பட்டுள்ளனர். 
இந்த பானத்தை அருந்திய 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இந்த பான வகைகளில் லிஸ்திரியா எனப்படும் ஒருவகை பக்றீரியா தாக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சில்க் மற்றும் கிரேட் வால்யூ ஆகிய பண்டக் குறிகளைக் கொண்ட பான வகைகளை உட்கொண்டர்களே இவ்வாறு 
பாதிக்கப்பட்டுள்ளனர். 
இந்த பால்பான உற்பத்தி வகைகள் சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களே அதிக அளவில் இந்த பானத்தை உட்கொண்டதனால் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
ஒன்றாரியோ, கியூபிக், நோவாஸ்கோசியா மற்றும் ஆல்பர்ட்டா ஆகிய மாகாணங்களில் இந்த பானத்தை உட்கொண்டவர்கள் நோய்வாய் பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 
 இந்த பானத்தை உட்கொண்டு மூன்று நாட்கள் முதல் 70 நாட்கள் வரையிலான காலத்தில் நோய் அறிகுறி ஏற்படும் எனவும் பாதிப்புகள் உண்டாகும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது 


திங்கள், 12 ஆகஸ்ட், 2024

நாட்டில் வேவல்தெனிய சந்தியில் இடம்பெற்ற விபத்த்தில் மூவர் பலி

கொழும்பு - கண்டி வீதியின் வேவல்தெனிய சந்தியில் 12.08.2024.இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒரு குழந்தை உட்பட மூவர் 
உயிரிழந்துள்ளனர். 
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறிக்கு பின்னால் முச்சக்கரவண்டி ஒன்று வந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக
 தெரிவிக்கப்படுகிறது. 
 இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பிடத்தக்கது என்பதாகும் 

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

தேர்வில் தோல்வி அடைந்த தங்கையை பாகிஸ்தானில் சுட்டுக் கொன்ற அண்ணன்


ஒன்பதாம்  வகுப்பில் கணித தேர்வில்  தோல்வியடைந்த தங்கையை அவரது சகோதரர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள ஒகாரா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இரவுநேரத்தில் தாய் உறங்கியபின்பு தேர்வில் தோல்வியடைந்தத்த்து குறித்து தங்கை சஜிதாவிடம் அவரது அண்ணன் அதில் உசைன்
 கேள்வி கேட்டுள்ளார். 
அது பின்பு வாக்குவாதமாக மாறியுள்ளது. சத்தம் கேட்டு முழித்த தாய் தனது மகனிடம் சண்டையை நிறுத்துமாறு கோரியுள்ளார்.
ஆனால் தாயின் பேச்சை கேட்காத உசைன் தனது துப்பாக்கியை எடுத்து தங்கையை சுட்டுள்ளார். பின்பு துப்பாக்கியுடன் அங்கிருந்து அவர் தப்பியோடியுள்ளார்.
 துப்பாக்கி சூட்டால் பலத்த காயமடைந்த சஜிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாயார் கொடுத்த புகாரின் பேரில் அவரது மகன் மீது கொலைவழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகிறது. குறிப்பிடத்தக்கது என்பதாகும்.






 

சனி, 10 ஆகஸ்ட், 2024

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தொழுகையின் போது நூறுக்கும் மேற்பட்டடோர் பலி

மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் உருவாகியுள்ள நிலையில் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி மீது தாக்குதல்கள் அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது. 
கிழக்கு காசாவில் மக்கள் தஞ்சமடைந்திருந்த பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டடோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஜர் எனப்படும் பகல் நேர தொழுகையில் மக்கள் ஈடுபட்டிருந்தபோது இந்த தாக்குதலானது நடந்துள்ளது. 
கடந்த ஒரே வாரத்தில் 4 பள்ளிகள் மேல் மக்கள் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி 2பள்ளிகளின் மேல் நடந்த தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். அதற்கு முந்தைய நாள் தாக்குதலில்
 17 பேர் பலியாகினர்.
அதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்ட் 2 அன்று மற்றொரு பள்ளி மீது நடந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.
இந்த பள்ளிகளில் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் ஒளிந்திருப்பதாக கூறி இஸ்ரேல் இந்த தாக்குதல்களை நியாயப்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 7 முதல் நடந்துவரும் தாக்குதல்களில் இதுவரை 40,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 
இதற்கிடையில் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது என்பதாகும் 



வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

விமானம் நிலை தடுமாறி பிரேசிலில் அறுபத்தி இரண்டு பேருடன் சென்ற விமானம் விபத்து

பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் வியோபாஸ் விமானமான 2283 என்ற விமானம் 62 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று 
கொண்டிருந்தது. 
வின்ஹெடோ நகரில் சென்று கொண்டிருந்த போது விமானம் நிலை தடுமாறி  கீழே விழுந்து வெடித்ததை உள்ளூர் தீயணைப்புப் படை 
உறுதிப்படுத்தி உள்ளது.
62 பேர் சென்ற வியோபாஸ் 2283 என்ற விமானம் செங்குத்தாக கீழே விழுந்து வெடித்து சிதறி உள்ளது.
அதில் பயணம் செய்த அனைவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. 
வியோ பாஸ் விமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், 58 பயணிகள் மற்றும் விமானிகள் உள்பட 4 பணியாளர்களுடன் சாவ் பாலோவின் சர்வதேச விமான நிலையமான குருல்ஹாஸ் நோக்கிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதாக உறுதிப்படுத்தியுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது



வியாழன், 8 ஆகஸ்ட், 2024

கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஆறு பேருக்கு மரண தண்டனை உறுதி


 நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன 
உள்ளிட்ட ஆறு பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய
 நீதிபதிகள் குழாம் விதித்த மரண தண்டனையை உயர் நீதிமன்றம்
 இன்று உறுதி செய்தது.
பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் என்பவரை 2013ஆம் ஆண்டு கடத்திச் சென்று கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களும் 
அடங்குவர்.
இந்த தண்டனைகளில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி வாஸ் குணவர்தன உள்ளிட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது




 

நாட்டில் இளம் தாயின் இறப்புக்கு காரணமான குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்! Dr முரளி வல்லிபுரநாதன்

மன்னார் வைத்தியசாலையில் கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட இளம் தாயின் இறப்புக்கு காரணமான குற்றவாளிகள் உடனடியாக 
தண்டிக்கப்பட வேண்டும். 
 வடக்கு கிழக்கு மாகாணங்களில் மன்னார் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் பல வருட காலமாக இடம் பெற்று
 வரும் தென்பகுதியில் உள்ள வீட்டில் இருந்துகொண்டு சம்பளம் பெறும் மற்றும் மேலதிக நேரத்துக்கான கொடுப்பனவாக பல இலட்சம் ரூபாய்கள் மோசடி
 செய்யப்படும் ஊழலை அண்மையில் எனது "
மருத்துவ மாபியா"
 கட்டுரையில் அம்பலப்படுத்தியிருந்ததுடன் ஊறுபடும் நிலையில் உள்ள நோயாளிகளை குறிப்பாக இரவில் உடனடியாக வைத்தியர்கள் கவனிக்காவிட்டால் மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று 
தெரிவித்து இருந்தேன். 
 இந்த கட்டுரை வெளியிட்டு சில தினங்களுக்குள் மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற கவனக்குறைவு காரணமாக இரவு அனுமதிக்கப்பட்ட 27 வயது தாய் காலை வரை எந்த 
வித சிகிச்சையுமின்றி இருந்ததனால் உடல்நிலை 
மோசமாகி உயிரிழந்து
 இருக்கிறார். வழமை போல வைத்தியசாலைக் குறிப்புகளில் பொய்யாக உரிய சிகிச்சை இடம்பெற்றதாக குறிப்பிட்டு பின்னர் விசாரணை என்று சில குழுக்களை அமைத்து அனைத்தையும் முடிமறைக்கும் செயல்பாடுகள்
 இடம் பெறும் . 
இவை அனைத்தையும் GMOA மாபியா குழுவினர் மேற்பார்வை செய்து இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கடைசியில் குற்றமற்றவர்கள் என்று நிர்வாகத்தையும் மிரட்டி முடிக்கும். இந்த 
அவலத்துக்கு இந்த சந்தர்ப்பத்தில் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இந்தக் கொடுமைகள் தொடரும். இதற்கிடையில் நிர்வாகமும் GMOA மாபியாவும் இணைந்து மக்களை ஏமாற்றும் ஊடக சந்திப்பு ஒன்றை 
நடத்தியுள்ளனர். ஸ்தாபன கோவையின் 31.5.2.பிரிவு (கீழ் இணைக்கப்பட்டுள்ளது ) மிகவும் தெளிவாக ஒரு அரசாங்க அதிகாரியின் பொறுப்பற்ற செயலால் மோசமான பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அவர் உடனடியாக பணி நீக்கம் (interdiction ) செய்யப்படவேண்டும் என்று கூறுகிறது.
 இதுவரை இந்த அனாவசிய உயிரிழப்புக்கு காரணமான வைத்தியசாலை ஊழியர்கள் எவரும் ஏன் பணி நீக்கம் செய்யப்படவில்லை? அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டு இருந்தால் அவர்களது பெயர்கள் 
ஏன் இன்னமும் வெளியிடப்படவில்லை ? வைத்தியசாலைக்கு 
அப்பால் பட்ட வேறு அரசாங்க திணைக்களங்களில் இவ்வாறான
 சம்பவங்கள் இடம் பெற்றால் ஊழியர்கள் உடனடியாக 
பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரணையின் பின்பு குற்றமற்றவராக இருந்தால் மட்டுமே மீண்டும் பணிக்கு இணைத்துக்
 கொள்ளப்படுவார். 
ஆனால் இங்கே தெளிவாக ஒரு உயிரிழப்பு கவனக் குறைவு காரணமாக இடம் பெற்று இருக்கிறது. ஆனால் எவரும் பணி நீக்கம் செய்ய படவுமில்லை. அதே நேரம் பல விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன
 என்றும் நீதியான விசாரணை இடம்பெறும் என்றும் அதன் பின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்ற 
தமது வழமையான 
பம்மாத்துக் கதைகளை GMOA மாபியா மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள வைத்தியசாலை நிர்வாகம் கூறி வருகிறது. இவற்றுக்கு
 முற்றுப்புள்ளி வைக்க மன்னாரில் உள்ள தமிழ் பேசும் மக்கள் முன்வர வேண்டும். 
குற்றவாளிகள் எந்த வித தாமதமும் இன்றி பணி நீக்கம் செய்யப்படும் வரை போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதை நீங்கள் செய்ய தவறினால் தொடர்ந்து கவனக் குறைவு காரணமாக பல 
உயிரிழப்புகளை
 சந்திக்க வேண்டி வரும். அதே வேளை இறந்த நோயாளியின் உறவினர்கள் தாமதம் இன்றி போலீஸ் நிலையத்தில் கவனக் குறைவால்
 இடம்பெற்ற
 இந்த இறப்பு தொடர்பாக உரிய முறைப்பாட்டை செய்ய வேண்டும். மன்னாரை சேர்ந்த சட்டத்தரணிகள் இலவசமாக இந்த அநியாயத்துக்கு எதிராக போராட முன்வரவேண்டும். 
நீதிமன்றின் ஊடாக 1. பொலிஸ் மூலம் குற்றச் செயலுக்கான வழக்கு மற்றும் 2. இறப்புக்கான நட்டஈடு கோரி சிவில் வழக்கும் தாக்கல் செய்யப்பட வேண்டும் ஒரு குற்றவாளி ஆவது முறையாக தண்டிக்கப்பட்டு 
சிறைக்கு அனுப்பப்பட்டால் தான் இந்த மருத்துவ மாபியா திருந்த வாய்ப்புள்ளது. 
அதைவிடுத்து பல கட்டுரைகள் விரிவுரைகள் சமூக ஊடக பதிவுகள் மூலமாக இவர்கள் திருந்தப் போவதில்லை மனம் வருத்தப் போவதும் இல்லை. 
 உடனடியாக மன்னாருக்கு நான் வரும் சூழ்நிலை
 காணப்படாத நிலையில் இது தொடர்பாக ஆலோசனை பெற விரும்புவோர் என்னுடன் 0779068868 தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள முடியும் Dr முரளி வல்லிபுரநாதன் கூறியுள்ளார் 
என்பது  குறிப்பிடத்தக்கதாகும்