siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 1 நவம்பர், 2026

மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

யாழில் 01-11-2026- இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். 
சுன்னாகம் பகுதியை சேர்ந்த 17 வயது மற்றும் 24 வயது இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். 
இருவரும் மோட்டார் சைக்கிளில் ஒன்றில் மிக வேகமாக வீதியில் பயணித்த வேளை , அளவெட்டி அழுக்கை சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மின் கம்பத்துடன் மோதி , விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்களும், சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். 
உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்களையும் மீட்டு , தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ள தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navakkiri.blogspot.com/2026/10/blog-post_20.html

மரண அறிவித்தல் அமரர் பாலச்சந்திரன் குவிக்சன்


துயர்  பகிர்வு-மலர்வு:-00 -உதிர்வு: 01-11-2026. 

கிளிநொச்சி உதயநகர் கிழக்கைச் சேர்ந்தவரும், 2014 ஆம் ஆண்டு கலைப்பிரிவு (KCC) மாணவருமான பாலச்சந்திரன் குவிக்சன் அவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
பாலச்சந்திரன் குவிக்சன்  (வயது 30 )
இடம் : உதயநகர் கிழக்கு, கிளிநொச்சி
அன்னாரின் ஆன்மா சாந்தியடையப்பிரார்த்திப்போம்.அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி 
தகவல்: குடும்பத்தினர்

https://navakkiri.blogspot.com/2026/10/blog-post_20.html