siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 27 அக்டோபர், 2026

மரண அறிவித்தல் அமெரிக்காவில் இளம் மாணவி நள்ளமலா அக்ஷிதா

துயர்  பகிர்வு-மலர்வு:- -உதிர்வு: 26-10-2026
.
அமெரிக்காவில் இளம் மாணவி உயிரிழப்பு – குடும்பத்தினரைச் சோகத்தில் ஆழ்த்திய துயரச் சம்பவம்!
அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம், அல்பானி (Albany) நகரில் தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுடைய நள்ளமலா அக்ஷிதா உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

 உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற அக்ஷிதா, தனது முதுகலைப் பட்டப்படிப்பை (M.S.) நிறைவு செய்து, விரைவில் பணியில் இணையத் தயாராக இருந்ததாகக் கூறப்படுகிறது.

 இரவு உணவிற்குப் பின்னர் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல கனவுகளுடன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்கத் தயாராக இருந்த இளம் மாணவியின் மறைவு, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி 
தகவல்: குடும்பத்தினர்

https://navakkiri.blogspot.com/2026/10/blog-post_20.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக