கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள நார்ஃபோக் கவுண்டி பகுதியில் உள்ள ஒரு பெரிய பண்ணைத் தீ விபத்தில், சுமார் 20,000 பன்றிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகத் தீயணைப்புத் துறை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
சிம்கோ நகருக்கு வெளியே உள்ள 'ஹைவே 3' பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பெரிய பண்ணையில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது.
பண்ணைக் கட்டிடம் முழுவதும் தீ பரவி கொளுந்துவிட்டு எரிந்ததால், அதனை அணைக்கப் பெருமளவிலான தீயணைப்பு வீரர்கள்
களமிறக்கப்பட்டனர்.
இத்தீயணைப்புப் பணியில்: 8 வெவ்வேறு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 40 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
தீயின் வீரியத்தால் பண்ணைக் கட்டிடம் முற்றிலும் சேதமடைந்த போதிலும் அதிர்ஷ்டவசமாக மனிதர்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்தத் விபத்துக்கான சரியான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை..என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக