siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 30 அக்டோபர், 2015

இலங்கைக்கு விண்ணிலிருந்து விழும் மர்மப்பொருளால் ஆபத்து இல்லை?

நவம்பர் 13ம் திகதி விண்ணில் இருந்து விழும், WTF1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப் பொருளினால் இலங்கைக்கு எந்த ஆபத்தோ, சேதமோ ஏற்படாது என்று கலாநிதி சந்தன ஜெயரத்ன 
தெரிவித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழக பௌதிகவியல் மூத்த விரிவுரையாளரும், ஆர்தர் சி கிளார்க் மையத்தின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞானத்துறை ஆலோசகருமான கலாநிதி சந்தன ஜெயரத்ன இதுகுறித்து மேலும் தகவல் வெளியிடுகையில்,
வானில் இருந்து விழும் பொருள் பெரும்பாலும் வெடித்து, புவி மேற்பரப்பை அடைய முன்னர் எரிந்து விடும். எனவே இதுகுறித்து அச்சமடைய வேண்டிய தேவை இல்லை.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்ற இடத்தில், இந்த மர்மப் பொருள் விழும் என்று எதிர்பார்க்க முடியாது. அது கடைசி நேரத்தில் மாறக் கூடும்.
கடந்த காலங்களில் விண்ணில் இருந்து பொருட்கள் பற்றிய விஞ்ஞானிகளின் எதிர்வுகூறல்கள் மாறியிருக்கின்றன என்றும் அவர் கூறியிருக்கிறார்.
விண்ணில் இருந்து விழும் குறித்த மர்மப் பொருள், வரும் நவம்பர் 13ஆம் நாள் அம்பாந்தோட்டைக்குத் தெற்கே 100 கி.மீ தொலைவிலுள்ள கடற்பகுதியில் விழும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


புதன், 28 அக்டோபர், 2015

தொலைக்காட்சி திருட்டில் திருடர்கள் சிக்கினர்

 மல்லாகம் ரயில் நிலைய வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து தொலைக்காட்சியைத் திருடிய 4 சந்தேகநபர்களை, நேற்று கைது செய்ததாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி வீட்டில் கடந்த 23ஆம் திகதி குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றது.  இது தொடர்பில் குறித்த வீட்டைக் கண்காணிக்கும் பெண், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு 
செய்துள்ளார்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர்கள் நால்வரை பொலிஸார் கைது 
செய்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வீடு ஒன்றில் பட்டப்பகலில் கொள்ளையர்களினால் திருட்டு


சுன்னாகம் kks வீதி கொத்தியாலடி சந்தியில் உள்ள வீடு ஒன்றில் கூரை வழியாக சென்று கொள்ளை இடம்பெற்றுள்ளது.
இவ் வீட்டில் தம்பதிகள் வேலைக்கு சென்ற வேளையில் இந்த திருடர்கள் தம் கைவரிசையை காட்டியுள்ளனர்.வீட்டின் கூரை வழியாக உள்நுழைந்த திருடன் வீட்டில் இருந்த பெரும் மதிப்புள்ள கணணியை களவாடி வீட்டின் கதவை திறந்து சென்றுள்ளான்.
மாலை வேலை முடிந்து வீடுதிரும்பிய தம்பதியினர் வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.பின்னர் சுன்னாகம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை 
மேற்கொண்டு வருகின்றனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சில பகுதிகள் யாழ்- கண்டி ஏ9 வீதியின் உடைவு!

யாழ்ப்பாணம் கண்டிவரையான ஏ-9 வீதியின், கடுகஸ்தொட மற்றும் அம்பதென்ன வரையான வீதியில் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
பிரதேசத்தில் பெய்யும் அதிக மழையுடன் கூடிய காலநிலையே இதற்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் பல பகுதிகளிலும் தற்பொழுது கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளப்பெருக்குகம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, கிழக்கு மாகாணங்களில் பல பிரதேசங்கள் அதிகரித்த மழை வீழ்ச்சியினால் வீதிப் போக்கு வரத்து தடைப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன...
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சரணாலயத்தில் வெளிநாட்டுப் பெண் திடீர் மரணம்???

யால வனவிலங்கு சரணாலயத்தில் வெளிநாட்டுப் பணிப் பெண் ஒருவர் திடீரென மரணித்துள்ளதாக திஸ்ஸமஹாரம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யால வனவிலங்கு சரணாலயத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்த போது குறித்த வெளிநாட்டுப் பெண் திடீரென சுகவீன
முற்றுள்ளார்.
சுகவீனமுற்ற பெண் திஸ்ஸமஹாரம தெபரவௌல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிந்தவர் சீனப் பெண் எனவும் கடந்த 24ம் திகதி அவர்
 இலங்கைக்கு 
வந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த பெண்ணுடன் மற்றுமொரு சீனப் பெண்ணும் இருந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் திஸ்ஸமஹாரம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


செவ்வாய், 27 அக்டோபர், 2015

பொலிஸிற்கு திருடனை பிடிக்க உதவிய சிறுவன்!!!

வவுனியா பூந்தோட்டம் சந்தியில் கடந்த வெள்ளிக்கிழமை கடை ஒன்று உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றிருந்தது. இக்கடையுடைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய
 நபரை பொலிசார் தேடியவேளை திருட்டுப்போன கடைக்கு அருகாமையில் வசித்துவரும் 12 வயது சிறுவனான இ.கிருசாந்தன் வவுனியா பொலிசாருக்கு சந்தேக நபர் வாய்பேச முடியாதவர் என்ற தகவலை வழங்கியதையடுத்து பொலிசார் சந்தேக நபரை வவுனியா பேரூந்து நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் வைத்து ஞாயிற்றுக்கிழமை 
கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞன் வாய்பேசமாட்டாதவன். அவனிடம் சிறப்பாக சைகை மொழியில் பேசியே தகவல்களை பெறவேண்டியிருந்தது. பொலிசாரின் விசாரணைகளில் முழுமையாக தகவல்களை பெறமுடியாது போக 12 வயது சிறுவனாகிய கிருசாந்தனின் உதவையை 
நாடினர் பொலிசார். அவனது தாயும், தந்தையும் பேசமாட்டாதவர்கள் என்பதால் சைகை மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தான் கிருசாந்தன். இதனால் அவன் பொலிஸ் விசாரணைக்கு பெரிதும் உதவினான். இதனையடுத்து வவுனியா பொலிசார் சிறுவனை பாராட்டியதுடன் இச்சிறுவனுக்கு விருதுக்கு பரிந்துரை செய்யவிருப்பதாகவும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த 
கிருசாந்தன்:
மரவேலை செய்யும் பட்டறையுடன் கூடிய தங்கள் வீட்டுக்கு வந்த வாய்பேசமாட்டாத இளைஞன் ஒருவன் தனது தந்தையுடன் உரையாடிக்கொண்டிருந்ததாகவும் அதன்பின் அவனது செயற்பாடுகளில் தந்தைக்கு சந்தேகம் ஏற்பட்டதினால். இருவரும் அவனைப் 
பின்தொடர்ந்து 
தேடிய போது பூந்தோட்டம் சந்தியில் உள்ள ஒரு கடை ஒன்றின் பின்புறமாக குறித்த இளைஞன் படுத்திருந்துள்ளான் என தெரிவித்த சிறுவன் விடிந்ததும் பார்த்த போது அவன் படுத்திருந்த கடைக்கு அருகிலுள்ள கடை உடைக்கப்பட்டு திருடப்பட்டிருந்தமை தெரியவந்தது 
என தெரிவித்தான்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


திங்கள், 26 அக்டோபர், 2015

தமிழரின் ஒரு கையில் வாளுடன் பெண்ணுக்கு தாலி கட்டு

ஐரோப்பாவில் வன்முறைகளும் வாள்வெட்டு குழுக்களின் அட்டகாசங்களும் அதிகரித்து வருவதற்கு அண்மையில் ஜேர்மனி முன்சனில் நடந்த திருமணம் உதாரணமாக அமைந்தது.
வாள் வெட்டு அடிதடி வன்முறைகளில் ஈடுபடுவதை ஒரு உயர்ந்த தகமையாக கருதும் போக்கும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர்களிடையே வளர்ந்து வருவதையே இது காட்டுகிறது. திருமணத்தின் போதும் மாப்பிள்ளையை அழைத்து செல்லும் போதும் மாப்பிள்ளை கையில் வாழுடன் சென்றதை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
வாளுடன் சென்ற மாப்பிள்ளை வாள் வெட்டுக்குழுவை சேர்ந்தவராக என்பது தெரியவில்லை. தன் மங்களகரமான திருமண வைபவத்திற்கு சென்ற போது கொலை வெறிகொண்ட வாளை ஏன் எடுத்து சென்றார் என்பது திருமணத்திற்கு சென்ற பலரின் கேள்வியாக இருந்தது.
வாள்வெட்டு குழுவை சேர்ந்தவர்களை திருமணம் முடிப்பதற்கும் சில பெண்கள் காத்திருக்கிறார்கள் என அத்திருமணத்திற்கு சென்றவர்கள் பேசிக்கொண்டனர்.
இலங்கையின் வடபகுதியில் வாள்வெட்டு சம்பங்களும் வன்முறைக்குழுக்களின் அட்டகாசம் அண்மைக்காலத்தில் அதிகரித்திருக்கும் நிலையில் பொது வைபவம் ஒன்றிலேயே அதுவும் திருமண வைபவத்தில் வாளுடன் சென்று பெண்ணுக்கு தாலிகட்டிய சம்பவம் இதுவே முதல் தடவையாகும்.
பெண்ணுக்கு தாலி கட்டும் போது மட்டும் வாளை கீழை வைத்திருந்த இந்நபர் பின்னர் தாலி கட்டி பெண்ணை அழைத்து சென்ற போதும் வாளுடனேயே சென்றார்.
இந்நபர் இரவில் படுக்கும் போது வாள்களை வைத்துக்கொண்டுதான் உறங்குவார் என கூறப்படுகிறது.

தமிழர் திருமண பாரம்பரியம் என்பது மங்களகரமாக வேட்டி சால்வை அணிந்து ஊர்வலமாக அழைத்து சென்று பெண்ணுக்கு தாலி கட்டுவதாகும். கத்தியுடனோ வாளுடனோ துப்பாக்கியுடனோ சென்று பெண்ணுக்கு தாலி கட்டுவதில்லை.
ஜேர்மனியில் தமிழர் ஒருவர் முதல் தடவையாக வாளுடன் சென்று தாலி கட்டியிருக்கிறார். எதிர்காலத்தில் கத்தியுடன் துப்பாக்கியுடன் சென்று தாலி கட்டும் முறைகளும் அறிமுகப்படுத்தப்படலாம்.
ஏனெனில் ஐரோப்பாவில் தமிழர்கள் மத்தியில் வன்முறைகலாசாரம் எல்லை மீறி செயல்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 24 அக்டோபர், 2015

மோட்டார் சைக்கிள் மோதி பெண் ஒருவர் விபத்துக்குள்ளனர்

யாழ்பாணம் கே.கே.எஸ் வீதியில் இரவு 18.50 அளவில் இணுவில் பகுதியில் இச் சம்வம் இடம்பெற்றுள்ளது.
சுன்னாகத்தில் இருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மஞ்சள் கோட்டின் ஊடாக வீதியை கடக்க முற்பட்ட பெண் ஒருவருடன் மோதி வீதியின் எதிர் பக்கமாக உள்ள (50m) துரத்தில் கடைகளுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரு மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு இறுதியாக மின்சார கம்பத்துடன் மோதியது.
இதில் வீதியை கடக்க முற்பட்ட பெண்ணுக்கு தலையில் பலமான காயம் ஏற்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். இது குறித்து பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

நடிகை மனோரமா உடல்நலக்குறைவால் காலமானார்

தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்பட்ட மனோரமா ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.
தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர்.
அண்ணா மற்றும் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என். டி. ராமராவ் ஆகியோருடன் இவர் நடித்திருந்ததால் இந்த பெருமையை
 பெற்றிருந்தார்.
மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் கோபி சாந்தா. பத்மஸ்ரீ, தமிழ்நாடு அரசின் கலைமாமணி, தேசிய திரைப்பட விருது போன்ற பல விருதுகளை பெற்றவர் மனோரமா. பின்னணி பாடல்களையும் 
பாடியுள்ளார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மனோரமா இன்று இரவு 11 மணியளவில் மரணமடைந்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



திங்கள், 21 செப்டம்பர், 2015

யாழில் அதிக வருமானம் கொண்ட பயிர் கோவா?

யாழ். மாவட்டத்திலே கடந்த 2009 ஆம் ஆண்டினை விட 2015 ஆம் ஆண்டு  இம்முறை அதிகமான வருமானங்கள் கொண்ட விவசாய பயிராக கோவா பயிர்ச்செய்கை காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து 2010 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை 495.5 ஹெக்டயர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட இப்பயிர்ச்செய்கை 150.03 மெற்றிக்தொன் உற்பத்திகள் யாழ்.மாவட்டத்தில் கிடைத்துள்ளதாக யாழ.; மாவட்ட விவசாய புள்ளிவிபரத்தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அவற்றின் அடிப்படையில் படிப்படியாக அரசாங்கத்தினால் விவசாயிகளுக்கான சலுகை அடிப்படையிலான திட்டங்கள்,மற்றும் மானியத் திட்டங்கள் என்பன முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கோப்பாய்,அச்செழு, புன்னாலைக்கட்டுவான்,  சுன்னாகம், மருதனார் மடம்,கரவெட்டி, உரும்பிராய், ஊரெழு,நிலாவரை ஆகிய பகுதிகளில் தற்போது சிறு ஏக்கர்களாக 1654.3 ஹெக்டயர் நிலப்பரப்பில் இவ் கோவா உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக விவசாய புள்ளிவிபரத்தரவுகள் குறிப்பிடுகின்றன.அவற்றில் தற்போது அறுவடைகளும் மும்முரமாக இடம்பெற்று வருவதுடன் அவ் உற்பத்திகளை உள்ளுர்,மற்றும் வெளியூர் சந்தைகளுக்கும் எற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

கோவா உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யும் வியாபாரிகள் ஒரு கிலோ கோவா 50 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படுகின்றன. என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.அதன் அடிப்படையில் யாழ். மாவட்டத்தின் உள்ளுர் சந்தையின் நிலவரத்தின்படி ஒரு கிலோ கோவா 60  ரூபாவிலிருந்து 70 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



புதன், 3 ஜூன், 2015

ஆலய கதவுடைத்துப் பொருட்கள் திருட்டு

யாழ்.அளவெட்டி கும்பிளாவளைப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகிலுள்ள வீடொன்றில் வீட்டு உரிமையாளர்கள் வீட்டைப் பூட்டி விட்டு அருகிலுள்ள ஆலயமொன்றிற்குச் சென்றிருந்த நிலையில் குறித்த வீட்டின் முன்கதவை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த பணம், நகை மற்றும் உடைமைகள் என மூன்று இலட்சத்து 89 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர்.
குறித்த திருட்டுச் சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (31.5.2015) இடம்பெற்றுள்ளது.
வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 56 ஆயிரம் ரூபா பெறுமதியான பணம், ஐந்து பவுண் நகை, மோட்டார்ச் சைக்கிள்,துவிச்சக்கர வண்டி என்பனவே இவ்வாறு திருட்டுப் போயுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் நேற்றுத் திங்கட்கிழமை செய்த முறைப்பாட்டின் பிரகாரம் தெல்லிப்பழைப் பொலிஸார் புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 26 மே, 2015

!பருத்தித்துறையிலோ!! அனுமதி சுன்னாகத்தில் தடை!!!

யாழ்ப்பாணம், திக்கம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை  நடத்தப்படவுள்ள ஊர்வலத்துக்கு தடையுத்தரவு பிறப்பிக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ள நிலையினில் சுன்னாகம் நீதிமன்றமோ இதே காரணத்திற்கான
 போராட்டத்திற்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுன்னாகம்  பகுதியில் எதிர்ப்பு ஊர்வலமொன்றை நடத்த ஏற்பாடாகியிருந்தது. இந் நிலையிலேயே, பாதுகாப்பு காரணம் கொண்டு அவ்வூர்வலத்தை நடத்த தடையுத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றினில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை பரிசீலனைக்கு உட்படுத்திய மல்லாகம் நீதவான் தடை உத்தரவு விதித்து கட்டளை பிறப்பித்துள்ளார்.
எனினும் இதே போன்று பருத்தித்துறை நீதிமன்றினில் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை பரிசீலித்த நீதிபதி 'ஜனநாயக நாட்டில் ஊர்வலம் நடத்துவதற்கு அனைத்து மக்களுக்கும் உரிமையுண்டு. அந்த ஊர்வலத்தில் வன்முறைகள் அசம்பாவிதங்கள் ஏற்படாமலும் அரசாங்க உடமைகளுக்கும் பொதுமக்களின் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படாமல் பொலிஸார் பாதுகாப்பு வழங்க வேண்டுமெனக்கூறி தடை உத்தரவு பிறப்பிக்க
 மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 17 மே, 2015

தொடர் மழை தாழ்நிலப் பகுதி வெள்ளத்தில்

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன.
கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இதனால் பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், மீனவர்கள் என பலரும் பாதிப்படைந்துள்ளனர்.
குறிப்பாக நாவாந்துறை, காக்கைதீவு 
சூரியவெளி, நித்தியஒளி, வசந்தபுரம், சமிநகர் போன்ற பகுதிகளில் பெருகி வரும் மழை வெள்ளம் காரணமாக குடியிருப்புக்களுக்குள் வெள்ள நீர் புகும் ஆபாயம் உள்ளதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இயற்கை அனர்த்தத்தினால் பாதிப்படைந்துள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்குமாறு மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதேச செயலக தகவலின் 
அடிப்படையில் யாழ்.மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக ஜே 85 கிராம சேவையாளர் பிரிவில் நாவாந்துறை வடக்கு பகுதியில் அமைந்துள்ள 308 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனைத்திற்கும் அனர்த்த முகாமைத்துவத்தினால் வெள்ள நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதேச கிராமசேவையாளர் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 16 மே, 2015

சிறையில் முன்னாள் போராளி மரணம்!

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியான முன்னாள் போராளி சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.
மகசின் சிறைச்சாலைக் கைதியான 36 வயதுடைய கொடிகாமத்தைச் சேர்ந்த சுந்தரம் சதீஸ் என்னும் முன்னாள் போராளியே சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் குளித்துக் கொண்டிருந்த நிலையில் கிணற்றடியில் வழுக்கி  விழுந்தபோதிலும், இவரின் உடல்நிலையைக் கண்டுகொள்ளாத சிறை அதிகாரிகள், சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னரே வைத்தியசாலைக்கு கூட்டிச் சென்றுள்ளனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் இன்று  கொழும்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். 
சிறைச்சாலையில் உயிரிழந்த நான்காவது அரசியற் சிறைக் கைதி இவராவார்.
சிறை அதிகாரிகளின் அசமந்த போக்கே இம்முன்னாள் போராளியின் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது என ஏனைய அரசியற் கைதிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
சயனைட் அருந்திய நிலையில் இராணுவத்தினரிடம் பிடிபட்டு காப்பாற்றப்பட்ட இவர், மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் ஏனைய அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட கைதிகளுக்கு வழங்கும் சலுகைகள், முன்னாள் போராளிகளுக்கு சிறை அதிகாரிகளால் வழங்கப்படுவதில்லையெனவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 10 மே, 2015

ஆணின் சடலம் வன்னேரிக்குளத்தில் கண்டுபிடிப்பு

 கிளிநொச்சி, வன்னேரிக்குளம் சோலை பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்னர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டது. காட்டுப்பகுதிக்குச் சென்றவர்கள் சிலர் சடலத்தை
 கண்டு அக்கராயன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் சடலத்தைப் பார்வையிட்டு, உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
பொதுமக்களால் சந்தேகத்தின் பெயரில் பிடிக்கப்பட்ட இருவரை பொலிஸார் கைது செய்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்துள்ளனர். முன்று பிள்ளைகளின் தந்தையான நா.பரமேஸ்வரன் (வயது 48) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேறந்கொண்டுன்னளர்
  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

உங்கள் இராசி பலன்கள் 27-4-15முதல்3-5-15வரை

மேஷம்
1.மேசம்:-மேசராசி அன்பர்களே சூரியன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்27,28,29 வேலை இல்லாதவர்களுக்கு வெகு நாட்களாக எதிர் பார்த்து இருந்த புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் காலமாகும்.உடம்பில் தோல் மற்றும் ரத்த சம்பந்தமாகிய பிணிகள் வந்து போகும். விட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
 கண்களில் கவனமுடன் இருப்பது நல்லது. பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும் மிகுந்த பிரயாசையின் பேரில் சமாளித்துக் கொள்வீர்கள்.குடும்பத்தில் ஏற்படும்.ஏப்ரல்30;மே1உடல் நிலை பாதிப்புகள் நீங்குவதற்காக மருத்துவத்திற்காக வெளியுர் பயணங்களை மேற் கொள்வீர்கள். பேப்பர்,பேனா பென்சில் போன்ற எழுது பொருட்கள் போன்ற ஸ்டே~னரி சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்வோர்கள்,அச்சுத் துறையைச் சார்ந்த பொருட்கள் விற்பனையாளர்கள்,கவிஞர்கள்,
எழுத்தாளர்கள்,பாடலாசிரியர்கள்,தபால் தந்தித் துறைகளைச் சார்ந்தவர்கள்,காய்கரிகள்,இலை மற்றும் சிற்றுண்டி வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். மே2,3நெடு நாட்களாகப் பிரச்சனையில் இருந்த குடும்பச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரக் கூடிய காலமாகும்.அரசு வழக்குகளில் சாதகமான நல்ல தீர்ப்புகளை எதிர் பார்க்கலாம்.விபரீத எண்ணங்களை விட்டுக் காரியத்தைக் கவனிக்கவும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-மஹாவி~;ணு வழிபாடு செய்து அன்ன தானம் செய்த வரவும்.
ரிசபம்
2.ரிசபம்:-ரிசபராசி அன்பர்களே சூரியன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்27,28,29வராத கடன் கொடுத்துள்ள பணம் எதிர் பாராமல் திரும்பக் கிடைக்கும்.உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் முன் கோபத்தை தவிர்த்துப் பணியாற்றுதல் நல்லது. உடம்பில் மூளை நரம்பு எலும்பு போன்ற உபாதைகள் வந்து போகலாம். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்த சுமூகமான உறவுகள் ஏற்புடும்.புதிய கூட்டுத் தெழில் முயற்சிகளை சற்று கால தாமதமாக
 தொடங்குவது நல்லது.ஏப்ரல்30,31எதிர் பாராமல் வட திசையில் இருந்து பொருள் வரவும், நல்ல செய்திகளும் வந்து சேரும். வீடுகளைப் புதுப்பித்துக் கட்டுவதற்காக பணச் செலவுகள் வந்து சேரும்.பூர்வீக இடங்களை விட்டு மாறிச் செல்லத் திட்டம் போடுவீர்கள். ஆதரவு அற்ற ஏழைகளுக்காக உதவி செய்து அதனால் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.மே1,2நண்பர்களால் வீண் விவாதங்களும் தொல்லைகளும் வந்து போகும். கட்டிட சம்பந்தமான செங்கல் மணல்,கல் போன்ற பொருட்களை விற்பனை செய்வோர்கள்.அழகு கலைக் கூடங்களை நடத்துவோர்கள்,சினிமா நாடகம் போன்ற துறை சார்ந்தவர்கள்,ஆடு மாடு,கார் லாரி போன்ற வாகனத் தொழிற் செய்வோர்கள்,கலைக் கல்லூரி மாணவர்கள்,ஆசிரியர்கள் ஆபரணங்கள் மற்றும் நவ ரத்தின வியாபாரிகள் ஆகியோர்கள் நற் பலன் அடைவீர்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-மஹாலட்சுமி வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.
மிதுனம்
3.மிதுனம்:-மிதுனராசி அன்பர்களே புதன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்27,28,29 கம்யுட்டர் சம்பந்தமாகிய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள், பழ வியாபாரிகள்,அநாதை ஆசிரமங்களை நடத்துவோர்கள்,அற நிலையத்துறை சார்ந்தவர்கள்,பூஜைப் பொருள் வியாபாரிகள்,உணவு தானிய வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல இலாபம் பெறுவார்கள்.தாயின் உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகுவதோடு மருத்துவச் செலவுகள் ஏற்படும். நீண்ட காலமாகக் காணாமற் போன பொருட்கள் மற்றும் நபர்கள் திரும்ப வீடு வந்து சேரும் காலமாகும்..ஏப்ரல்30மே1திருமணம் போன்ற சுப காரிய நிகழ்சிகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள்.யாத்திரையில் கவனமுடன் பயணம் செய்யவும். போட்டி லாட்டரி மூலமாகத் திடீர் தன வரகவள் உண்டாகும்.சொத்து சம்பந்தமாகிய வழக்கு விசயங்களில் நல்ல முடிவுகள் ஏற்படும். மே2,3பிள்ளைகளால் எதிர் பாராத சிற்சில ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ளது.எதிர் பார்த்த பண உதவிகள் உறவினர்களால் கிடைக்கும். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்கான மயங்சிகளில் ஈடு படுவீர்கள். தீர்த்த யாத்திரைகளுக்காக நீண்ட தூரப் பிரயாணங்களை மேற் கொள்வீர்கள். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-சிவ ஆலய வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.
கடகம்
4.கடகம்:-கடகராசி அன்பர்களே ராகு நன்மை தரும் கிரகமாகும்..ஏப்ரல்27;,28சேர் மார்க்கெட், கணிதம்,எழுத்துத் துறை சார்ந்தவர்கள், அரசியல் வாதிகள், அரசு உயர் பதவிகள் வகிப்பவர்கள்,நெருப்பு சம்பந்தமான உணவு பொருட்களின் வியாபாரிகள்,நிலக்கரி மற்றும் விறகு பொன்ற எரி பொருள் வியாபாரிகள் ஆகியோர்கள் மிகவும் ஆதாயம் அடைவார்கள்.ஏப்ரல்29,30மே1,2வெளிநாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் சம்பந்தம் இல்லாத நபர்களால் சில ஆதாயங்கள் வந்து சேருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. குல தெய்வ ஆலயங்களைப் புதுப்பிதலுக்கான முயற்சிகளில் நற்பெயர் பெறுவீர்கள். ரேஸ்,லாட்டரி போன்ற சூதாட்ட சம்பந்தமான விசயங்களினால் பணம் கை விட்டுப் போக இருப்பதால் கூதட்டங்களைத் தவிர்ப்பது நல்லதாகும்.சம்பந்தம் இல்லாத அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிட்டு மனக் கவலை அடையாதீர்கள்.
முன் கோபத்தை தவிர்த்து அண்டை அயலாருடன் கவனமாகப் பேசி; பழகுதல் நல்லது.குல தெய்வ வழிபாடு செய்து வருதலால் கிரக தோசங்கள் நீங்க வாய்ப்பு உள்ளது.மே3உறவினர்கள் மற்றும் சொந்த பந்தங்களால் ஆதரவு இல்லை. பண விசயங்களுக்கான நீண்ட தூரப் பயணங்களைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது குல தெய்வ ஆலயங்களைத் திருத்தி கட்டப் போட்ட திட்டங்களில் சிறிய தடைகளின் பேரில் வெற்றி அடைவீர்கள். பொதுவாக இது ஒரு நற்பலன் தராத வாரமாகும்.
இராசியான எண்_1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:-சிவ ஆலய வழிபாடு செய்து அன்ன தானம் செய்த வரவும்.
சிம்மம்
5.சிம்மம்:-சிம்மராசி அன்பர்களே சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்27,28தீராத நாட் பட்ட நோய்களுக்கு விடை காணுவீர்கள்.உற்றார்  உறவினர்களின் எதிர் பாராத திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் எதிர் பாராத சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள்.. வெளி நாடு செல்லுதல் போன்ற புதியமுயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.கண் காதுகளில் கவனமுடன்
 இருக்கவும். கூட்டுத் தொழில் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள்.ஏப்ரல29,30பொருளாதார நெருக்கடிகள் மாறித் தேவையான பொருளாதாரம் வந்து சேரும்.உடம்பில் முதுகு மற்றும் வயிறு ஆகிய உபாதைகள் வந்து போகும்.விபரீதமான எண்ணங்களை விட்டொழித்து காரியத்தில் கவனமாய் இருங்கள். சொத்து சம்பந்தமாகிய வழக்கு விசயத்தில் சாதகமான நல்ல முடிவுகளை எதிர் பார்க்கலாம்.மே1,2,3ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள்,இரும்பு இயந்திரம் எண்ணை சம்பந்தமான வியாபாரிகள்,பலசரக்கு தொழிற் செய்வோர்கள்,பழைய இரும்பு பொருட்கள் மற்றும் கழிவுப் பொருட்களின் வியாபாரிகள்,அலுவலகப் பணி உதவியாளர்
கள்,மிசினரி சம்பந்தமான உதிரிபாகங்களை ஏற்றுமதி இறக்குதி செய்வோர்கள்,பெட்ரோல்,
டீசல்,மண் எண்ணை போன்ற எரி பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் மிகவும் ஆதாயம் அடைவார்கள்.புதிய கடன்கள் வாங்கிப் பழையகடன்களை அடைப்பீர்கள்.தேவை
யற்ற நண்பர்களின் தொடர்புகளால் பிரச்சனைகள் வர இருப்பதால் கவனமுடன் பழகுதல் நல்லதாகும்..பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம் 
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-ஐயப்பன் வழிபாடு செய்து வரவும்.
கன்னி
6.கன்னி:-கன்னிராசி அன்பர்களே செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்27,28 திருமண தகவல் மையங்கள்,வாகனங்களில் பணியாற்றுவோர்கள்,அரசுத் துறையைச் சார்ந்த வழக்கறிஞர்கள்,நெருப்பு சம்பந்தமான ஹோட்டல் தொழிற் செய்வோர்கள், அரசுத் துறை சார்ந்த மந்திரி பதவி வகிப்போர்கள்,வெளி நாட்டுத் தூதுவர்கள்,ஜவுளி மற்றும் நூல் வியாபாரிகள் ஆகியோர்கள் மிகவும் நற்பலன் அடைவார்கள்.மூத்த சகோதரர்களால் பொருட் செலவுகள் மற்றும் மன நிம்மதிக் குறைவுகள் ஏற்படலாம்.. ஏப்ரல்29,30மே1உத்தியோகத் துறையினருக்கு பணி இட மாற்றமும் பதவி உயர்வுகளும் வரக் கூடும். பெண்கள் சம்பந்தமான காதல் விசயத்தில் எதிர் பார்த்து இருந்த நல்ல செய்திகள் வந்து சேரும் காலமாகும்.குல தெய்வ வழிபாட்டிற்காக
 துலை தூரப் பயணங்களை மேற் கொள்ள நேரும். நாட் பட்ட பழைய கடன்கள் மீண்டும் தொல்லை தர வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக புதிய கட்டிடம் கட்டப் போட்ட திட்டங்கள் நிறைவேறும்மே.2,3ரேஸ்லாட்டரி போன்றவற்றின் மூலம் திடீர் தனவரவுகள் உண்டாகும்.குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரிய நிகழச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்கள் சந்திப்பு உண்டாகி அவர்களால் காரியங்களைச் சாதித்து கொள்வீர்கள்.மற்றவர்களுக்காக ஜாமீன் போடுவதை தவிர்க்கவும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற் பலன் தரும் வாரமாகும்
இராசியான எண்:-1,2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு,மேற்கு
பரிகாரம்:-சிவன் மற்றும் அம்மன் வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.
துலாம்
7.துலாம்:-துலாம்ராசி அன்பர்களே வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்27,28; அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் காரணமற்ற பிரச்சனைகள் வர இருப்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லதாகும். விளையாட்டுத் துறைகளைச் சார்ந்தவர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுகள் கிடைக்கும்.சூதாட்டம் போன்ற காரியங்களில் தலையிட்டு பொருள் இழப்பு ஏற்பட இருப்பதால் சூதாட்டங்களைத் தவிர்தல் நல்லதாகும்.ஏப்ரல்29,30;மே1எதிர் பாராத நீண்ட தூரப் பயணங்களின் மூலம் மன நிறைவடைய வாய்ப்பு உள்ளது.திருட்டுப் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். புதிய பெரிய மனிதர்களையும் அரசியல் வாதிகளையும் 
சந்திக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் வெற்றி அளிக்கும்.பொருளாதாரத்தில் இது நாள் வரையில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறிச் சற்று முன்னேற்றம் காணப்படும். மே2,3நெருப்புத்தொழில்,காவல் துறை,இராணுவம் சார்ந்தவர்கள், இணைய தளங்களை நடத்துபவர்கள்,மின்சாரத் துறையை சார்ந்தவர்கள், மின்சார சம்பந்தமான பொருட்களை விற்பனைகளைச் செய்வோர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள். வெகு தூரப் பயணங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் சென்று வருவது நல்லது.பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து நல்ல சூழ் நிலைகள் காணப்படும்.
பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்ப
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-முருகன் வழிபாடு செய்து வரவும்.
விருச்சிகம்
8.விருச்சிகம்:-விருச்சிகராசி அன்பர்களே சனி நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்27,28புதிய வீடுகளை வாங்கப் போட்ட திட்டங்களுக்காக வங்கிகளில் எதிர் பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைக்கக் கூடிய காலமாகும்.நீண்ட நாட்களாக தடை பட்டு வந்த சகோதர சகோதரிகளின் திருமண காரியங்களில் வெற்றி அடைவீர்கள்.ஒரு சிலருக்கு புதிய வீடு மாற்றம் ஏற்படலாம். ஏப்ரல் உறவினர்களின் வரவால் பொருள் வரவும் மனச் சந்தோசமும் உண்டாகும். புதியகடன் வாங்குவதற்காக முயற்சிப்பீர்கள்.ஏப்ரல்29,30மே1 சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.உத்தியோகத் துறையினர்களுக்கு பதவி உயர்வுகள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவுகள் நிரம்ப உண்டாகும்.விவசாயம் செய்வோர்களுக்கு நல்ல விளைச்சலும்,லாபமும் கிடைக்கும். தோல் சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள், பழைய இரும்பு வியாபாரிகள்,சாயப் பவுடர் தொழிற் சாலைகளை நடத்துபவர்கள், விஞ்ஞானத் துறை சார்ந்தவர்கள்,ஆசிரம வாசிகள், கழிவுப் பொருள்களின் வியாபாரிகள்,கோர்ட்டுகளில் பணி செய்வோர்கள்,தரகு மற்றும் வட்டித் தொழிற் செய்வோர்கள்,மீன், முட்டை,மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,அணுஆராய்ச்சி செய்பவர்கள்ஆகியோர்கள் லாபம் அடைவார்கள்.மே2உடல் நிலையில் இருந்து வந்த நாட்பட்ட நோய்கள் நீங்கி மன நிம்மதி உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் இல்லை.பெண்கள் விசயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நன்று.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-4
இராசியான நிறம்:-கருப்பு
இராசியான திசை:-வடமேற்கு
புரிகாரம்:-அம்மன் மற்றும் பிதுர் வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.
தனுசு
9.தநுசு:-தநுசுராசி அன்பர்களே வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்27,28,29 குடும்பத்தில் தடை பட்டிருந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். உடல் நிலையில் கண் காதுகளில் மிகவும் கவனமுடன் இருத்தல் நல்லதாகும்.விட்டுப் போன கணவன் மனைவி உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. தண்ணீர்,
கூல்டிரிங்ஸ்,திரவ சம்பந்தமான பொருள் வியாபாரிகள்,பூஜைப் பொருள் வியாபாரிகள், மருந்து கம்பெனி நடத்துபவர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள், ஜவுளி, நூல் வியாபாரிகள், பூஜைப் பொருட்களின் வியாபாரிகள்,கப்பல் பணி செய்பவர்கள்,உப்பு உற வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.ஏப்ரல்30மே1தந்தை மகன் உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.பல காலமாகத் தீராத நோய்களுக்கு புதிய மருத்துவர்களின் உதவியால் நோய் நீங்கும். திடீர் அதிர்~;டம் மூலம் எதிர் பாராத தனவரவு உண்டாகும்.மகான்களின் நல்லாசிகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள். நண்பர்களால் எதிர் பார்த்த ஆதாயம் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.மே2புதிய தொழில் ஆரம்பம் செய்வதற்காக வங்கிகள் மூலம் நீண்ட காலமாக எதிர் பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.காதல் சம்பந்தமான விசயங்களில் பெண்களால் அவப் பெயர்கள் வரக் கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் பழகுதல் நல்லது. பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு 
பரிகாரம்:-அம்மன் வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.
மகரம்
10.மகரம்:-மகரராசி அன்பர்களே கேது நன்மை தரும் கிரகமாகும்..ஏப்ரல்27,28நெருப்பத் தொழிற் செய்வோர்கள்.கேஸ்,வெல்டிங் போன்ற வியாபாரிகள்,காவல் துறை,ராணுவம் சார்ந்தவர்கள், தீயணைப்பு துறையைச் சேர்ந்தவர்கள்,காரமான உணவுப் பொருள் வியாபாரிகள், நிலக்கரி வியாபாரம் செய்பவர்கள்,விறகு வியாபாரிகள்,மசால் பொடிகளை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள்.ஏப்ரல்29;,30 உடல் நிலையில் வாயு மற்றும் வாதம் ஆகிய தொல்லைகள் வந்து போகும்.யாத்திரைகளில் மிகுந்த கவனமுடன் சென்று வருதல் நல்லதாகும்.திருமண 
விசயங்களுக்காக முயற்சி செய்யலாம்.பிள்ளைகளுக்கு எதிர் பார்த்து வந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.கணவன் மனைவி உறவில் விரிசல்களும் வீண் மனக் குழப்பங்களும் வந்து போகும்.மே1,2,3நீண்ட நாட்களாக வராத பணம் திரும்பக் கை வந்து சேரக் கூடிய காலமாகும்.உறவினர்களால் வீண் பொருட் செலவுகள் உண்டாகும்.மற்றவர்களை நம்பிப் பணம் பொருள் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். அநாதைகளுக்கு உதவுவதில் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.வெகு காலமாக நினைத்துக்கொண்டு இருந்த கூட்டுத் தொழில் முயற்சிகளைத் தொடங்கினால் மிகவும் நல்ல பலன்கள் கிடைக்கும். புதிதாக வீடு, வாகனம் மற்றும் நில புலன்கள் வாங்க வாய்ப்பு உள்ள காலமாகும்.
பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-முருகன் வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.
கும்பம்
11.கும்பம்:-கும்பராசி அன்பர்களே செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்27,28 குடும்பச் சொத்துக்கள் போன்ற விசயத்தில் நல்ல தீர்ப்புகளை எதிர் பார்க்கலாம். உடம்பில் உ~;ணம்,சுரம் போன்ற உபாதைகள் வந்து போகும். தந்தை மகன் உறவில் சிறிய கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.உடம்பில் வாயு மற்றும் வயிறு ஆகிய உபாதைகள் வந்து போகும். குடும்பத்தில் தடை பட்டு வந்த சகோதர சகோதரிகளின் திருமணம் போன்ற சுப காரியங்கள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது.ஏப்ரல்29,30 கொடுக்க வேண்டிய பழைய கடன்களைக் கொடுத்துப் பதிய கடன்களை வாங்கத் திட்டம் போடுவீர்கள் விவசாயம் செய்வோர்கள்,
 அரசியல் வாதிகள், கலைத் துறையினர்கள்,அணு ஆராய்ச்சித் துறையைச் சார்ந்தவர்கள்,கழிவுப் பொருள்களின் வியாபாரிகள்,அடிமைத் தொழிற் செய்வோர்கள்,மீன் முட்டை மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,துப்புரவுப் பணிகளைச் செய்பவர்கள் ஆகியோர்கள் நல்ல ஆதாயங்களை அடைவார்கள்.மே1,2,3அரசு சம்பந்தமான வழக்கு விசயங்களில் வெகு காலமாக எதிர் பார்த்து இருந்து வந்த நல்ல முடிவுகள் கிடைக்கும். பொது நலக் காரியங்களுக்காக மிகுந்த அக்கரையுடன் செயல் பட்டு நற் பெயர்,புகழ் எடுப்பீர்கள்.சேர்மார்க்கெட் மற்றும் தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடு படுவது நல்லது..பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-7
இராசியான நிறம்:-கருஞ்சிகப்பு
இராசியான திசை:-வடமேற்கு 
பரிகாரம்:-விநாயகர் வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.
மீனம்
12.மீனம்:-மீனராசி அன்பர்களே சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்27,28,29 பூபழம், பூஜைப் பொருள் வியாபாரிகள்,இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள்,கம்யுட்டர் துறையை சார்ந்தவர்கள்,ஆலயப் பணி செய்வோர்கள், அற நிலையத் துறை சார்ந்தவர்கள்,அநாதை ஆசிரமங்களை நடத்துபவர்கள், மடாதிபதிகள், கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோர்கள் மிகவும் நற் பலன்களை அடைய வாய்ப்புகள் உள்ளது.ஏப்ரல்30மே1சொத்து சம்பந்தமாகிய வழக்கு விசயங்களில் எதிர் பார்த்த முடிவுகள் கிடைக்கச் சற்று கால தாமதம் ஆகலாம்.வீடு நிலம் வாங்குவது போன்ற முயற்சிகளில் அரசு சம்பந்தமாக எதிர் பார்த்து வந்த 
உதவித் தொகைகள் கிடைக்கும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி சுமூகமான சூழல் உருவாகும்.காதல் விசயத்தில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நல்லது. வங்கிகளால் எதிர் பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்கும். சம்பந்தம் இல்லாத நபர்களால் எதிர் பாராத தன வரவுகள் உண்டாகும். வீட்டைத் திருத்திக் கட்டுவதில் மிகுந்த அக்கரையடன் திட்டம் போடுவீர்கள்.
மே2 யாத்திரையில் மிகுந்த கவனமுடன் பயணம் செய்து வருவது நல்லதாகும்.உற்றார் உறவினர்களின் வருகையால் பொருட் செலவுகள் உண்டாகலாம்.புதிய நண்பர்களின் சேர்க்கையால் செய்யாத குற்றங்களுக்காக காரணமற்ற வீண் பிரச்சனைகள் வந்து சேரும் என்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
புரிகாரம்:-சிவ வழிபாடு செய்யவும்...

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மறைக்கப்படும் வேற்று கிரகவாசிகள்! (காணொளி இணைப்பு)

வேற்று கிரகவாசிகள் ஆயிரகணக்கான ஆண்டுகளாக நமது கிரகத்திற்கு வருவதாக கனடா நாட்டின் முன்னாள் பாதுகாப்பு துறை மந்திரி பால் ஹெல்யர் தெரிவித்துள்ளார். வேற்றுகிரக வாசிகள் தொடர்பான சந்தேகங்கள் நீடித்து வரும் நிலையில், இன்னும் 25 ஆண்டுகளில் நாம் அவர்களை நேரில் சந்திக்கலாம் என சேத் ஷோஸ்டாக் விஞ்ஞானி தெரிவித்துள்ளார். மேலும், வேற்று கிரக வாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது என்றும், ஆனால் நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம் தான் எனவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் கனடா நாட்டின் முன்னாள் பாதுகாப்பு துறை மந்திரி பால் ஹெல்யர் கூறுகையில், உலக அரசுகள் வேற்று கிரகவாசிகளை ரகசிய மறைவிடத்தில் வைத்து கண்காணித்து வருகிறார்கள். வேற்று கிரகவாசிகளின் வாழ்க்கையை மனித இனத்திடம் இருந்து மறைக்கிறார்கள். குறைந்தது 4 வகையான வேற்று கிரகவாசிகள் மற்றும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள் பூமிக்கு வந்து இருக்கலாம். பல செய்தி ஊடகங்கள் இந்த விடயங்களை தொடுவது இல்லை. சிலர் வெகுஜன பார்வை கிடைக்கும் என நம்பும் செய்திகளையே தேடுகிறார்கள். மிஸ்டர் ஜனாதிபதி, மிஸ்டர் பிரதமர் எங்களுக்கு உண்மை வேண்டும். நமக்கு இப்போது அது தேவை ஏனெனில் அது நமது வாழ்க்கையை பாதிக்கும் என்று கூறியுள்ளார். வேடிக்கையான இந்த கூற்றுகள் குறித்து ஹெல்யர் கேள்வி எழுப்புவது இது முதன்முறையல்ல. இவர் 2005 ஆம் ஆண்டு முதலே வேற்று கிரகவாசிகள் குறித்து பேச ஆரம்பித்தார். பால் ஹெல்யர் (91), கனடா நாட்டின் முன்னாள் பாதுகாப்பு துறை மந்திரியாக 1963 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரை இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 24 ஏப்ரல், 2015

வெடிமருந்துடன் நீர்வேலி பகுதியில் இருவர் கைது

யாழ். நீர்வேலி பகுதியில் தடை செய்யப்பட்ட இறப்பர் வெடிமருந்துகளை வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்களை கைது செய்ததாக அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்று தெரிவித்தார்.
சந்தேகநபர்களிடமிருந்து 9 கிலோ 416 கிராம் இறப்பர் வெடிமருந்து கைப்பற்றப்பட்டது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அப்பகுதிக்கு சென்ற பொலிஸார், கூலித் தொழிலாளியாக பணிபுரியும் சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்ததுடன், நான்கு பைகளில் இருந்த வெடிமருந்துகளையும் கைபற்றியதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 22 ஏப்ரல், 2015

சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்: இளையன் சிறை !!!!

 யாழ்.சிறுப்பிட்டிப் பகுதியில் வீட்டில் தனித்திருந்த சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுக் கைதான சந்தேகநபரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் பெண்கள், சிறுவர் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (19.04.2015) உத்தரவிட்டார்.
கடந்த சனிக்கிழமை வீட்டில் யாருமில்லாத சமயம் வீட்டில் தனித்திருந்த சிறுமியை இளைஞரொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தினார்.
இது குறித்துச் சிறுமியின் பெற்றோர் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவரைக் கைது செய்து பொலிஸார் விசாரணை நடாத்தினர்.
குறித்த இளைஞரை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் அதே தினத்தில் சிறுவர் பெண்கள் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதன் போதே குறித்த இளைஞரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 20 ஏப்ரல், 2015

இயந்திரத்தில் திடீர் தீ: பல லட்சம் ரூபாய் சாம்பல்!

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் ஏ.டி.எம். இயந்திரத்தில் தீப்பிடித்ததில், அதில் இருந்த பல லட்ச ரூபாய் எரிந்து நாசமானது.
ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூரில் சன்ட்போல் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. இன்று காலை சுமார் 10.30 மணியளவில் இந்த ஏ.டி.எம். மையத்தில் திடீரென தீப்பிடித்தது.
அக்கம்பக்கத்தார் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர். ஆனால், அதற்குள்ளாக ஏ.எடி.எம். இயந்திரம் அதிலிருந்த பணத்தோடு முழுவதும் தீக்கிரையானது.
மின்கசிவு காரணமாக இந்த விபத்து 
நிகழ்ந்திருக்கலாம் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீவிபத்தில் எரிந்து போன பணத்தின் அளவு குறித்து வங்கி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>