siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 31 ஜனவரி, 2026

மரண அறிவித்தல் அமரர் கணவதிப்பிள்ளை சிவநாதன்

துயர் பகிர்வு-தோற்றம் 00.மறைவு-31-01-2026
யாழ் அச்சுவேலியை  பிறப்பிடமாகவும் நவற்கிரியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் கணவதிப்பிள்ளை சிவநாதன்  .31-01-2026..சனிக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார் அன்னார் அமரர் கணவதிப்பிள்ளை தம்பியிரின் 
அன்பு மகனும்
 அன்னார்  காலம்சென்ற ஆறுமுகம்  முத்தமா(பெத்தாச்சி ) தம்பியிரின் அன்பு மருமகனும் ஞானமணி(சின்னக்கிளி) யின் பாசமிகு கணவரும் வியிதா  கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்    திரு.ஆ. நவரத்தினத்திம் அவர்களின்  அன்பு மச்சானும் ஆவர்  அன்னாரின் இறுதிச்சடங்கு திகதி-  04-02-2026 புதன்கிழமை 10:00 மு.ப — 12-30 பி.ப.மணிக்கு  அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்  நல்லடக்கம்
04-02-2026 புதன்கிழமை  அன்று ;(முகவரி) நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் 
  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.

எமது நவற்கிரி இணையம்  நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
வீ ட்டு முகவரி-
நவற்கிரி புத்தூர்  
தகவல்
குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/



வெள்ளி, 30 ஜனவரி, 2026

நாட்டில் ஒட்டுசுட்டானில் குடும்பஸ்தரை அடித்து கொன்ற மச்சான் கைது;

நாட்டில் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் கரடிப்புலவு கிராமத்தில் கடந்த 27ம் திகதி இரவு இடம்பெற்ற கொடூர கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர், இனந்தெரியாத நபரால் தாக்கப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது
 செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத்தைப் பிரிந்து தனிமையில் வசித்து வந்த குறித்த நபர் கடந்த 27ஆம் திகதி இரவு, கடைக்கு சென்று உணவு வாங்கிக் கொண்டு வீடு நோக்கி திரும்பிய வேளையில், அவரது தலையின் பின்பகுதியில் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் அதிக இரத்தகசிவால் உயிரிழந்ததாக
 தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போது, அப்பகுதியை சேர்ந்த 30 வயதுடைய மரணமடைந்த நபரின் மச்சான் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தியபோது குறித்த சந்தேகநபர் கொலை செய்ததை பொலிஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
மரணமடைந்தவரின் மகளை கொலை செய்வதாக அவர் மிரட்டியதாகக் கூறப்படுவதால் ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக, கோடரி பிடியினால் தலையில் தாக்கியதாக சந்தேக நபர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிசார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் பழம்பாசி - கரடிப்புலவு பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நாகையா நாகராஜா என்பவர் உயிரிழந்தமை என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

வியாழன், 29 ஜனவரி, 2026

பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பிரான்சில் தீ விபத்து


பிரான்சிலுள்ள கோச்செவேல் என்னும் பனிச்சறுக்கு ரிசார்ட்டில் அமைந்துள்ள க்ராண்ட்ஸ் ஆல்ப்ஸ் என்னும் ஹோட்டலில்
 தீப்பற்றியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக, தீவிபத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என ஹொட்டலின் இணையதளம
 தெரிவிக்கிறது. 
அந்த ஹொட்டலில் தங்கியிருந்த 90 பேரும், அதற்கு அருகில் இருக்கும் லே லானா என்னும் ஹோட்டலில் தங்கியிருந்த
 200 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு வேறு ஹோட்டல்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். .என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



புதன், 28 ஜனவரி, 2026

நாட்டில் கிளிநொச்சி கரடிப்போக்கு பகுதியில் டிப்பர் அரச பேருந்து மோதி விபத்து

நாட்டில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A9 பிரதான வீதியில் யாழ்ப்பாணம் இருந்து வவுனியா நோக்கி பயணித்த 
அரச பேருந்துடன் முறிகண்டி பகுதியில் இருந்து
 மணல் ஏற்றி யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் விபத்துக்குள்ளகியுள்ளது.
டிப்பர் சாரதியின் நித்திரை கலக்கம் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி நோக்கி பயணித்த அரச பேருந்துடன் மோதியதில் அரச பேருந்தின் சாரதி மற்றும் பயணிகள் 2 இருவர் மற்றும்
 டிப்பர் சாரதி சாரதி
 உட்பட நான்கு 04பேர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

செவ்வாய், 27 ஜனவரி, 2026

இராணுவ வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதி யாழில் விபத்து

இராணுவ வாகனமும், கார் ஒன்றும் நேருக்கு யாழ்ப்பாணத்தில் நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
யாழ் நகர் பகுதியை அண்மித்த மடத்தடி பகுதியில்.27-01-2026. இன்றைய தினம்  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் எவருக்கும் பாரிய காயங்கள் ஏற்படாத நிலையில், விபத்து தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

திங்கள், 26 ஜனவரி, 2026

நாட்டில் கிளிநொச்சியில் ரயிலுடன் மோதி முதியவர் ஒருவர் மரணம்

நாட்டில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயநகர் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். 
துவிச்சக்கர வண்டியில் கடவையை கடக்க முட்பட்ட முதியவர் அனுராதபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி ரயிலுடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
குறித்த சம்பவம் சம்பவத்தில் கிளிநொச்சி ஆனந்தபுரம் சேர்ந்த சபாபதி என்ற 82 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். 
 சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி   பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

ஞாயிறு, 25 ஜனவரி, 2026

நாட்டில் தம்புள்ளை - ஹபரண வீதியில் லொறி மற்றும் ஆம்புலன்ஸ் மோதி கோர விபத்து

நாட்டில் தம்புள்ளை-ஹபரண பிரதான வீதியில் லொறி மற்றும் ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 
இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக தம்புள்ளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் ஆம்புலன்ஸ் சாரதி மற்றும் பெண் ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களும் தம்புள்ளை பொது 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 
அறிவிக்கப்பட்டுள்ளது. 
 லொறி சாரதியின் கவனக்குறைவான ஓட்டுதலே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ள பொலிஸார்  மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

சனி, 24 ஜனவரி, 2026

திருமண நிகழ்வில் பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதல் -7 பேர் மரணம்

திருமண விழாவில் பாகிஸ்தானில்   நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் டெரா இஸ்மாயில் கான்
  மாவட்டத்தில், கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அரசு தரப்பு சமாதானக் குழு தலைவராக நூர் ஆலம் மெஹ்சூத் என்பவற்றின் வீட்டில் நடந்த திருமணத்தின் போதே தாக்குதல்
 நடந்துள்ளது.
மர்ம நபர் ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். இதில் குறைந்தது 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

வெள்ளி, 23 ஜனவரி, 2026

புனரமைக்காத வீதியால் யாழில் பறிபோன நான்கு உயிர்கள்

யாழ் - உயரப்புலம் வீதி புனரமைக்கப்படாத காரணத்தால் நான்கு உயிர்கள் பறிபோனதாக மானிப்பாய் பிரதேச சபையின் இன்றைய அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டது.
இது குறித்து உறுப்பினர்களான அச்சுதபாயன் மற்றும் எட்வெட் மரியவாசினி ஆகியோர் கருத்து தெரிவிக்கையில், உயரப்புலம் வீதியானது நீண்ட காலமாக புனரமைக்காத நிலையில் காணப்படுகிறது. 
அந்த வீதியால் நோயாளர் காவு வண்டிகள் கூட செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. குறித்த வீதியால் நோயாளர் காவு வண்டி வரமுடியாததால் இதுவரை நான்கு உயிர்கள் பலியாகி உள்ளன. 
இன்னமும் எத்தனை உயிர்கள் பறிபோன பின்னர் அந்த வீதியை புனரமைப்பீர்கள்? எனவே விரைவாக அந்த வீதியை புனரமையுங்கள் என்றார். இது குறித்து தவிசாளர் ஜெசீதன் கருத்து தெரிவிக்கையில், வீதிகள் புனரமைப்புக்கு வரையறுக்கப்பட்ட நிதி 
எமக்கு கிடைக்கிறது.
இயன்ற அளவு நாங்கள் வீதி அபிவிருத்திகளை செய்கின்றோம். பிரச்சினைகளுக்குரிய வீதிகள் தொடர்பான விபரங்களை வழங்குங்கள், விசேட நிதிகள் ஏதாவது கிடைக்கும் பட்சத்தில் அவற்றை நாங்கள் புனரமைப்போம் என்றார்..என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

வியாழன், 22 ஜனவரி, 2026

நாட்டில் வடமராட்சி கிழக்கில் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து.

நாட்டில் யாழ் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
குடத்தனை பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 
அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மருதங்கேணி பிரதேச செயலக கணக்காளரும் சக உத்தியோகஸ்தரும் பயணித்துள்ளனர். மற்றைய மோட்டார் சைக்கிளில் வந்த இன்னொரு நபருமாக மூவர்
 படுகாயமடைதுள்ளனர். 
இந் நிலையில் , விபத்து சிக்கியவர்களை மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

 




 

புதன், 21 ஜனவரி, 2026

கத்திக்குத்து தாக்குதலில் பிரித்தானியாவில் 15 சிறுவன் மரணம்

கத்திக்குத்து தாக்குதலில் பிரித்தானியாவின் கில்ட்ஃபோர்டு பகுதியில் நடந்த  சம்பவத்தில் 15 வயது சிறுவன் 
உயிரிழந்துள்ளான்.
ஸ்டோக் பூங்காவிற்கு அருகில் லிடோ சாலையில் வன்முறை தாக்குதல் நடைபெற்றுள்ளது. கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் 
உறுதி செய்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

திங்கள், 19 ஜனவரி, 2026

தெற்கு ஸ்பெயினில் இரு ரயில்கள் மோதி கோர விபத்து -21 பேர் பலி

தெற்கு ஸ்பெயினில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
 கோர்டோபா மாகாணத்தில் உள்ள அடமுஸ் அருகே நேற்று குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேற்படி விபத்தில் 100 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 18 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும்
 தெரிவிக்கப்பட்டுள்ளது. 
முதலாவதாக பயணித்த ரயில் தடம் புரண்டு தண்டவாளத்தில் விழுந்த நிலையில், இரண்டாவதாக வந்த ரயில் அதனுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளானதாக அதிகாரிகள்
 குறிப்பிட்டுள்ளனர். 
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை .என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

ஞாயிறு, 18 ஜனவரி, 2026

இந்து தொழிலதிபர் வங்கதேசத்தில் அடித்து கொலை

இந்து தொழிலதிபர் வங்கதேசத்தில் லிட்டன் சந்திர கோஷ் என்ற 55 வயது இந்து தொழிலதிபர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். காஜிப்பூர் மாவட்டம் காளிகஞ்ச் பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. 
இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஒரேக் குடும்பத்தை சேர்ந்த மூன்றுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்கள் லிட்டனை அடித்தும், உதைத்தும் சராமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே சரிந்துவிழுந்து உயிரிழந்தார்.
மேலும் வங்கதேசத்தில் சமீபகாலமாக இந்துக்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறைச் சம்பவங்களுக்கும், இந்தப் படுகொலைக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html






 

சனி, 17 ஜனவரி, 2026

பனிமூட்டம் காரணமாக ஏற்பட்ட விபத்தில் பாகிஸ்தானில் 14 பேர் உயிரிழப்பு

மோசமான பனி மூட்டம் காரணமாக பாகிஸ்தானில் ஓட்டுநருக்கு சாலை தெரியாமல் போனதால், பாலத்தில் இருந்து லாரி கவிழ்ந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடும் பனி மூட்டம் காரணமாக முக்கிய சாலைகள் மூடப்பட்டிருந்தது. இதனால் ஓட்டுநர் கிராமம் வழியாக உள்ளூர் சாலை வழியாக லாரியை ஓட்டிச் சென்றார். லாரியில் 23 பேர் இருந்தனர்.
இவர்கள் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தார்.
திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து லாரி பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. இதில் லாரியில் இருந்து 14 பேர் பரிதாபமாக 
உயிரிழந்தனர். 
இதில் 8 பேர் குழந்தைகள் ஆவார்கள். காயம் அடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 5 பேர் பெண்கள் ஆவார்கள்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 16 ஜனவரி, 2026

ரயில் மீது தாய்லாந்தில் விழுந்த பாரிய கிரேன் பலி எண்ணிக்கை உயர்வு

ரயில் மீது தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வடகிழக்கில் உள்ள உபோன் ராட்சதானி மாகாணத்திற்கு 195 பேருடன் ரயில் சென்று கொண்டிருந்தது.
அந்த ரயில் நக்கோன் ராட்சசிமா மாகாணம் சிக்கியோ மாவட்டத்தில் விபத்தில் சிக்கியது. உயர்த்தப்பட்ட அதிவேக ரெயில் பாதை அமைக்கும் பணிக்காகப் பயன்படுத்தப்பட்ட ராட்சத கிரேன் ஒன்று திடீரென்று 
சரிந்து ரயில் மீது விழுந்தது.
இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

புதன், 14 ஜனவரி, 2026

ரயில் மீது .தாய்லாந்தில் விழுந்த பாரிய கிரேன் - 28 பயணிகள் உயிரிழப்பு

தாய்லாந்தில் ரயில் ஒன்றின்மீது கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட கிரேன் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர்
 உயிரிழந்துள்ளனர். 
அத்துடன் 80 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விபத்து நடந்த நேரத்தில் ரயிலில் சுமார் 195 பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது மீட்பு பணிகள் தொடர்வதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிட்டுள்ளது. 
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

செவ்வாய், 13 ஜனவரி, 2026

பனிச்சரிவில் சிக்கி பிரான்சில் பிரிட்டிஷ் வீரர் உயிரிழப்பு

பிரெஞ்சு ஆல்ப்ஸில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பிரிட்டிஷ் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 50 வயது மதிக்கத்தக்க அந்த நபர், லா பிளாக்னேயில் ஒரு குழுவுடன் பனிச்சறுக்கு விளையாடிக் கொண்டிருந்த 
போது சிக்கியுள்ளார்.
பனிச்சரிவு பயிற்றுவிப்பாளர் இல்லாமல் அவர் பனிச்சறுக்கு விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் இறந்த பிரிட்டிஷ் நபரின் குடும்பத்திற்கு ஆதரவளிப்பதாகவும், அவர் தொடர்புடைய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் வெளியுறவு அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html